மதுரை ஆதீனம் பொறுப்பை ஏற்றார் நித்யானந்தர்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மதுரை, ஏப்29: மதுரை ஆதீனம் மடத்தில்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது
மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசி
ரம நிறுவனர் நித்யானந்தர் ஞாயிற்றுக்கி
ழமை பொறுப்பேற்றார்.
அவர் இனிமேல் ‘மதுரை ஆதீனம் 293-
வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரம
ஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த
தேசிக பரமாசாரிய சுவாமிகள்' என்றழைக்
கப்படுவார் என தற்போதைய ஆதீனம்
அறிவித்தார்.
பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்
தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யா
னந்தா பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்
னிட்டு பிரம்மாண்ட அலங்கார ஏற்பாடு
கள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின்
இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு
வசதியுடன் கிரானைட் கல்களால் நவீன
முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
மடத்தின் நுழைவுவாயில் முதல்
அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிர
மத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர்.
மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்
கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.
மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக் கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்ட பத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட் டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளி யேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர்.
ஹெட்ஃபோனுடன் கூடிய வயர்லெஸ்
மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாத
னங்கள் சரிநூராக மதுரை ஆதீனமும், நித்
யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்க
ளில் அமர்ந்தனர்.
முறைப்படி நித்யானந்தாவை 293-வது
மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி
அவர், ‘மதுரை ஆதீனம் 293-வது குருமகா
சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யா
னந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சா
ரிய சுவாமிகள்' என அழைக்கப்படுவார்
என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார்.
பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீ
ணமாக நியமிப்பதற்கு அடையாளமாக,
அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணி
யும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்
போதைய ஆதீனம் அணிவித்தார்.
மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு
ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர்
மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்
கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை
மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்
கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார்.
மதுரை ஆதீன மடத்துக்குட்பட்ட பகு
தியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்
பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்ப
டும் என்றும் அவர் கூறினார்.
‘நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன
மடமும் இணைந்து செயல்படும். இந்த
மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகா
ரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்
றங்களை, பணிகளைச் செய்யலாம். நான்
மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்
றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது
வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும்
இணைந்து மேற்கொள்வோம்' என்றார்
மதுரை ஆதீனம்.

ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை,
கிரீடங்களை நித்யானந்தாவுக்கு அணிவிக்கும்
தற்போதைய மதுரை ஆதீனம்.