KAILASA Library/Hindu Holocaust/எனக்கு முழு அதிகாரம் உள்ளது: மதுரை ஆதீனம்Sign in
Hindu Holocaust

எனக்கு முழு அதிகாரம் உள்ளது: மதுரை ஆதீனம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மதுரை, ஏப்.29: புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார்.

எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்த தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறி னார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரி லுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன்.

அங்கு நித்யானந்தரின் போதனைக் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரி டம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்னை (வீசிங்) இருந் தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த் திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்ப தாக உணருகிறேன்.

உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை - மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292- வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில் கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடை பெறும். 151 நாடுகளில் உள்ள நித்யானந்த பீடங்கள் 292 வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.

இந்து அமைப்புகள் அதிருப்தி

மதுரை, ஏப். 29: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகி கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார்.

அதையடுத்து, சண்டி கேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந் தித்தனர்.

புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோ சிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யா

Dinamani_06.05.2012_PG4_Madurai Aadina Madathil Varumanavari

Dinamani - 06/05/2012 - PG 4