போலி திருப்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
என்றால் என்ன?
◇ திருப்தி இரண்டு வகை.
ஒன்று - போலித் திருப்தி.
இரண்டு - ஆழ்ந்த திருப்தி.
◇ உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி
அல்லது விளையாட்டு என்ற இந்த
நான்கு விஷயங்களிலேயே ஐந்தறிவு
ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும்.
இதைத் தாண்டி ஒரு படி கூட
எடுத்து வைக்க முடியாது.
◇ காரணம் முழுமையாக யோசிக்கும்
மனித மனம் அவற்றிடம் இல்லை.
மனம் இருந்தும் மனிதன் உணவு,
உறக்கம், காமம், அந்தஸ்து தேடு
வதில் சுகம் கண்டு - நான் திருப்தி
யாகத்தான் இருக்கிறேன் என்று கூறி
னால் அதுதான் போலித் திருப்தி.
◇ உண்மையை உணர்வதில்
- திருப்தி !
பெருந்தன்மையாக நடந்து கொள்வதில்
- திருப்தி !
கருணை காட்டுவதில்
- திருப்தி !
மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில்
- திருப்தி !
- என திருப்தி வாழ்க்கைத் திடலில் கொட்டிக் கிடக்கிறது.
◇ ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள்
மலரும் வரை ‘போதும்’ என்ற
உணர்வு மலராது. போலித் திருப்தி
உங்களைத் தொற்றிக் கொண்டிருக்கும்
வரை ‘இதுக்கு மேலே என்ன
இருக்கும் ?’ என்ற மந்த எண்ணம்
எழுந்து கொண்டே இருக்கும்.