KAILASA Library/Dhyanapeetam/அறிவு அனுபவம்Sign in
Dhyanapeetam

அறிவு அனுபவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அனுபூதி

அறிவு :

ஒவ்வொரு நெருப்பைத் தொட்ட
பிறகு, அது சுடும் ! என்று அறிந்து
கொள்வது அறிவு.

அனுபவம் :

ஒரே ஒரு முறை தீயைத் தொட்டு,
அது எரிகிறது என்று தெரிந்தவுடன்,
எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்து
கொள்வது அனுபவம்.

அனுபூதி :

ஒருவர் தீயை தீண்டியதும் வேதனைப்
படுவதிலிருந்தே 'தீ சுடும்' என்ற உண்மையை
கிரகித்துக் கொள்வது அனுபூதி.

✦ வாழ்வின் ஒவ்வொரு துன்பதுக்கத்
திலும் விழுந்து எழுந்து வாழ்க்கைப்
பாடம் கற்றுக் கொள்வது அறிவு.

  • அறிவாளி செய்வது!

✦ நாம் வாழ்வின் ஓரிரு துன்பதுக்கங்
களை முழுமையாக எதிர்கொள்வதின்
மூலமாக வாழ்க்கையை புரிந்து
கொள்வது அனுபவம்.

  • புத்திசாலி செய்வது!

✦ உலகில் நம் கண்ணெதிரே மனிதர்கள்
படும் துன்பதுக்கங்களை புத்திசாலித்
தனமாக கவனித்துப் பார்ப்பதினாலேயே
வாழ்க்கையை முழுமையாக புரிந்து
கொள்வது அனுபூதி.

  • ஆன்மீகவாதி செய்வது!

நீங்கள்....
அறிவாளியா? புத்திசாலியா? ஆன்மீக
வாதியா?

✧ 'நம்பிக்கை', 'ஒழுக்கம்', 'உற்சாகம்'
ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடே
சாதனை!

✧ ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும்,
உற்சாகமும் மிகுந்தால் அந்த மனிதனின்
சாதனை - பக்கக் கண்ணாடி போடப்
பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம்
போல இருக்கும். எடுத்த இலக்கை
அடைலாம். வழிதவற மாட்டார்கள்.

வெறும் நம்பிக்கையும் உற்சாகமும்
இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால் அது
காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை
ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன்
வழிதவற வாய்ப்பு அதிகம்.

வெறும் ஒழுக்கம் மட்டுமே கடைப்
பிடித்து நம்பிக்கையும், உற்சாகமும் மிகக்
குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதனை
ஒரு கிழட்டுகுதிரை போல ஆக்கி விடும்.
வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.

மன்னித்து...

மறந்துவிடுங்கள் !

◇ உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது! உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது!

  • இரண்டுமே எதிராளி அல்ல நீங்கள்தான்.

◇ தொடர்ந்து உங்கள் உடலும்,
மனதும் கொதித்துக் கொண்டிருந்தால்
மாத்திரமே,

கோபக்கனல் மூலம் மற்றவர்களை
சிறு தவறுக்காக கோபித்துக் கொண்டு
சக்திவிரயம் செய்ய முடியும்.

வெறுப்பு கொள்ள முடியும்.

  • இதில் யாருக்கு பாதிப்பு அதிகம்?

✧ சுயக்கட்டுப்பாட்டுத் திறனைப் பொருத்து கோபம் ஒரு சக்தி அல்லது கத்தி!

மன்னித்தல் ஒரு அருமருந்து!

✧ அகங்காரத்திலேயே மிகவும் மோச
மானது 'நான் நல்லவன்' என்கிற
நினைப்பினால் வரும் அகங்காரம்
தான்.

✧ நான் நல்லவன் என்ற கற்பனைதான்
பல விஷயங்களை கெட்டது! மோசம்!
என்று சுட்டிக்காட்டி கோபத்தை
வளர்க்கும்.

✧ உங்களின் 'கெட்ட குணங்களையும்',
மற்றவரின் 'நல்ல குணங்களையும்'
மட்டுமே ஆராயுங்கள்.

கோபம் தணியும்.

சுயக்கட்டுப்பாடு மலரும்.