காரண காரியமில்லாத அன்பு:
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தியானத்தின் மூலம் நீங்கள் அனுபவிக்கத் தொடங்கும் அபூர்வமான ஒன்று, அன்பு!
மக்கள் எல்லாவிதமான அற்புதங்களையும், தரிசனங்களையும், அவர்களுடைய தெய்வங்களிடமிருந்தும், மகான்களிடமிருந்தும் காணத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மட்டும் அன்பு என்னும் அற்புதத்திற்கு தயாராக இல்லை!
தியானத்தில் பிரவேசிக்கும்போது, உங்களிடமிருந்து எவ்வளவு அன்பு வெள்ளம் பெருக்கெடுக்கிறது என்பதைக் காண நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
தியானத்தின் மூலமாக, ஒருவகை விழிப்பை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள். இதுவரை நீங்கள் எட்டியிராத தளத்தை எட்டியதை உணர்வீர்கள்.
அந்த மகிழ்ச்சியைப் பார்க்கிறவர்களிடம் எல்லாம் பகிர்ந்து கொள்ள நீங்கள் விரும்புவீர்கள்! இந்த மகிழ்ச்சி நிறைந்துதான், அன்பாக உங்களிடமிருந்து பாய்கிறது
சுதந்திரத்தைப்போலவே, இந்த அன்பும், நீங்கள் முன்பே அனுபவித்திருக்கும் அன்பைவிட வேறானது.
நாம் நமது வாழ்வு முழுவதிலும், நம்முடைய அற்பமான சுயநல அன்பைக் கொடுக்கவும், வாங்கவும் செய்கிறோம். வாழ்வு முழுவதும், நாம் நேசித்ததும், நேசிக்கப்பட்டதும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே.
நினைவுடனோ, அல்லது நினைவின்றியோ, நீங்கள் ஒரு காரணத்திற்காகவே அன்பு செலுத்துகிறீர்கள்.
மிக நெருங்கிய உறவிற்கு இடையிலும்கூட கணவன், மனைவி, பெற்றோர், குழந்தைகள் - என எல்லாருடைய உறவிலும்க்கூட, அன்பிற்கான காரணங்கள் மறைந்து கிடக்கின்றன.
நமது அன்பு முழுவதுமே களங்கப்பட்டு, பொறாமையாலும், உடைமை மனோபாவத்தாலும் அழிந்து போகிறது.
காரணமே இல்லாமல் அன்பு செலுத்தக் கூடியதைத் தியானத்தின் மூலமாக, நீங்கள் முதன்முதலாகப் புரிந்து கொள்வீர்கள்.
முதல் முதலாக, நீங்கள் எதையும் பெறுவதற்கு உத்தரவு போட மாட்டீர்கள். உங்களிடம் ஏராளமான அன்பு இருப்பதால்தான் அன்பைப் பொழிகிறீர்கள்! மழை மேகம் பூமியின் மீது பொழிவதுபோல, நீங்கள் அன்பைப் பொழிவீர்கள். அல்லது, ஒரு நறுமண மலர் தன் மணத்தை எங்கும் பரப்புவதுபோல பரப்புவீர்கள்...
நீங்கள் அன்பு செலுத்தியே தீர்வீர்கள்!
உங்களால் அன்பு செலுத்தாமல் சும்மா இருக்க முடியாது!
எல்லையற்ற மகிழ்ச்சி;
தியானத்தால், வாழ்வு ஆனந்தமயமாகிவிடும்; எந்த ஒரு காரணமும் இல்லாமலேயே!
ஒரு காரணத்தால் மகிழ்ச்சி பிறக்குமானால், நிச்சயமாக அது இன்றோ, நாளையோ வேதனையைக் கொண்டு வந்தே தீரும்.
நல்ல உணவு கிடைத்தது என்பதற்காக இப்போது மகிழ்ச்சியடைந்தால், அது கிடைக்காதபோதும், பசிக்கும்போதும் துன்பம்தான். காதல் கொண்டதால் மகிழ்ச்சி அடைந்தால், அது பறந்து போகும்போது சோகம்தான். ‘அதெல்லாம், நமக்கு ஏற்படாது,’ என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். எல்லோருக்குமே ஏற்படும். வாழ்வின் சட்டம் அது.
எல்லா மகிழ்ச்சிகளும், அவை முடிந்த பின்னே துயரம்தான். அதனால்தான், புராதன இந்தியாவில், மகிழ்ச்சியையும் வேதனையையும் குறிக்க ஒரே சொல்லைப் பயன்படுத்தினார்கள்.
ஆனால் நீங்கள் தியானத்தில் அனுபவிக்கும் மகிழ்ச்சி இடையூறு செய்யப்படாதது; இடையூறு படுத்த முடியாதது. நீங்கள் உடல்நலத்தோடு இருக்கலாம், நோய்வாய்ப்பட்டிருக்கலாம் - மகிழ்ச்சி அப்போதும் அப்படியேதான் இருக்கும். மழையோ, பனியோ, வெயிலோ, மகிழ்ச்சி மாறாமல் இருக்கும். உங்கள் உள், வெளிச் சூழல்கள் எப்படியிருந்தாலும் மகிழ்ச்சி மாறாது.
தியானத்தால் கிடைத்த நிலையான அந்த மகிழ்ச்சியை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, எந்தப் புறச் சக்தியும் அதைக் குலைக்க முடியாது. இதன் பொருள், நீங்கள் ஆழ்ந்து உள்முகம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்.
புத்திக்கூர்மையுள்ள விழிப்புணர்வு;
வாழ்க்கை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.
கணத்திற்கு கணம், வாழ்க்கை நம்மீது சுமத்தும் சவால்களை விழிப்புடன் ஏற்கும் திறமைதான் புத்திக்கூர்மை. அந்தச் சூழ்நிலையை அறிந்துணர்வதே புத்திக்கூர்மை. அந்த வினாடியில் தேவைக்கேற்ப, உங்கள் விடைகளை மாற்றியமைப்பதே புத்திக்கூர்மை.
உங்களுக்குள் மன உறுதி இல்லையென்றால், சமுதாயமும், மதமும், சட்டமும் ஏற்படுத்தி வைத்திருக்கிற விதிமுறைகளைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது.
புத்திசாலி, எழுத்துவடிவப் படிவம் இல்லாமலேயே வாழக் கூடியவன். அவனுக்கு அது தேவையே இல்லை. அவன், தன்னையே நம்பி இருப்பவன்; உள் வழி காட்டியையே நம்பி இருப்பவன். புத்திசாலித்தனம் என்பது உங்கள் பொறுப்பை நீங்களே எடுத்துக்கொள்வதுதான்.
நாம் எல்லாருமே புத்திசாலிகளாகப் பிறந்தவர்கள் தான். ஆனால் சமுதாயம் நம்மைவிடப் புத்திசாலி. நாம் தயாராக இல்லாத குழந்தைப் பருவத்திலேயே, நமக்கான விதிமுறைகளை அது வகுத்துவிட்டது.
நமது புத்திசாலித்தனத்தைச் சுற்றி, அது மதில்களை எழுப்பி வைத்து விட்டது. இயல்பாக நம்மிலிருந்து பெருகி வரும் சக்தியை அது தடுத்து விடுகிறது.
இறுதிநிலை புத்திக்கூர்மை என்னவென்றால், இந்த விலங்குகளை எல்லாம் தகர்த்தெறிவதுதான்!
புத்திக்கூர்மையை விழிப்படையச் செய்யச் சர்வ நிச்சயமாகன வழி தியானம்தான். காரணம், நம்மைப் பிணைத்திருக்கிற அந்த எல்லா விலங்குகளும் இருப்பது நமது மனத்தில்தான்.
தியானத்தின் மூலம் மனத்தைக் கடந்துபோகலாம், சுய இருப்பிற்குத் திரும்பி விடலாம்.
சுயமான நமது இருப்பில், எந்த விதிகளும் இல்லை. உங்களுடைய முழு ஆற்றல் கொண்டு எதையும் சுதந்திரமாக உங்களால் ஆராய முடியும். அதனால்தான் தியானத்தின் போது, எத்தகைய சூழலிலும் உங்களால் நிம்மதியாக இருக்க முடிகிறது.
புதிய சூழல்களை எளிதாகவும் இணக்கமாகவும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இடையறுபடாத பிரவாகத்தை நீங்கள் மறுபடியும் கண்டு கொள்வீர்கள் - தியானத்தால்!
உள்ளுணர்வின் மலர்ச்சி:
நான் குறிப்பிடும் ‘உள்ளுணர்வு’ என்பது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் அர்த்தம் கொண்டதல்ல.
உங்களில் சிலர், பெரிய அளவில் உடலின் நுட்ப உணர்வுகளையும், தோற்றங்களையும் பெறும் அளவுக்கு வளர்ச்சி பெற்றாலும், அவை முக்கியமல்ல, வளர்ச்சி கட்டத்தில் தோன்றும் துணைப் பலன்களே அவை.
உண்மையான உள்ளுணர்வு என்பது, உங்களைத்
தெளிவாகப் புரிந்துகொண்டு அதை நிறைவடையச்
செய்வதுதான்.
நாம் வாழ்வு முழுவதிலும் விதவிதமான முகமூடிகளை அணிந்தபடியேதான் போய்க்கொண்டிருக்கிறோம். அப்பா, அம்மா, கணவன், மனைவி, மருத்துவர், தலைவர், நாகரிக மனிதர் என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனித்தனி முகமூடிகள் உள்ளன. இது ஒரு முடிவில்லாத பட்டியலாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது!
சமுதாயம் நம்மீது என்ன பாத்திரத்தைச் சுமத்தி யிருக்கிறதோ, அதற்கேற்பவே நாம் வாழ்ந்து வருகி றோம். இந்தப் பாத்திரங்களே கடைசியில் நமது பண்புகளாக (Personality) மாறி விடுகிறது.
தியானத்தின் மூலம் நாம் உள்ளே நகர்கிறோம். நாம் நமது சொந்திருப்பிலேயே வாழத் தொடங்குகிறோம்; நமது இருப்புடன் ஒருங்கிணைக்கப்படுகிறோம்; தனித்தன்மையை நோக்கி நாம் நகர்கிறோம்.
உங்கள் ஆளுமை மாறக்கூடியது. ஆனால் உங்கள் தனித்தன்மை மாற்ற முடியாதது. ஒவ்வொரு தனி மனிதரும் தனித்துவம் பெற்றவர்கள்.
தியானத்தின் மூலம், உங்கள் தனித்தன்மையை உங்களால் தொட்டுவிட முடியும். உச்சபட்சமான முறையில் எது உங்களை நிறைவுபடுத்துகிறதோ, எது உங்களைச் சரியாக அடையாளம் காட்டி வெளிப்படுத்துகிறதோ, அதை நோக்கி நீங்கள் இயல்பாகவே நகரத் தொடங்கிவிடுவீர்கள். உள்ளுணர்வு செய்யும் வேலை இது.