KAILASA Library/Dhyanapeetam/எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்?Sign in
Dhyanapeetam

எங்கே இருக்கிறது அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

✧ பொதுப்படையாக கூற வேண்டு மானால் -

அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டுமே
அதனதன் இஷ்டப்படி வாழ்வில்
வந்து போகும் விஷயங்கள்.

✧ வாழ்வை எதிர்கொள்ளும் தைரியமும்,
பக்குவமும் இருந்தால் மாத்திரமே
அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும்,
துரதிர்ஷ்டத்தை ஜீரணிக்க முடியும்.

✧ கூர்ந்து ஆராய்ந்தால் ஒரு உண்மை
புரிய வரும் - “அதிர்ஷ்டம்,
துரதிர்ஷ்டம் என்ற இரண்டு தனிப்
பட்ட நிலைகள் இல்லவே இல்லை”
என்று தெரிய வரும்.

✧ சுலபமாக...
கை நோகாமல்...
அதிகம் உழைக்காமல்...
நல்ல பலனைக் கொடுத்த வாழ்க்கை
அம்சங்களை நாம் அதிர்ஷ்டம் என்று
கூறிச் சந்தோஷப்படுகிறோம்.

✧ கைநோக...
உடல் நோக உழைத்தும்...
எதிர்பார்த்த பலனைத் தராத வாழ்க்கை
அம்சங்களுக்கு நாம் துரதிர்ஷ்டம்
என்று கூறித் துக்கப்படுகிறோம்.

✧ துரதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என்ற
இரண்டு வாழ்க்கை அம்சங்களுமே
நமக்கு கிடைக்கும் பலனின் அளவைப்
பொருத்து நாமே நிர்ணயிப்பவை.

✧ நேரத்தை சரியாகப் பயன் படுத்தாமல் மந்தமாக நேரத்தை வீணடிப்பவனுக்கு,

  • நீங்கள் கற்பித்து கொள்ளும் ‘துரதிர்ஷ்டங்கள் பல’ காத்துக் கொண்டி ருக்கின்றன.

✧ அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு!
துரதிர்ஷ்டம் பயந்தாகொளிகளின்
பீதி!

✧ சுறுசுறுப்பான தைரியசாலிக்கு
இரண்டுமே ஒன்று! இரண்டின் மூலமும்
வாழ்வில் முதிர்ந்து கொண்டே
இருப்பார்கள்.

✧ “எனக்கு அது / இது வேண்டும்...
என்னைக் காப்பாற்று !
எனக்கு அதைக் கொடுத்தால்...”

  • என்ற ரீதியில் பிரார்த்தனையும், பக்தியும் இருந்தால் , அது ‘பக்தி’ என்று நினைத்துக் கொண்டு இறைவ னிடம் நாம் நடத்தும் ‘பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்’.

✧ “நன்றி ! நன்றி ! நன்றி !
இதை கொடுத்தாயே நன்றி !
இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேனே!
நன்றி!
நீ செய்ததற்கும், செய்யப்போவதற்கும்
நன்றி!..”

  • என்று ‘பக்தியுணர்வு’ நன்றி உணர்வாக பொங்கப் ! பொங்க !

குழந்தைகளை

வளரவிடுங்கள்

✧ குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய
அவசியமில்லை. குழந்தைகள் வளர்
கிறார்கள்.

✧ 'வளர்க்கிறேன்' என்ற பெயரில்
வளர்ச்சியின் போக்கைத் தடுக்காமல்,
திசை திருப்பாமல் இருப்பதுதான்
குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கும்
மிகப்பெரிய பரிசு.

✧ என் பிள்ளை என்று உரிமை
கொண்டாடி, குழந்தையை ஒரு
உடைமையாக்குவதைவிட - என்னைத்
தாயாக்கிய / தந்தையாக்கிய ஒரு
உயிர் என்று மதித்துப் பாருங்கள் -
குழந்தை தெய்வமாகத் தெரியும்.

✧ முதலில், உங்கள் குணக் கோளாறு
களை முதலில் கண்டுபிடித்து அதை
எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய
முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சரி
செய்வதற்கான வேலைகளை ஆரம்பி
யுங்கள்.

✧ இரண்டாவது, ஒரு குழந்தைக்கு
சராசரி பெற்றோர்கள் வளர்க்கிறேன்
என்ற பெயரில் செய்யும் கெடுதல்
களை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை வளர்க்க நீங்கள் வளருங்கள்.
இரண்டுமே 100% சரி.

✧ சன்னியாசி ஆவதற்கு வீரர்களுக்
கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும்.
வீரன், அடுத்தவர்களை வெற்றி
கொள்கிறான். சன்னியாசி தன்னைத்
தானே வெற்றி கொள்கிறான்.

ஆகவே, எல்லோரும் சன்னியாசி களாகி விட முடியாது.

✧ 100% சுதந்திரமயமான...

100% ஆனந்த மயமான...

  • வாழ்வு முறைக்கு பெயர் சந்நியாசம். இப்படிப்பட்ட சுதந்திர மயமான வாழ்க்கை வாழ்பவனுக்கு பெயர் சந்நியாசி.