நித்யானந்தாவை கைது செய்ய போலீஸ் தனிப்படை நியமனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தகவல்
பெங்களூர், மார்ச் 31: தலை
மறைவாக இருக்கும் சாமி
யார் நித்யானந்தாவை
கைது செய்ய போலீஸ்
அதிகாரிகள் நியமிக்கப்பட்
டுள்ளனர் என்று கர்நாடக
உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.
போலீஸ் கண்காணிப்பா
ளர் கே.என்.யோகப்பா
தெரிவித்தார். இதற்கிடை
யில், அவர் இமயமலைக்கு
செல்லப் போவதாக தகவல்
கள் வெளியாகியுள்ளன.
சாமியார் நித்யானந்தா,
நடிகை ரஞ்சிதாவுடன்
நெருக்கமாக இருக்கும்
வீடியோ காட்சிகள் சம்பத்
தில் வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து தலை
மறைவான நித்யானந்தா
இதுவரையில் வெளியில்
வரவில்லை. அவர் மீதான
புகார்கள் அனைத்தும்
பெங்களூரில் நடந்துள்ள
தால், தமிழகத்தில் அவர்
மீது வந்த புகார்களை பெங்
களூர் போலீசாருக்கு மாற்
றினர்.
பெங்களூரில் சி.ஐ.டி.
போலீசார் நித்யானந்தா
தொடர்பான வழக்கை
விசாரித்து வருகின்றனர்.
நித்யானந்தா தாக்கல்
செய்த முன்ஜாமீன் மனுவை
உயர் நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.
இந்நி
லையில்,
உயர் நீதி
மன்றத்
தில் நீதி
பதி அரலி
நாகராஜ்
முன் னி
லையில் நேற்று நித்யா
னந்தா மீதான வழக்கு விசா
ரணைக்கு வந்தது.
அப்போது, சி.ஐ.டி. போலீஸ்
கண்காணிப்பாளர் கே.
என்.யோகப்பா ஆஜராகி
கூறுகையில், "நித்யானந்தா
மீது 2 குற்ற வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவர் தலைம
றைவாகவே உள்ளார்.
அவரை பிடிப்பதற்காக 2
போலீஸ் அதிகாரிகள் நிய
மிக்கப்பட்டுள்ளனர்" என்று
கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதி
பதி கூறுகையில், "இந்த
வழக்கில் அரசு பிளீடர்
தனது தரப்பு ஆட்சேபங்
களை ஏப்ரல் 6ம் தேதி
தாக்கல் செய்ய வேண்டும்"
என்று கூறி வழக்கை ஒத்தி
வைத்தார்.
பதவி விலகல்: இதற்கி டையே, தலைமறைவாக
விசாரணை தொடரும்
நித்யானந்தா தொடர்பான வழக்குகளை விசா ரித்து வரும் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி கே.என்.யோகப்பா கூறியதாவது:
நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்கள் சி.ஐ.டி. போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவித்த முதல் நாளே (நேற்று) தமிழகத்தில் இருந்து 10 புகா ரும், கர்நாடகாவில் இருந்து சில புகார்களும் வந்துள் ளன. இதனிடையே ஆசிரம பொறுப்பில் இருந்து தான் விலகி விடுவதாக நித்யானந்தா அறிவித்துள்ளார். அவர் எதிலிருந்து விலகினாலும், அவர் மீதான விசாரணை தொடரும். இவ்வாறு யோகப்பா கூறினார்.

இருக்கும் நித்யானந்தா,
பிடதி தியான பீடத்தின்
தலைமை பொறுப்பில்
இருந்து விலகுவதாக 4வது
முறையாக வீடியோவில்
தோன்றி அறிவித்துள்ளார்.
தியான பீட இணையதள
வீடியோ காட்சியில் அவர்
கூறியிருப்பதாவது:
கடந்த 3 வார காலமாக
என்னைப் பற்றியும், தியான
பீடம் பற்றியும் வந்து
கொண்டிருக்கின்ற
தகவல்களால் மன உளைச்
சலுக்கு ஆளாகி ஹிந்து
வார் சென்று மதத்
தலைவர்கள், ஆன்மிகவாதி
கள், துறவிகளுடன் ஆலோ
சனை நடத்தினேன்.
தியான பீடத்தில்
இருந்து விலக முடிவு செய்
துள்ளேன்.
தியான பீடம்
தொடர்பான அனைத்து
அறக்கட்டளைகளின்
பொறுப்புகளில் இருந்தும்
நான் விலகிக் கொள்கிறேன்.
தேவைப்பட்டால் திரும்பி
வந்து கேள்விகளுக்கு பதில்
அளிப்பேன்.
இவ்வாறு நித்யானந்தா கூறியுள்ளார்.
தியான பீடத்தில்
இருந்து விலகியதைத்
தொடர்ந்து அவர் இமயம
லைக்கு செல்லப் போவதாக
பிடதி ஆசிரம வட்டாரங்
கள் தெரிவித்துள்ளன.
DINAKARAN 22 Apr 2010 Pg 1 Salem தினகரன் - 22-4-2010-ஏப்ரல்-சேலம்