விழித்துக் கொள்ளுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
◇ விழித்துக் கொண்டு சந்தோஷமாக
வாழும் வாழ்க்கையை விட, விழி
பிதுங்க! பிதுங்க! வாழும் சதாசச்சரவு
நிறைந்த வாழ்க்கையில்தான்
பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது
- இது ஒரு பெரிய விந்தை.
◇ ‘கண்களைத் திற’ என்றால்
எல்லோருக்கும் கண் இமைகளை
மாத்திரமே திறக்கத் தெரியும்.
கண் இமைகளைத் திறப்பது,
கண்களைத் திறப்பது அல்ல...
என்றால் மனித மனது புரிந்து கொள்ளக்
கடினப்படும்.
அதேபோல்தான் விழித்துக் கொள்
வதும். மனித மனதால் இதைப் புரிந்து
கொள்ள முடியாது.
✧ 'விழித்துக் கொள்வது' தன்னையே
அழித்துக் கொள்ளும் தன்மை படைத்த
அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய
வழி.
✧ விழித்துக் கொள்ளாதவரை...
வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டே
தான் இருக்கும்.
✧ நம்மில் பலபேர் வாழ்க்கையை ஒட்டு
மொத்தமாக வீணாக்கிய பிறகுதான்
அதன் அருமையை உணர ஆரம்பிக்
கிறோம்.
✧ மீதமுள்ள சொர்ப்ப வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்வது எப்படி?
- என்ற கேள்வியை கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள்.