மனிதர்களை மனிதர்களாக
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மதியுங்கள்
✦ பலரும் இயல்புக்கு மாறாக, தாங்கள்
கற்பனை செய்து வைத்திருக்கிறபடி
தான் ஆட்களைத் தேடுகிறார்கள்.
✦ கற்பனையில் இருக்கும் தன் எதிர்
கால மனைவியின் அழகுக்கும்,
அன்பிற்கும், நிஜத்தில் வந்திருக்கும்
மனைவியின் அழகுக்கும், அன்பிற்கும்
பெரும்பாலும் சம்பந்தமே இருப்பது
இல்லை.
அதேபோல் தனது கற்பனையில்
இருக்கும் எதிர்கால கணவனின்
பண்பிற்கும், பாசத்திற்கும் நிஜத்தில்
வந்திருக்கும் கணவனின் பண்பிற்கும்,
பாசத்திற்கும் பெரும்பாலும் சம்பந்தமே
இருப்பது இல்லை. காரணம் இயல்புக்கு
மீறிய அதீத கற்பனைகள்தான்.
✧ தன்னைப் போன்ற எல்லாவிதமான
உடல் மன தடுமாற்றங்கள் நிறைந்த
ஒரு பெண்தான், தனக்கு வரப்
போகும் மனைவியாக இருப்பதற்
கான வாய்ப்பு அதிகம் என்ற நிஜம்,
- அதீத கற்பனை என்ற கரிப்புகையால் மறைக்கப்பட்டு விடுகிறது.
✧ கற்பனையில் தங்களுக்கு மகாராணியை எதிர்பார்ப்பவர்கள்...
இயல்பாகவே தங்களை மகாராஜாக்
களாக கற்பனை செய்து கொள்வதும்,
அவர்களின் மனதின் அடி ஆழத்தில்
கர்வம் உருவாகுவதும் இயல்பு.
இந்த கர்வம்தான் மலர் போன்ற
பெண்மையை மதிக்கத் தவறி மிதிக்கத்
தூண்டுகிறது.
தெளிவென்னும் குழந்தை
✧ குழப்பத்தை நீங்கள் வெறுக்கத்
தேவையில்லை; நீங்கள் வளரு
கிறீர்கள் என்பதற்கான அறிகுறி
தான் குழப்பம் என்பதைப் புரிந்து
கொள்ளுங்கள்.
✧ குழம்புவதில் தவறில்லை; குழம்பிக் கொண்டே இருப்பதுதான் தவறு.
✧ நீங்கள் குழம்புவது நியாயம்; அடுத்த வர்களைக் குழப்புவது அநியாயம்.
✧ இன்றைய குழப்பம் நாளைய தெளிவு.
✧ எது சரி - எது தவறு என்ற தெளிவை
ஏற்படுத்தும் மனதின் செயல்முறை
தான் குழப்பம்.
மேற்சொன்ன வரிகளை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, மனதில் தக்க
✧ தெளிவு என்ற குழந்தை நம்முள்
பிறக்க நாம் படும்பாடுதான் குழப்பம்.
குழப்பத்திற்கு பயந்து குழப்பத்தைக்
கலைக்க நீங்கள் முயற்சி செய்வதால்
எவ்வளவு முறை தெளிவைப் பிறக்க
விடாமல் கருவிலேயே கலைத்
திருக்கிறோம் என்பதைக் கணக்
கிட்டுக் கொள்ளுங்கள்.
குழப்பத்தை வரவேறுங்கள்!
◇ ஒவ்வொரு இறை சந்நிதியும் உலகின்
சிறு, சிறு சக்தி நிலையங்கள் (Energy
hours).
மனம் திறந்திருந்தால், அதாவது
திறந்த மனதோடு இருந்தால் இயற்கை
விதிப்படி, சக்தி குறைவாக இருக்கும்
நம்முள் தேவையான அளவு சக்தி வந்து
நிரப்பி விடும்.
இதனால்தான் கோயிலுக்கு செல்வது பலருக்கு மன நிறைவைத் தருகிறது.
குரு-சிஷ்யா !
✦ வா !
அருகில் வா !
என் அருகில் வா !
என்னோடு கலந்துவிட வா !
நான் நீயாகிவிட நீ நானாகி விட வா !
- என்ற நிலையில் உங்களுக்குள் இருக்கும் ஆத்மா காத்துக்கொண்டே இருக்கிறது. அழைப்பை ஏற்பதும், உதாசீனப்படுத்துவதும் உங்கள் கையில்.
✦ உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்
ஆத்மாவை நீங்கள் திரும்பிப் பார்க்க,
நீங்கள் ஆத்மாவில் கலக்க உதவுவது
தான் ஒரு குருவின் பணி.
✦ குருவின் பணியை முழுமையாக அனுபவிப்பவன் சிஷ்யன். அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.
✧ நாம் யார், எப்படிப்பட்டவர்கள்
என்று நாம் நினைப்பதை விட
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்பதற்குத்தான்
அதிக மரியாதை கொடுக்கிறோம்.
இது உங்களை நீங்களே அவமரியாதை
செய்வதற்குச் சமம்.
✧ உங்களை நீங்களே அங்கீகரிக்க ஆரம்பியுங்கள். பிரச்சினை தீர்ந்தது.
ஞானம் அடைவதற்கு முதல்படி...
✧ சிரிப்பு - உங்களுக்கு மருந்து மற்றவர்களுக்கு விருந்து.
✧ சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்
போன முகத்திற்கும் வித்தியாசங்கள்
மிகக் குறைவு.
✧ சிரிப்பு - உடல், மனம், உயிர் என்ற
மூன்றும் சீராய இயங்கி கொண்டி
ருக்கிறது என்பதற்கான அறிகுறி.
✧ சிரிப்பது, சிரிக்க வைப்பது என்பது
எல்லோராலும் முடிந்துவிடக் கூடிய
சாதாரண விஷயம் அல்ல.
✧ சிரிக்கத் தெரியாத சிலர், அது
ஒன்றும் சீரியஸான விஷயம்
இல்லை என்பார்கள் - இது தவறு.
தெளிவற்ற தெளிவு
✧ நலிவடைந்த மனதை பெற்றவன்
வாழ்வின் எதிர்பாராத திடீர், திடீர்
திருப்பங்களில் புகுந்து வெளிவருவது
கடினம்.
நலிவடைந்த மனதுதான் தெளிவற்ற தெளிவு.
✧ வாழ்க்கையின் நெளிவு, சுழிவுகளில்
புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும்
தெளிவு என்பது மிக அத்தியாவசிய
மான தேவைகளில் ஒன்று.
✧ தெளிவு மலிவானதல்ல - ஒரு
சில புத்தங்களைப் படித்தவுடன்
கிடைப்பதற்கு !
பல தனி மனித அனுபவங்களின்
தொகுப்புதான் தெளிவை உண்டு
பண்ணும்.
எங்கே நிம்மதி ?
(கேள்வியல்ல - வேள்வி)
◇ பாதுகாப்பின்மையை (Insecurity)
எதிர்த்தே வாழப் பழகியதின் பக்க
விளைவாக மனிதனைத் தொற்றிக்
கொண்ட குணம்தான் 'பற்றுதல்'.
◇ நிஜப்பற்று நிம்மதியையும், சந்தோஷத் தையும் தரும்.
மனப்பற்று நிம்மதியையும், சந்தோஷத் தையும் திருடும்.
◇ மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது
- மனப் பற்று.
மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன்னுயிர் போலப் பாவிப்பது
- நிஜப்பற்று.
◇ மனப்பற்று : உண்மையான ஈடுபாடில்லாமல்,
பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பர
மாக உங்களுடைய பொருள்களை
விரயம் செய்வது,
பொறுமையின்மையால், வெறுப்பால்,
சலிப்பால், கர்வத்தால் உங்களுடைய
சொந்தங்களையும், நண்பர்களையும்
முழுமையாகப் புரிந்துகொள்ளாமல்
கடமைக்காக வாழ்வதுதான் மனப்
பற்று.
இது மனநிம்மதியைக் குலைத்து விடும்.
உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள் பற்றுதல்தான்.
வெளியே வாருங்கள் பிடிவாதத்தை விட்டு...
✧ பிடிவாதம் பக்கவாதத்தை விட மோசமானது.
✧ பக்கவாதம் உடலை மாத்திரம்தான்
முடமாக்கும். பிடிவாதம் உடல், மனம்
என்ற இரண்டையும் முடமாக்கும்.
✧ மனிதனுக்குள் ஒளிந்து கொண்டு,
அவ்வப்போது வெளியில் வந்து
மற்றவர்களையும் அந்த மனிதனையும்
நாசம் செய்யும் அரக்கன்தான்
‘பிடிவாதம்’.
✧ பிடிவாதம் - உங்கள் மனதை பிடித்துக் கொண்ட வாதம்.
✧ “நான் யார் ? நான் எவ்வளவு பெரிய ஆள் ? என் கவுரவம், என் கொள்கை”
✧ வாழ்வே மாயம் :
'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால்
தத்தளிக்கும் சராசரி மனிதன்
கூறினால் அது பொய். வாழ்க்கையை
அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும்
சப்பைக் கட்டு.
'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால்
எதிர்க்கொள்ளும் தெரியசாலி கூறினால்
அது உண்மை. வாழ்க்கையின் வலி
களை அனுபவித்து வாழ்வைப்
புரிந்து கொள்வதால் பிறந்த தெளிவான
கருத்து.
'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால்
பாதிக்கப்படாத நிலையை அடைந்த
ஞானி கூறினால், அது சத்தியம்.
வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை
முழுமையாக அனுபவித்து அனுபூதி
அடைந்ததின் வெளிப்பாடு.
✧ 'வாழ்வே மாயம்' - என்று ஒரு
ஞானி கூறியதை ஒரு சராசரி மனிதன்
100% தவறாகப் புரிந்து கொள்வான்.
அவனது தத்தளிக்கும் வாழ்க்கையை
நியாயப்படுத்திக் கொள்ள ஒரு கருத்தாக
பயன்படுத்திக் கொள்வான்.
அவ்வளவே, இதுவே சத்தியத்தை
மாற்றிப் புரிந்து கொண்டு சத்தியத்தை
பொய்யாக்குவது.
இதுதான் மாயைகளிலேயே மிகப் பெரிய மாயை.
✧ உரையாடலில் வெட்டிப் பேச்சை அனுமதிப்பது...
‘பிரேக்’ இல்லாத காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது!
✧ வெட்டிப் பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது.
பேச்சின் போக்கு கட்டுப்பாடற்று
மனதின் இஷ்டப்படி தொடர்ந்து வந்து
கொண்டே இருக்கும்.
இது பேசுபவர், கேட்பவர் என்ற இருவரையுமே பாதிக்கும்.
✧ ‘வெட்டிப் பேச்சில்’ அழியும் நேரம்
ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்
பட்டால் இந்தியா தானாகவே
வல்லரசாக மாறிவிடும்.
கவலை ! சந்தோஷம் ! ஆனந்தம் !
✧ சந்தோஷம் என்ற ஒளி இல்லாத
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடி
யையும் கவலை என்ற இருள் வந்து
பற்றிக்கொள்ளும்.
✧ சந்தோஷம்,
கவலை,
- என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.
✧ சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை.
கவலையைக் கூட,
இந்த நேரத்தில் வரும்,
இவ்வளவு நேரம் இருக்கும் என்று பலரால் கூற முடியும்.