KAILASA Library/Dhyanapeetam/உங்கள் உலகம்Sign in
Dhyanapeetam

உங்கள் உலகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

◇ உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்!

◇ உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்!

◇ உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்!

◇ உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும்!

◇ உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும்!

  • புரிகிறதா... இது ஒரு சக்கரம்.

சொர்க்கமும், நரகமும் மனோரீதியானது

✧ சொர்க்கமோ, நரகமோ புவியியல்
ரீதியாக எந்த இடத்திலும் இல்லை.
மனவியல் ரீதியாகவே உள்ளது.

✧ கோபம்,
வெறுப்பு,
கவலை,
துக்கம் ஆகியவை சம்பந்தப்பட்ட
ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள்
உண்மையில் வாழ்வது நரகத்தில்தான்.

அந்த நிமிடங்களில்...

நரக உணர்வான துன்பத்தைத்தான் ருசிப்பீர்கள்.

✧ கோபத்தை போன்றே...

மனிதனுக்கு துன்பத்தையும், வேதனை
யையும், உணர வைக்கும் எல்லா
நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும்
மனிதன் நரகத்தில் வாழ்கிறான்.

✧ சந்தோஷத்தைப் போன்றே...

மனிதனுக்கு இன்பத்தையும், உற்சாகத்
தையும் உணர வைக்கும் எல்லா
நிமிடங்களிலும், நிகழ்வுகளிலும்
மனிதன் சொர்க்கத்தில் வாழ்கிறான்.

✧ முயன்றால் சொர்க்கத்தை நாம் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

✧ சொர்க்கமும், நரகமும் ஒரு தனி மனிதனின் கையில் இருக்கிறது.

உங்கள் சொர்க்கத்தை உருவாக்குங்கள்.

அவமானம் என்னும் நாடகம்

✧ 'அவமானம்' என்பது நம் அந்தஸ்து,
வயது, குலம், கோத்திரம் பொருத்து
நம் மனதால் கண்டுபிடிக்கப்படும்
ஒரு புதிய கண்டுபிடிப்பு.

✧ பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி
நம்மை விட அதிகமாக இருப்பவர்கள்
சற்று மரியாதைக் குறைவாகப் பேசி
னாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு
நாம் கொடுக்கும் பெயர் - 'உரிமை'
(ஆஹா! எவ்வளவு உரிமை எடுத்துக்
கிறாங்க! எல்லாம் பாசம்!)

✧ மாறாக, அந்தஸ்து, வயது, பதவி
நம்மைவிட குறைவாக இருப்பவர்கள்
சற்றே மரியாதை குறைவாக பேசி
னாலோ, நடந்து கொண்டாலோ
அதற்கு நாம் கொடுக்கும் பெயர் -

இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துக் கொள் வார்கள். புதிது, புதிதாக கண்டுபிடித்து "நீ என்னை இங்கே, இப்படி அவமானப் படுத்தினாய்", "என் மதிப்பென்ன..." என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.

அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள் !

மூன்றாவது வகை : அற்புதப் பிறவிகள்.
பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே
இல்லை என்பதை உணர்ந்த வர்கள்.

நம் Egoவிற்கு விழும் அடியைத்
தான் நாம் அவமானம் என்று கருதிக்
கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை
உணர்ந்து தாண்டியவர்கள். Egoவை தொலைத்
தவர்கள்.

அப்படியே மனிதர்கள் அவமதித் தாலும் அது இவர்களைப் பாதிக்காது.

கோப சக்தி விரயம்

✦ நீங்கள் கோபப்படும் போது மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள்.

✦ கோபப்படுவதை அடக்க முயற்சிப்
பதை விட்டு விட்டு, கோபத்துக்கான
காரணத்தை ஆராயுங்கள்.

✦ தவறு நம் மீது இருக்கும் போது, நாம்
ஏன் அடுத்தவர் மீது கோபப் பட
வேண்டும் என்கிற ரீதியில் யோசித்துப்
பாருங்கள்.

✦ நீங்கள் கள்ளம் கபடமில்லாதவர்,
தவறே செய்யாதவர் என்றால்
யாராவது உங்களைப் பார்த்துச்
சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா ?

✧ நாம் கோபப்படுகிறபோது ஒரு
விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
நம்மை விட வலிமை குறைந்தவர்
களிடத்தில் நாம் காட்டுகிற கோபம்
எப்போதும் அளவுக்கு அதிகமாகவே
இருக்கிறது.

உங்களுக்குக் கீழே இருக்கும்
வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய்
சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதி
யானவர் என்றால் அவருக்கு ஆயிரம்
ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம்.

மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை.

ஒரு மடங்கு வேலைக்கு பல மடங்கு கூலி நாம் தருவதில்லை.

ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு செய்து விட்டால் ஆயிரம் ரூபாய்க்குப்

✧ கோப சக்தி வங்கியில் இருக்கும்
பணத்திற்கு சமம்.
இடம் பார்த்து !
பதம் பார்த்து !
தேவை பார்த்து !
தேவையானவர்களுக்கு மட்டுமே
தேவையான அளவு மட்டுமே செலவு
செய்ய வேண்டும்.

✧ சக்தி விரயம் செய்யாதீர் ! சக்தியின்மையில் தவிக்காதீர் !

✧ சக்திச் சிக்கனம் தேவை இக்கணம்.

“வெளி உலகில் அடையும்
சந்தோஷமும், திருப்தியும் நிரந்தரமாக
இருப்பதில்லையே. இந்த நிரந்தரத்
தன்மையைத்தான் நாம் முதலிலிருந்தே
தேடுகிறோமோ? ஒரு வேளை அதுதான்
ஆனந்தமா? அதுதான் நிம்மதியா?”

  • மூன்றாவது வகையினர்.

✧ வாழ்க்கையின் எல்லை எட்டிப்
பார்க்காத வரை, வாழ்க்கையின்
நோக்கத்திற்கான விடை தெரியாது.
நோக்கம் புரியாது. ஆனால் ஏக்கம்
இருப்பது மட்டும் புரியும்.

✧ மனிதப் பிறப்பின் நோக்கமே நிலை
யான, நித்தியமான ஆனந்தத்தைப்
பெறுவதுதான். ஆனந்தம் பெறும்
வரை ஏதோ ஒரு ஏக்கம் இருந்து
கொண்டே இருக்கும்.

எங்கே இருக்கிறார் கடவுள் ?

✧ இறைவன் எங்கும் நிறைந்திருக்
கின்றான் என்றால், அவன் இல்லாத
இடம் என்று ஒரு இடம், ஏன் ஒரு
அணு கூட இருக்க முடியாது.

✧ இறைவன் சக்தி வடிவமானவன்,
இறைவன் உருவமற்றவன் என்பது
ஆன்மீகத்தின் அடிப்படை உண்மை.

இறை வன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது.

இறை சக்திக்கு உருவம் கொடுப்பது
மதங்கள் தான் - இது ஒரு நல்ல துவக்கம்.
முடிவு அல்ல.

✧ இறைவன், சக்தி வடிவில் இருக் கிறான் என்பதற்கு என்ன ஆதாரம் ?

காற்றில் கலந்த உயிர் மீண்டும்
மனிதனாக உயிர் பெறுகிறது. இப்படி சக்தி
மாறி, மாறித் தோன்றிக் கொண்டே
இருக்கிறது.

✧ பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்ச
கால அட்டவணையில் மனிதத்
தோற்றம் ஒரு கணநேர நீர்க்குமிழி
போன்றது.

✧ 'இறைவன் தூணிலும் இருப்பான்,
துரும்பிலும் இருப்பான்' என்று
ஞானிகள் சொன்னது இதைத்தான்.

மனிதனிலும், தூணிலும், துரும்பிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே.

சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்த சக்திதான் இறைவன்.