KAILASA Library/Dhyanapeetam/கவலையின் விதை ஆசைSign in
Dhyanapeetam

கவலையின் விதை ஆசை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

✧ உங்கள் கவலையின் அளவு உங்கள் ஆசையின் அளவே.

✧ எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு
கவலைகள் ? என்று தெரிந்து கொள்ள
விரும்புபவர்கள் மட்டும் தெரிந்து
கொள்ளுங்கள்...

✧ உங்கள் கவலைகளுக்கு காரணம் உங்கள் ஆசைகளே!

✧ ஆசைகள் குறைந்தால், கவலைகளும் குறைந்து விடும்.

✧ உங்கள் கவலைகளை...
உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்
தான் தேர்வு செய்கிறீர்கள்.

✧ தனிமையில் நீங்கள் யாருடனும்
பேசாத வேளையில் உங்களுக்கு
நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள்.

தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படி இருபத்து நான்கு மணி
நேரமும் நீங்கள் பேசிக் கொண்டே இருப்
பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க
முடிவதில்லை.

✧ ஓட்டமாய் ஓடும் மனக்குதிரையையும்,
ஓயாமல் நடக்கும் மனத்தின் பட்டி
மன்றத்தையும், ஒரு வழிக்குக்
கொண்டு வராத வரை, 'நிம்மதி',
'ஆனந்தம்', 'நோயற்ற வாழ்வு' என்ற
பேச்சுக்கே இடமில்லை.

கடவுள்தான் எல்லாம்

✧ கடவுளுக்கு உருவம் உண்டு.

✧ கடவுளுக்கு உருவம் இல்லை.

✧ உருவம், அருவம் இரண்டுமே கடவுள் தான்.

✧ உருவம், அருவம் இரண்டிற்கும் அப்பாற்பட்டது கடவுள்.

✧ கடவுள் என்பது மனிதன் உருவாக்கிய கருத்து.

✧ கடவுள் என்ற ஒன்று பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை.

✧ கடவுள் தவிர வேறு எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை.

✧ 'கடவுள் தான் எல்லாம்' - என்ற
ஒரு உண்மையின் பல முகங்கள்தான்
மேற்கூறிய 7 + 1 கூற்றுகள்.