வேண்டுதல்கள் நிறைவேறுவது எப்படி?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கோயில்களுக்கு சக்தி கிடைத்தது எப்படி?
✧ ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ஒரு 'ஸ்தலத்தில்' அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இதற்கு பல உதாரணங்களை நம்மால் தெரிந்துக் கொள்ள முடியும்.
✧ பழனியில் திருக்கோயிலை உருவாக்கி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் போகர் என்ற ஞானி.
✧ தஞ்சாவூரில் கரூரார், திருவண்ணாமலையின் அக்னி ஸ்தலத்தை
முகமது நபியால் வெளிப்படுத்தப்
பட்ட தெய்வ சக்திதான் காரணம்.
அங்கு தொடர்ந்து வரும் சக்தியால்
தான் மக்கள் பயன் பெற்று, திருப்தி
அடைந்து மீண்டும் மீண்டும் செல்
கிறார்கள்.
வேளாங்கன்னியில் மக்கள் கூட்டம்
அலை மோதுவதற்கும் அங்கே
இருக்கும் ஒரு தெய்வ சக்திதான்
காரணம்.
✦ தெய்வஸ்தலங்களில் நம் வேண்டு
தல்கள் நிறைவேற்றப்படுவதற்கு
இரண்டு முக்கிய காரணங்கள்,
- உங்களின் திறந்த மனதும், பக்தியும்.
- அந்த இடத்தில் இருக்கும் தெய்வ சக்தி.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு
இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு
ஏற்படும்.
ஞானிகளை நம்பாதே!
✧ நம்பினால் 100% முழுமையாக
நம்புங்கள், நம்ப முடியாவிட்டால்,
ஞானிகளின் கூற்றுக்களை 100%
முழுமையாக நம்பாதீர்கள்.
✧ ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள்
அனைத்தும் முக்காலத்திலும் மாறாத
சத்தியங்கள்.
ஒரு ஞானியின் கூற்றுக்களில்
நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும்
போது -
1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு)
பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு
ஞானியிடம் இருந்து எடுத்துக் கொள்ளும்
போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனி
யிடுகிறீர்கள்.
ஞானிகளை நம்பாதே!
✧ நம்பினால் 100% முழுமையாக
நம்புங்கள், நம்ப முடியாவிட்டால்,
ஞானிகளின் கூற்றுக்களை 100%
முழுமையாக நம்பாதீர்கள்.
✧ ஞானம் பற்றிய ஞானக் கூற்றுக்கள்
அனைத்தும் முக்காலத்திலும் மாறாத
சத்தியங்கள்.
ஒரு ஞானியின் கூற்றுக்களில்
நீங்கள் சிலவற்றை மாத்திரம் நம்பும்
போது -
1. நீங்கள் உங்களுக்கு (அகங்காரத்திற்கு)
பிடித்த விஷயங்களை மட்டும் ஒரு
ஞானியிடம் இருந்து எடுத்துக் கொள்ளும்
போது உங்கள் அகங்காரத்திற்குத் தீனி
யிடுகிறீர்கள்.
2. காரணம், ஒரு ஞானி என்னதான்
சத்தியத்தைக் கூறினாலும் அதை நீங்கள்
உங்களின் மனத்தன்மையைப் பொறுத்தும்,
மனக் கண்ணோட்டத்தைப் பொறுத்தும்
அதை மனக்கருத்தாகத்தான் புரிந்து
கொள்வீர்கள்.
3. அரைகுறையாக ஒரு ஞானியின்
கருத்தை நம்பும் போது உங்கள் மனக்
குறைகள் உங்களுக்கு நிறை போல தெரிய
ஆரம்பிக்கும். அகங்காரம் உயிர் பெறும்.
4. ஞானியின் கூற்றை முழுமையாக
நம்பினால் மாத்திரமே சத்தியம், சத்தியமாக
உங்களை வந்து சேரும். இல்லையென்றால்
சத்தியம் சாதாரண மனக்கருத்தாகவே
உங்களுக்குள் நுழையும்.
5. உங்களுக்குப் பிடித்த கருத்துக்களை மட்டும் பெற்று அகங்காரத்தை வளர்க்க
கோபத்தை அடக்காதீர்கள்
✧ எவ்வளவு தேவையோ அதைவிடக் குறைந்த அளவே கோபப்படுங்கள்.
✧ கோபப்படுங்கள் என்று நான்
உங்களிடம் சொல்வது கண்டு ஆச்சரியப்
படாதீர்கள்.
கோபம் ஒரு மன உணர்வு.
உலக வாழ்க்கையில் அதற்கு ஒரு அர்த்தமும், தேவையும் இருக்கிறது.
ஆனால், அளவுக்கு மீறினால் அது தான் உங்கள் எமனாகவும் இருக்கும்.
✧ கோபத்தை அடக்கி வைக்கிற போது,
அது நம் மனசுக்குள் கிடந்து குமுறு
கிறது. வெளிவர முடியாத கோபம்
நம் உடலுக்குள் பலவிதமான
பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சாபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள
அதிகக் கோபத்திலிருந்து தப்பித்துக்
கொள்ளுங்கள்.
✧ கோபத்தை நீங்கள் தேவைப்படும்
போது பயன்படுத்துங்கள். சக்தியைச்
சேமியுங்கள். முக்தி நோக்கி நகர
ஆரம்பிப்பீர்கள்.
✧ 'அறிவு ஞானமாக வேண்டும்,
பதவி சேவையாக வேண்டும்,
பணம் பகிரப்பட வேண்டும்,
புகழ் ஜீரணிக்கப்பட வேண்டும்'
- இப்படி ஒருவர் வாழும் பட்சத்தில், இவை ஒரு மனிதனுள் இனிமையை அழைத்து வரும் தேவதைகளாக மாறிவிடும். இறுக் கத்தை அழைத்து வரும் புரோக்கர் களாக அவை இருக்க வாய்ப்பே இல்லை.
✧ இறுக்கத்தால் இறுகிப்போன முகத்
தசைகளுக்கும், உதடுகளுக்கும்
குதூகலமான சிரிப்பும், வாழ்வும்
பூரிப்பைத் தரும்.
✧ மன இறுக்கத்திலிருந்து வெளியே வர மிக எளிய வழி - நாம் நினைத்தபடி
படிப்பு ஒரு திறன்
✧ படிப்பு ஒரு கலை.
✧ வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாத
வரை படிப்பில் துடிப்பும், ஆர்வமும்
ஏற்படாது.
✧ படிப்பைச் சுற்றி சமுதாயம் உரு
-வாக்கும் கட்டாயப்படுத்தல்களும்,
கஷ்டங்களும்தான் படிப்பின் மீது
வெறுப்பை உண்டு பண்ணுகிறது.
✧ மனதில் வெறுப்போடு ஒரு ஓவியக்
கலையையோ, சிற்பக்கலையையோ
கற்றுக் கொள்வது கடினம்.
✧ வெறுப்போடு கற்றுக் கொள்ள
முயற்சித்தால் கலை கூட கவலை
யைத்தான் உண்டுபண்ணும். அது
சுமையாகத்தான் தெரியும். படிப்பு
சுமையாகத் தெரிவதின் சூட்சுமம் இது தான்.
✧ உண்மையான படிப்பு என்பது நீங்கள்
உங்களைப் புரிந்து கொள்வதற்காக
உதவும் ஒரு வழிமுறை.
✧ நன்றாகப் படிக்க முடியாமல் போன
தற்கு நீ பொறுப்பல்ல. ஆனால்
நன்றாகப் படிக்கப் போவதற்கு நீதான்
பொறுப்பு!
பிறந்தது முதல் பதினான்கு வயது
வரையிலான பகுதி வாழ்வில் சுதந்திரப்
பறவையாக ஆனந்தமாகத் திரியும் காலம்.
இந்த சுதந்திரம் சிறுவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் 'மறுக்கப் படுவதால்' அல்லது 'மறுக்கப்படுவதாக நினைத்துக் கொள்வதால்' - இழந்து விட்ட தாக நினைக்கும் சந்தோஷத்தை பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்து கொள்ள மனரீதியாக தயாராகிறார்கள். (இந்தத் தூண்டலுக்குக் காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுதந்திரமும், வாலிபத் துடிப்பும் தான்).
தங்களின் கவனம் சிதறுவதற்கான
அடிப்படை காரணங்களைப் புரிந்து
கொண்டால் போதும். படிப்பு தாண்டிய
விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை,
போலி என்று புரிந்துவிடும்.
உங்கள் விருப்பத்தில்தான் குறை இருக்கிறது.
குறை ஞாபகசக்தியில் அல்ல. விருப்பத்தின் அளவில் இருக்கிறது.
✧ படிப்பு ஒரு சுமை போல, இந்த
காலத்தில் ஆகிவிட்டதாலும், மனதைச்
சிதறடிப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள்
உருவாகிவிட்ட காரணத்தாலும் - நம்
மனம் நம்மிடம் இல்லை.
✧ பெரும்பாலும் நமது விருப்பம்
சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறிக்
கொண்டேயிருக்கும் விருப்பங்கள்
தான்.
இப்போது உங்களிடம் இருக்கும்
விருப்பங்களும், ஆசைகளும்
உங்களுடைய சொந்த விருப்பமாக
இருப்பதற்கு 99% வாய்ப்பு இல்லை.
ஆன்மீகம் - ஆனந்தம்
✧ ஆனந்தமயமான வாழ்க்கைக்குப் பெயர்தான் ஆன்மீக வாழ்க்கை.
✧ ஆனந்தமயமாக வாழ முடியாமல்
போனதற்கு மனிதன் கண்டுபிடித்த
புதுப் பெயர்தான் சாதாரண
வாழ்க்கை.
✧ ஆசை பலவாக இருந்தாலும்,
தேடுதலின் நோக்கம் ஒன்றுதான் -
நிம்மதி, ஆனந்தம்.
✧ வாழ்க்கையில் சாதனைகள் பல சாதித்த
பிறகு கிடைக்காத திருப்தியையும்,
சந்தோஷத்தையும் எளிதாக வழங்கும்
மார்க்கம்தான் ஆன்மீகம்.
பழக பழக்கிக்கொள்ளுங்கள்
✧ உலகையே நேசிக்கிறவன் என்று
பெருமை பேசுவது வெகு சுலபம்.
உண்மையில் ஒரே ஒருவரை
முழுமையாக நேசிப்பது - 'இமாலய
சாதனைக்கு' சமம்.
✧ மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம்
உங்களோடு நீங்கள் எப்படி இருக்
கிறீர்கள் என்பதைப் படம் பிடித்துக்
காட்டும்.
✧ தன் உடல், மனம், உயிரை முழுமை
யாக மதிப்பவனால்தான் பிறரை
முழுமையாக மதிக்க முடியும்.
✧ தன் உடல், மனம், உயிரை அரை
குறையாக மதிப்பவன் பிறரையும்
அரை குறையாகத்தான் மதிப்பான்.
✧ சாதாரணமாகப் பழகுவது என்பது
அசாதாரணமான ஒரு விஷயமாக மாறி
விட்டது, கொடுமையிலும் கொடுமை.
✧ நான் ! நான் ! எனது ! எனது ! என்று
குறுகிய வட்டத்தில் வாழும் வரை
குதூகலம் என்பதைக் கற்பனை
செய்வது கூடக் கடினம்தான்.
✧ இனிமையாக பழக பழக்கிக் கொள்
ளுங்கள் உங்களை நீங்களே! சுமுகமான
உறவுகள் சுலபமாக கிட்டி விடும்.
தான் உண்டு, தன் வேலை உண்டு
என்று இருப்பதற்கு மனிதனாக பிறக்க
வேண்டிய அவசியமில்லை. மிருகங்கள்
ஏற்கெனவே அப்படித்தானிருக்கின்றன.
✧ சுமுகமான மனித உறவுகளை
வளர்த்துக் கொள்வது சுக-வாழ்விற்
கான சுலபமான வழி.
பக்தி சக்தி
✧ பக்தி உணர்வு இல்லாமல் பெற்றவர்
களும் மற்றவர்களும் சொன்னார்களே!
என்பதற்காக கோயிலுக்கு கடமைக்
காக சென்று வந்தால்...
அவன் தன்னை ஆத்தீக வாதி என்று
கூறிக் கொண்டாலும் அவன் ஒரு
நாத்தீகவாதிதான்.
இப்படிப்பட்ட மனிதர்கள்...
பெயரளவில் ஆத்தீகவாதியாகவும்,
உணர்வளவில் நாத்தீக வாதியாகவும் இருப்பார்கள்.
✧ கோயிலுக்குச் சென்று பக்தியுணர்வோடு
தெய்வ சக்தியில் சிறிது நேரம் அமர்ந்
திருக்கும் போது - அங்கே இருக்கும்
பிரபஞ்ச செல்
◇ அனைத்து மதங்களின், அனைத்து ஆன்மீகப் பாதைகளின்
- எல்லா வழிபாட்டு முறைகளும், எல்லா தியான முறைகளும் உங்களுக்குள்ளிருக்கும் இறைசக்தியின் விஸ்வரூபத்தை உணரத்தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
◇ இரண்டே இரண்டு வகை மனிதர்கள் தான் சாத்தியம்.
கடவுளான மனிதன்.
மனிதனாக இருக்கும் கடவுள்.
◇ எங்கும், எதிலும் நிறைந்திருப்பவன் இறைவன்(GOD) - மெய்ஞான கூற்று.
எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி (Energy) - விஞ்ஞானக் கூற்று.
படித்த எந்த ஒரு மனிதனாலும்
இரண்டையும் பொருத்திப் பார்த்து
முடிவுக்கு வருவது எளிது.
✧ அதாவது, மெய்ஞ்ஞானம் 'சக்தியை'த் தான் இறைவன் என்று குறிப்பிடுகிறது.
விஞ்ஞானம் 'இறைவனை'த் தான் சக்தி என்று குறிப்பிடுகிறது.
✧ கடவுள் என்ற அந்த ஒன்றுதான் பிரபஞ்சம் உருவாக காரணம்!
நீ உருவாக காரணம்!
ஏன்! நீயும் பிரபஞ்சமும் இயங்கு வதற்கே அதுதான் காரணம். குழந்தைகள் மூளையிலிருந்து செயல் படுவதில்லை.
குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.
உங்களது வார்த்தைகளையும், எதிர்
பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம்
கவனிப்பதில்லை. ஏனென்றால் அவை
மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
உங்களது முகபாவங்களையும்,
உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள்
முழுமையாக கிரகிக்கின்றன. ஏன்
என்றால் அவை இரண்டும் இதயம்
சம்பந்தப்பட்டவை.
உங்களுடைய 'முகமூடி'
'அமுக்கப்பட்ட உணர்வுகள்'
'வெறுப்புகள்'
'துக்கங்கள்' - ஆகியவை உங்களின்
‘சண்டை சச்சரவு’ இல்லாமல்
‘அன்போடும்’
‘பரிவோடும்’
‘ஒருவருக்கொருவர் ஆதரவாக’
இருக்கும் பெற்றோர்களைத் தினமும்
பார்த்து வளரும் குழந்தையின்
மனதில் அன்பு, விட்டுக் கொடுத்தல்,
உதவி செய்தல் என்பது வாழ்க்கையின்
ஒரு அம்சம், ஒரு தன்மை என்று
பதிந்துவிடும்.
இதுபோல் அன்பும், பண்பும் விதைக்
கப்பட்ட பிஞ்சு மனதிற்கு கலவரம்,
கோபம், சண்டை, அடுத்தவர்களைத்
துன்புறுத்தல் என்பது எல்லாம்
நஞ்சாகத் தெரியும்.
கள்ளம் கபடம் இல்லாமல்
உங்களை முழுமையாக நம்பும்
குழந்தைகளுக்கு அமிர்தத்தைக்
கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
கர்ம சக்கரம்
✧ பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள்? இறந்த பின் எப்படி இருப்பீர்கள் ?
✧ தாயின் கருப்பையில் பலகோடி
செல்களால் ஆன ஒரு கட்டி
போன்று உருவான கரு எப்போது
தனி மனித உயிராக மாறுகிறது ?
எப்போது அந்த கருவில் தனி உயிர்
நுழைந்தது ?
✧ உயிர் என்பது என்ன ? அது எப்படி
இருக்கும் ? அதை சேகரிக்க
முடியுமா? ஏதேனும் ஒரு நவீன
விஞ்ஞான முறையால் கண்டுபிடிக்க
முடியுமா ?
இந்த கேள்விகளுக்கு அனுபவப்பூர்வ
மான பதில் கூற முடிந்தவனால் மாத்திரமே
'கர்மா' போன்ற சூட்சுமமான விஷயங்
களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.
✧ உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்ம
சக்கரத்தை (ஆசை - நிராசை) நிறுத்தி
ஆனந்த நிலை அடையும் கலையை
மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்
காகத்தான் அவதாரங்கள் அவ்வப்
போது தோன்றுகிறார்கள்.
✧ கர்மவினைகள்...
வாழ்க்கையின் போக்கை
தீர்மானிக்கும்,
வாழ்க்கையையே தீர்மானிக்காது.
வயது அதிகமான பின்பு சாதிப்ப
தற்கான சக்தியும், சாத்தியக் கூறுகளும்
இருந்தாலும் அவர்களுடைய போலி நம்பிக்கை
அவர்களைத் தடுத்து விடுகிறது.
மனித மனம் தோல்விகளையும்,
அவமானங்களையும் பதிய வைத்துக்
கொள்ளும் அளவுக்கு வெற்றிகளையும்,
சந்தோஷங்களையும் பதிய வைத்துக்
கொள்வதில்லை.
✧ இன்றைய உலகில் கஷ்டப்படுபவர்கள்
எல்லோருமே இந்தப் போலி
நம்பிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள்
தான்.
✧ கடந்த காலத்தில் தற்செயலாக நடந்து
விட்ட சில அசம்பாவிதங்கள் மூலம்
உங்களையோ உங்களின் திறமை
யையோ குறைத்து மதிப்பிட முடியாது.
✧ முதலில், எவ்வளவு சலனப் படுகிறீர்கள்
என்பதையும், எவ்வளவு மனத்
தடுமாற்றம் உங்களுக்குள் இருக்கிறது
என்பதையும் கண்டுபிடியுங்கள் பாதி
பிரச்சினை தீர்ந்துவிடும்.
✧ இரண்டாவது, சலனப்படும் போது எல்லாம் விழிப்புணர்வோடு இருங்கள்.
எவ்வளவு சலனப்படுகிறீர்கள்?
எப்படிச் சலனப்படுகிறீர்கள்?
எதற்காகச் சலனப்படுகிறீர்கள்?
- என்று தெரிந்து கொண்டு முழு உணர்வோடு இருங்கள்.
இப்படியே தொடர்ந்து விழிப்புணர்
வோடிருக்கும் போது உங்களுக்குள்
ஒரு மாற்றம் நிகழும் - அதற்குப்
பெயர்தான் நிதானம்.
✧ கோபம் நம் வசம் இல்லை.
கோபத்தின் வசத்தில்தான் நாம் இருக்கிறோம்.
✧ வெளியில் ஏற்படும் சிறு மாற்றங்கள்,
உறவுகளின் சில தவறான நடவடிக்கை
கள், எதிர்பார்த்தது, எதிர்பார்த்தபடி
இல்லாமல் போவது எனச் சிறுச் சிறு
விஷயங்களுக்குத்தான் நாம் கோபப்
படுகிறோம்.
✧ வெளியில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள்
தான் நம்மை சீற்றமடைய வைக்கிறது!
நிலைகுலைய வைக்கிறது ! நிதானத்
தையே கலைக்கிறது ! நிதான
மின்மையை உருவாக்குகிறது !
எப்போதும், எந்தவொரு சூழ்நிலை
யிலும் நிதானமாக, முழுமையாக
இருப்பதே ஞானம்.
தன் தடுமாற்றங்களை கண்டுபிடிப்பது
பாலத்தைக் கண்டுபிடிப்பதற்குச் சமம்.
தடுமாற்றத்தைத் தாண்டுங்கள், தடு மாற்றம்
அற்ற நிதானம் உங்களுக்காக உங்களுக்
குள்ளேயே காத்துக் கொண்டிருக்கிறது.
தட்டுத் தடுமாறினாலும், பரவாயில்லை
என்று தடுமாற்றத்திற்குள் தைரியமாக
விழிப்புணர்வோடு நுழைந்து வெளியே
வருவதுதான் தடுமாற்றத்தைத் தாண்டு
வதற்கான எளிய வழி.
விழிப்புணர்வு ஓர் சக்தி. தடுமாற்றத்தை தாண்டும் வல்லமையை அது நமக்குத் தரும்.
நிதானமின்மைக்குள் புகுந்து நிதானம்
நோக்கிய பயணத்தை இந்த நிமிடம் முதல்
ஆரம்பியுங்கள்.
போலி நம்பிக்கை என்றால் என்ன ?
✧ இந்த நூற்றாண்டில் அதிகமாகியிருக்கும்
பிரச்சினை 'போலி நம்பிக்கை'
(Pseudo Belief - self cheating in
nature). இது தன்னைத் தானே
ஏமாற்றிக் கொள்ளும்.
✧ போலி நம்பிக்கை உங்கள் மனதிற்
குள் நுழைந்து விட்ட HIV வைரஸ்.
(HIV - Happiness Insufficiency Virus)
போலி நம்பிக்கை நிம்மதியைக்
கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும்.
✧ தான் முட்டாள் என்ற உண்மையைக்
கடைசிவரை முட்டாளுக்குத் தெரிய
விடாமல் மறைத்து விடும் - மனதின்
மாயத் திரைதான் போலி நம்பிக்கை.
சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக்
கொண்டு பல திறமைகள் பொதிந்த
உங்களைத் தோற்றவன், இயலாதவன்,
கெட்டவன் என்று நம்ப வைப்பது போலி
நம்பிக்கை என்னும் மாயகுணம்தான்.
வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம்...
போலி நம்பிக்கைகளைத் தாண்டித்
தங்களுடைய உண்மையான சக்தியையும்,
சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும்
உணர்ந்து, உண்மையாக நம்பி செயல்பட்டு
ஜெயித்தவர்கள்.
ஆரோக்கியமான மனிதன்
✦ மக்கள் தெய்வமாக, வீடு மாளிகை
யாக உலகம் சொர்க்கமாக - நீங்கள்
உணர்ந்தால், நீங்கள் ஆரோக்கியமான
மனிதர்.
✦ ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஆனந்தமாக இருப்பார்கள்.
✦ ஆனந்தமாக இருப்பவர்கள் நிச்சயம்
ஆரோக்கியத்தோடு இருந்தே ஆக
வேண்டும். வேறு வழியே இல்லை -
இது 'ஆனந்த சூத்திரம்'.
✦ உடல் பிரச்சினை - நோய்.
மனப்பிரச்சினை - வேதனை.
உணர்வுப் பிரச்சினை - ஆரோக்கிய
குறைவு.
✧ ஆரோக்கியம் குறைய ஆரம்பித்த
திலிருந்தே நோய் உருவாக ஆரம்பிக்
கின்றது.
நோய் திடீரென்று தோன்றுவது இல்லை. தோன்றவும் முடியாது.
ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்ச
மாகக் குறைந்து பின் வேதனை
கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து -
எதிர்பாராத தருணத்தில் அது நோயாக
வெடிக்கிறது.
✧ நோய் என்பது பல நாட்களாக
இருக்கும் ஆரோக்கியக்கேட்டின்
வெளிப்பாடு.
✧ உங்கள் உற்சாகம், சந்தோஷம் குறைய ஆரம்பிக்கும் போதே,
உங்களின் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பிக்கிறீர்கள்.
கற்றுக்கொள்ள...
கற்றுக்கொள்ளுங்கள் !
✦ வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர்
திருப்பங்களும் நீங்கள் கற்றுக்
கொண்டே ஆக வேண்டிய பாடங்
களை வைத்துக் காத்துக் கொண்டு
இருக்கிறது.
✦ வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும்
- வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும் - குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
- தியானம்
✦ கற்றுக் கொள்ள வேண்டியதை, கற்றுக்
கொள்ள வேண்டிய நேரத்தில் கற்றுக்
கொள்ளத் தவறியதே நம் கஷ்டங்
களுக்கான காரணகர்த்தா.
மனச்சோர்வின் மாபாதகங்கள்
✧ சொர்க்கத்தை எட்டிப் பார்க்க வேண்டுமா?
- சிரி.
நரகத்தை எட்டிப்பார்க்க வேண்டுமா?
- துக்கப்படு.
✧ மனம் உற்சாகமாக இருந்தால் -
புல் கூட ஆயுதமாகத் தோன்றும்!
தோல்வி கூட குருவாகத் தோன்றும்!
✧ சாத்தியம் இல்லாததில் கூட சாத்தியம்
ஆவதற்கான சிறு சாத்தியக் கூறுகள்
மட்டும் மனக்கண்களுக்கு தெளிவாகத்
தெரியும் !
✧ மனம் சோர்வுற்றிருந்தால் -
படேயே உடன் இருந்தாலும் பயம்
இருக்கும் !
பெரிய வெற்றி கூட 'இப்போதைக்கு
இது O.K' அடுத்த தோல்வி எப்ப
வருமோ ? என்று யோசிக்கத்
தோன்றும் !
சாத்தியமாகக் கூடியதில் இருக்கும்
சிறிய சாத்தியமின்மைகள் மட்டும்
மனக்கண்களுக்குத் தெளிவாகத்
தெரியும் !
✧ கவலை முற்றினால் துக்கம்.
துக்கம் முற்றினால் மனச்சோர்வு.
மனச் சோர்வு முற்றினால் மனக்
கோளாறு.
✧ சந்தோஷமும், துக்கமும் வாழ்க்கையை
நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப்
பொறுத்துத்தான் அமைகிறது.
✧ பலருக்கு துக்கம் என்பது ஒரு
மனப்பழக்கமாகவே (HABIT) மாறி
விட்டது. துக்கமோ மனச்சோர்வோ
உங்களை ஆட்கொள்ளா மல் இருக்க
எளிய வழிகள் சில...
✧ எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப் போடு இருங்கள்.
வெறுமனே உற்சாகமாக இருப்பது என்பது இயலாத விஷயம்.
✧ பல புத்தகங்களைப் படித்து, "நான்
உற்சாகமாக இருக்கிறேன், நான்
உற்சாகமாக இருக்கிறேன்" என்று பல
முறை மனதில் சொல்லிக் கொள்வ
தால் மட்டும் உற்சாகம் வந்து விடாது.
✧ நீங்கள் மாணவனாக இருந்தாலும் சரி,
குடும்பஸ்தனாக இருந்தாலும் சரி,
உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து
முழுமையாகச் செயல்படுங்கள்.
அனுபவிக்கத் துடிப்பவனுக்கு...
✧ சாதாரண வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்ற இரண்டு வகைப் பட்ட வாழ்வு முறைகள் இல்லை.
✧ மனிதன் தான் ஆனந்தமாக இல்லை என்று உணர ஆரம்பித்தபின், சுய -பட்சாதாபத்தால் சப்பைகட்டுக் கட்ட உருவாக்கப்பட்ட title-தான் சாதாரண வாழ்க்கை.
✧ எல்லோரும் ஆனந்தத்தின் உச்சிக்குச் செல்லவே ஆசைப்படுகிறோம். ஆனால் அதை நமக்கு பிடித்த வழியில் காதல், பேர், புகழ், பணம், பதவி என்று காளை போல வேகமாக அனுபவிக்க, உழைக்க ஆரம்பிக்கிறோம்.
நம்பிக்கையை
வளப்படுத்துங்கள்
✦ எடுத்த காரியத்தில் நம்பி கை வை,
உன் நம்பிக்கைக்கு வாழ்க்கை கை
கொடுக்கும்.
✦ “என் பெயர் XY / XX
நான் ஒரு மனிதன், மனுஷி
எனக்கென்று ஒரு குடும்பம், தொழில்.
என் வாழ்வின் நோக்கம் இதுதான்.
நான் உடல், மனஅளவில் நன்றாக
இருக்கின்றேன்” -
- என்ற சில நம்பிக்கைகளை அச்சாணியாக வைத்துத்தான் மனிதன் தெளிந்த மன நிலையில் வாழ்கிறான்.
- என்ற சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் மனிதனின் மனதை குளறு படியாக்கி பைத்தியம் ஆக்குகின்றன. - என்ற சில நம்பிக்கைகள் முழுவது மாக மனதை விட்டு வெளியேறுவதும், உடலை விட்டு உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும் போது மனிதன் இறந்து விடுகிறான்.
✦ உன் வாழ்க்கையின் தரம் உன் நம்பிக்கையின் தரத்தைப் பொருத்தது.
✦ நம்புங்கள்... உங்களை நம்புங்கள் !
எதை நீங்கள் நம்புகிறீர்களோ அது
வாகவே நீங்கள் மாறுவீர்கள்.
✦ நம்பிக்கைதான் வாழ்க்கை !
நம்பிக்கைதான் பிரச்சினை !
நம்பிக்கைதான் தீர்வு !
✦ மனிதன் காற்றை சுவாசிப்பதால்
மட்டும் வாழ்வதில்லை;
நம்பிக்கையையும் சுவாசிப்பதால்தான்
வாழ்கிறான்.
✦ சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால்
நம் ஆரோக்கியம் நாசமடைவது
உறுதி.
✧ நம்பிக்கை திடமானால் வாழ்க்கை
திடமாகும். நம்பிக்கை சரியானால்
வாழ்வு சரியாகும்.
✧ உங்கள் நம்பிக்கையின் தன்மையைப்
பொருத்துத்தான் அது வாழ்வா?
இல்லை பிரச்சனையா? இல்லை
தீர்வா? என்று முடிவு செய்யப்படும்.
நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும்!
காமம், காதல், நட்பு, அன்பு
✧ ஒரு பூவைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!
ஒரு கலையைப் பார்த்து ரசிப்பதும் ஈர்ப்பு தான் !
ஒரு மனித உடலைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்பு தான் !
ஒருவர் குணத்தை பார்த்த உடன் ஏற்படுவதும் ஈர்ப்பு தான் !
ஈர்ப்பு + இச்சை = காமம்
ஈர்ப்பு + பாசம் = காதல்
ஈர்ப்பு + மதிப்பு = நட்பு
✧ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, இச்சை
உணர்வு கலக்கும் போது அது காம
உணர்வாக மாறுகிறது.
✧ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, பாச
உணர்வு கலக்கும்போது அது காதல்
உணர்வாக மாறுகிறது.
✧ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, மதிப்பும்,
மரியாதையும் கலக்கும் போது அது
நட்பு உணர்வாக மாறுகிறது.
✧ காதலும், அன்பும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள்.
✧ காமம், காதல், நட்பு என்ற மூன்றையும் தாண்டியது அன்பு!
✧ உண்மையான காதலர்கள் தங்கள்
தனித்துவத்தைப் போராடிக் காக்க
மாட்டார்கள். விட்டுக் கொடுப்பதன்
மூலம் தங்கள் தனித்துவத்தைக் காத்து
நிற்பார்கள்.
அடித்து கூறும். வாலிப வயதும் அப்படித்தான் கூறும்.
✧ மிக அதிக விழிப்புணர்வும், புத்திசாலித்
தனமும் பெற்றிருந்தால் மாத்திரம்
தான் காமம் வேறு, காதல் வேறு
என்பதைச் சரியாக பிரித்துப் பார்க்க
முடியும்.
✧ சிறந்த காதலன் - நல்ல நண்பன்
சிறந்த காதலி - நல்ல தோழி
சிறந்த பெற்றோர் - நல்ல நண்பர்கள்
சிறந்த சகோதரன் - நல்ல நண்பன்
சிறந்த சகோதரி - நல்ல தோழி
- இப்படி நம்முடைய சிறந்த உறவு களை குறிப்பிடும் போது, அவர்கள் நல்ல Friend ஆக இருக்கிறார்கள் என்று குறிப்பிட நாம் தவறுவதில்லை.
ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்
✧ மற்றவர்களைத் தொடர்ந்து பாராட்டுவது,
- சரியான விஷயங்களுக்கு!
மற்றவர்களுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வது,
- தேவையான விஷயங்களுக்கு!
தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது, இருக்க முயற்சி செய்வது...
தொடர்ந்து மற்றவர்களைச் சந்தோஷ
மாக இருக்க வைக்க நம்மால் முடிந்த
எல்லாவற்றையும் செய்வது...
- இவை எல்லாமே அகங்காரத்தை அழிக்க ஆரம்பிக்கும். ‘என்னால் முடியாது’ என்ற எண்ணமோ தோன்றும்.
இது அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்).
✧ மற்றவர்களின் சுகத்தன்மையை
(சந்தோஷத்தை) அதிகரிக்க நாம்
செய்யும் செயல்கள், நம்முள்ளிருக்கும்
அகங்காரத்தை அழித்து ஆனந்தத்
திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
எல்லோரையும் சந்தோஷப்படுத்தி,
நீங்களும் சந்தோஷமாக இருந்து,
ஆனந்தத்திற்குள் குதியுங்கள்!
✤ ✤ ✤