KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/தியானத்தில் பிரவேசித்தல்Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

தியானத்தில் பிரவேசித்தல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியானம் உங்களை உள்முகமாக அழைத்துச் செல்லும் பாதை.

உள்முகம் நோக்கி நகர்தலுக்கு, நீங்கள் வெளியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

இப்போது நீங்கள் வெளி விளிம்பில் இருக்கிறீர்கள். கால் விரலை மட்டும் வைத்து, தண்ணீர் கடுகடுப்பாக இருக்கிறதா என நீங்கள் இன்னும் சோதித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

பலர் என்னிடம் வந்து, “சுவாமிஜி, எனக்கு ஆன்மிகம் பற்றி எதுவுமே தெரியாது. இதற்கு முன் தியானம் செய்ய முயன்றதும் இல்லை. நான் தயாரா இருக்கிறேனா? நான் எங்கே ஆரம்பிப்பது?” என்று கேட்கிறார்கள்.

நான் சொல்கிறேன்... ஆரப்பிப்பதற்கு சரியான இடம் நீங்கள் இப்போது இருக்கும் இடம்தான்!

இப்போது, நீங்கள் உங்களைப் பற்றிப் புரிந்திருப்பவை எல்லாமே, உங்கள் உடலோடு, உங்கள் உணர்வுகளோடு, எண்ணங்களோடு சம்பந்தப்பட்டவைதாம்.

இவ்வளவு காலம் நீங்கள் உங்களை, உங்கள் உடலாக, உணர்வுகளாக, எண்ணங்களாக மட்டுமேதான் நினைத்திருக்கிறீர்கள்.

ஆகவே, அந்த இடத்திலிருந்து தொடங்குங்கள்! அதுவே எளிதானது.

முதற்படி - உடலால் செய்வது;

உங்கள் உடல் பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

நமது சொந்த உடல் பற்றியே நாம் கருத்துகளையும், பதிவுகளையும், கொண்டிருக்கிறோம்.

இந்தப் பதிவுகள் நம்முடையவை அல்ல.

நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன கருத்துகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையே நாம் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் அனைவருமே நமது உடலைப் பற்றி, எதிர்மறையான உணர்வுகளையே கொண்டிருக்கிறோம்.

இந்த நிமிடம் உங்களுக்கு நினைவில்லாமல் போகலாம். ஆனால் நமது உடல் பற்றிய எதிர்மறை எண்ணங்கள், நமது நினைவில் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன என்பதே உண்மை.

தம் உடலோடு நிம்மதியாக, சௌகரியமாக இருப்பவர்களை நான் அபூர்வமாகவே சந்தித்திருக்கிறேன். நமது உடல் சரியாகவே இருக்கிறது என்று நிம்மதி அடைந்து விடுவதால், நமது உடலில் எல்லாம் நல்லதாகவே இருப்பதாக அர்த்தமில்லை. நம் உடலுடன் தற்காலிக நிம்மதி அடைய அது ஒரு வழி. அவ்வளவுதான்.

“உன் உடலே உனக்குப் பகை.

படம் 1:

portrait

உன் உடல் பாவகரமானது; தீயது; உடலை வருத்து! உடலைப் புறக்கணி!'' வாழ்வு முழுவதிலும் இப்படித்தான் நாம் கேட்டு வந்திருக்கிறோம்.

ஆன்மிகப் பாதையில், நமது சாதனைக்கு, நமது உடல் மிகப் பெரிய தடையாக இருப்பதாகவே, பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதனால் இயற்கைக்கு மாறாக, உடல் மீதான வெறுப்பு நமக்குள் வளர்ந்து விடுகிறது. இந்த எண்ணம் நமது உணர்வற்ற மனத்தில் ஆழமாக வேர் பதித்து நின்று விடுகிறது.

உண்மை என்னவென்றால், இந்த உடல்தான், சம்சார நதியைக் கடந்து கரையேற ஒரு படகாக அமைத்துள்ளது!

உடலின்றி இவ்வுலகில் நம்மால் இயங்க முடியுமா?

உடல் நலமாக இல்லையென்றால், தியானம், ஆன்மிகம் நோக்கி ஏதாவது செய்யத்தான் முடியுமா?

உங்கள் கண்களும், மூளையும் சரியில்லையென்றால், இந்தப் புத்தகத்தைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும்தான் முடியுமா?

மனிதன் இறுதியில் உடலைக் கடந்து போக முடியும் என்பது உண்மைதான். ஆனால் உங்கள் உடலுடன் போராடிக் கொண்டு அதைச் சாதிக்க முடியாது.

உங்கள் உடலை ஒப்புக் கொண்டு, புரிந்து கொண்டால்தான் அதைச் செய்ய முடியும். தியானத்திற்கு ஏற்றபடி உங்களது உடலை நலமாக வைத்திருக்கவும் வேண்டும்.

மறந்துவிடாதீர்கள், உடல் ஆற்றல் மிக்க ஒரு கருவி!; ஆம்! சாதாரணப் பொருளிலும், ஆன்மிகப் பொருளிலும். உடல் வெறும் கருவி மட்டும்தான்.

உடல் நல்லதுமன்று; கெட்டதுமன்று.

அது உங்கள் நண்பனுமல்ல; பகைவனுமல்ல.

வெளியுலகில் உங்கள் உடலை, உலகத் தேவை களுக்காக இயங்கச் செய்வதுபோலவே, தெய்விகத்தையும், ஆனந்தத்தையும் நோக்கி இயங்கச் செய்ய வைக்க முடியும். இது உங்கள் கைகளுக்குக் கிடைத்திருக்கிற கருவி.

இதை ஒப்புக் கொள்வது சிரமம்தான்!

வாழ்நாள் முழுவதும் நீங்கள் உங்கள் உடலால்தான் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறீர்கள். இந்த அடையாளத்தைத் தகர்த்தாலன்றி, உங்கள் உடலைக் கடந்து உங்களால் செல்ல முடியாது.

அதனால் முதல்படி - உங்கள் உடல் மீது கவனம் செலுத்துவது.

உங்கள் உடல் சரிவர வேலை செய்யவில்லை என்றால், நிச்சயமாக நீங்கள் தியானத்திற்குள் பிரவேசிக்க முடியாது. என்னவிதமான எதிர்மறை உணர்வு (அல்லது நேர்மறை உணர்வாக இருந்தாலும்) உங்கள் உடல் மீது இருந்தாலும், பேசாமல் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள், சுத்தமாகக் கைவிட்டு விடுங்கள்!

முதல்படி - உடலைச் சுத்தப்படுத்துதல்:

உடலைச் சுத்தப்படுத்துதல் என்றால் என்ன?

நமக்கு நிறைய இடையூறுகள், சக்தித் தடைகள், மனச் சிக்கல்கள் உள்ளன. இவை எல்லாமே நமது புற உடல் அமைப்புச் சார்ந்தவை. இந்தச் சக்தித் தடைகள், இடையூறுகளை நீக்குவதே உடலைத் தூய்மை செய்தல்.

சக்தித் தடைகளும், இடையூறுகளும் எவ்வாறு நம் உடலில் உருவாக்கப்படுகின்றன?

குழந்தைப் பருவத்திலிருந்தே, நமது இயல்பான உணர்வுகளை ஒடுக்கும்படியாக நாம் கற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாம் விரும்புவதை, இந்தச் சமுதாயத்தில் வெளிப்படுத்த முடிவதில்லை.

உதாரணமாக: உங்களுக்குக் கோபம் வருகிறது. உடனே நமது உடல் போரிடுவதற்கான ரசாயனங்களை உற்பத்தி செய்து விடுகிறது. உடல், ஒரு மனிதனைத் தாக்குவதற்கான ஆற்றலை உற்பத்தி செய்து விடுகிறது!

ஏனென்றால், சினம் என்பது எல்லா விலங்குகளுக்கும், வாழ்வதற்குத் தேவையான அடிப்படைக் கருவி. இன்னொருவருடன் மோத உடல், உங்களைத் தயார்ப்படுத்துகிறது.

ஆனால் நமது நாகரிக உலகில், நாம் நமது சினத்தை வெளிப்படுத்தவே வழியில்லை.

சினத்திற்கு காரணமான மற்ற ஆள், உங்களைப் பயப்படுத்துகிற ஆளாக இருக்கலாம் - உங்கள் தலைவர் அல்லது மனைவி! ஆகவே, உற்பத்தியான சக்தியெல்லாம் பயன்படுத்தப்படாமல் உடலிலேயே தேங்கி விடுகிறது.

அடக்கப்பட்ட இந்த அதிகப்படியான சக்தி, உங்கள் உடலில் தடுக்கப்பட்டு, சக்தி ஓட்டம் இல்லாமல், தொல்லைகளை ஏற்படுத்தி விடுகிறது. சக்தித் தேக்கம் பிற்கால நோயாக வடிவெடுக்கிறது.

ஆசை, பயம், துக்கம் - போன்ற எல்லா உணர்வுகளும் இதே தொல்லையைத்தான் உண்டாக்கி விடுகின்றன.

உங்கள் உடலில் தோன்றும் உணர்வுகளை, பெரும்பாலான சமயங்களில், வெளிப்படுத்த நீங்கள் அச்சப்படுகிறீர்கள். உங்கள் உடலுக்கு நாகரிக உலகின் மொழி தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். சமுதாயத்தின் விதிமுறைகளை இந்த உடலால் அடையாளம் காண முடிவதில்லை என்று நினைக்கிறீர்கள்.

"உடலைத் தன் விருப்பத்திற்கு விட்டால், என்ன நடக்குமோ யார் கண்டார்கள்?" என்ற எண்ணம் நமக்குள் எழுகிறது. அதனால்தான் அதைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியிருக்கிறது.

தொடர்ந்து இப்படியே உணர்வுகளை ஒடுக்கிக் கொண்டேபோனால், அவை, உடலில் அடைப்புகளை ஏற்படுத்துவதோடு, மனச் சிதைவுக்கும் இட்டுச் சென்றுவிடும்! தொடர்ந்து சினத்தை அடக்கிக் கொண்டே வந்தால், அது நரம்புத் தளர்ச்சியில் போய் முடிந்துவிடும்!

அதேபோல, மனநிலை பாதிக்கப்பட்டாலும் அது உடல் நலக்கேட்டை உற்பத்தி செய்துவிடும்! நோய் மட்டும் அல்ல, ஒற்றைத் தலைவலி, தோல் ஒவ்வாமை, குடல் புண் போன்றவையும் அதன் விளைவுகளே!

நமது உடலில் தோன்றும் 80% நோய்கள் மனச் சிதைவினால் ஏற்படுவதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடல், மன நிலைகளே இந்த நோய்களுக்குக் காரணம்.

இந்தப் புத்தகத்தின் பிற்பகுதியில், உங்கள் உடலில் ஏற்படும் அழுத்தம், அடைப்புகள் கரைந்து காணமற் போய் விடுவதற்கான தியான முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

இந்த அடைப்புகள் அகன்றவுடனே, உங்கள் உடல் எவ்வாறு இயல்பாக மலர்ந்திருக்கும் என்பதை நீங்களே கண்டுகொள்ளலாம்.

உங்கள் உடல் மேலும் அழகுடையதாக, மேலும் புனிதத் தன்மை கொண்டதாகத் தோன்ற ஆரம்பித்து விடும்.

நீங்கள் உங்கள் உடல் அல்ல.

ஆனால் உடல் இருப்பது உங்களுக்கு உதவுவதற்காக! அழகான, நேசமான உறவை உங்கள் உடலுடன் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அழுத்தப்பட்ட உணர்வுகள் மட்டுமின்றி, மோசமான பழக்கவழக்கங்களும், உடலின் தொல்லைகளுக்குக் காரணமாகிவிடும்.

உடல், சுத்தமானதொரு இயந்திரம்.

நாம் உண்பது உடலைப் பாதிக்கும். உறக்கம், உடற்பயிற்சி, உணவு எல்லாமே நமது உடலைப் பாதிக்கின்றன.

நான் முன்பு குறிப்பிட்டதுபோல, நோய்கள், உங்கள் விருந்தாளிகள். கவனமற்ற, அக்கறையற்ற காரியங்களால் நாம் நோய்களை வரவழைத்துக் கொள்கிறோம்.

உதாரணத்திற்கு, காரமான உணவை உண்டவுடன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. உங்கள் உடல் அதை எதிர்க்கிறது. "என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை," என்கிறது.

நீங்கள் அதையெல்லாம் கவனிக்கிறீர்களா?

இல்லையே!

நள்ளிரவு வரை நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், உங்களது உடல் அமைப்பு முழுவதும் அலறுகிறது! "எனக்கு ஓய்வு வேண்டும்!" என்கிறது.

வழக்கம்போலவே, நீங்கள் அதை அசட்டை செய்து விடுகிறீர்கள்.

தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் உடலுக்கென்று தனி அறிவு இருக்கிறது. தனி புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆனால் உங்கள் உடலின் புத்திக் கூர்மையுடன் நீங்கள் இணக்கம் கொள்வதே இல்லை. உங்கள் உடல் தொடர்ந்து சமிக்ஞைகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்தச் சைகைகளை அடையாளம் கண்டு கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை.

நாம் ஏன் சாப்பிடுகிறோம்?

சாதாரண எளிய விளக்கம் “சக்தி பெற,” என்பதுதான்.

ஆனால் உங்கள் உணவு, உங்களைச் சக்தி பெறச் செய்கிறதா?

உணவு உண்டவுடன் சக்தி பெறுகிறீர்களா? அல்லது உறக்கம் வருகிறதா? நம்மில் பெரும்பாலோர்க்குத் தூக்கம்தான் வருகிறது!

காரணம், நாம் தேர்ந்தெடுக்கும் உணவு மோசமானது. வயிறு நிறைந்து விட்டது என்று வயிறு சொன்ன பிறகும், உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றையும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.

வயிற்றை ஒரு குப்பைத் தொட்டிபோல் கருதிக் கண்டதையெல்லாம் அதற்குள் போட்டுக்கொண்டே வருகிறோம். நமது வயிற்றை நாம் ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு உணவின் போதும், நாம் நமது வயிறுக்குச் சிரமம் கொடுக்கிறோம்.

அதனால்தான், உண்ட பிறகு உற்சாகம் தோன்றுவதே இல்லை. இதில் அதிசயம் என்ன இருக்கிறது? அளவு கடந்து உண்டால், உடற்பயிற்சியும் இல்லை என்றால் - அது உடலின் மந்தத் தன்மைக்குத்தான் இட்டுச் செல்லும்.

மந்தமான உடல், தியானத்திற்குத் தகுதியற்றது.

அதுமட்டுமல்ல, நமது சக்தி நிலைகள் கீழே போய் விடுவதால், நோய்கள் நம்மை எளிதில் தாக்குக்கின்றன.

உடற்பயிற்சி உங்களை விரிவுபடுத்தும். உடற்பயிற்சி செய்யும்போது, உங்களது உடலின் ஒவ்வொரு உயிருள்ள 'செல்' லும் விரிவடையும்.

உங்கள் நுரையீரல் முழுவதும் பிராணவாயுவால் நிரப்பப்படும்போது, வெளியேற்றப்படும் கரியமில வாயுவோடு, உடலின் அழுக்குகள் எல்லாம் வெளியேற்றப்பட்டுவிடும்.

நமது வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்வதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ நமக்கு நேரமில்லை. நாம் எதை ஓய்வு என்று நினைக்கிறோமோ, அது ஓய்வே அன்று.

நம்மில் எத்தனைபேர் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் காலையில் கண் விழிக்கிறோம்?

நீங்கள் சரியாக ஓய்வெடுத்திருந்தால், காலையில் நடனமாடிக் கொண்டல்லவா குளியலறைக்குப் போவோம்! அதற்கு மாறாக, காலையில் அலாரம் அடித்தால், நாம் என்ன செய்கிறோம்? அதை அழுத்தி விட்டு, மறுபடியும் தூங்கப் போகிறோம்!

உண்மையான உறக்கம் என்பது உடல் பூரணமாக ஓய்வெடுப்பதுதான். உடலின் இறுக்கமெல்லாம் வெளியேறி விட வேண்டும்.

நமது உடல், உறக்கத்தின் போது, உடல் கட்டமைப்பின் சகல பழுதுகளையும் சரிபார்த்து, ஒழுங்குபடுத்திவிட வேண்டும்.

இடையூறற்ற,
கனவுகளற்ற,
ஆழமான உறக்கம்
நமக்கு அடிக்கடி கிடைக்கிறதா என்ன?

அப்படி கிடைத்தால் அது அபூர்வம்! அப்படி கிடைக்கிற நாள்தான், நாம் உண்மையாகத் தூங்கிய நாள்!

இவற்றிற்கும் தியானத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் வியப்படையலாம். இதை ஆராய்வதற்கு, நமக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக - உடல் நிலை சரியாக இருப்பது, தியானத்தில் ஆழ்ந்து செல்வதற்குத் துணை புரியும்.

அதேசமயம், தியானப் பயிற்சி, நன்றாக ஓய்வு எடுக்கவும் உதவும். உங்கள் உறக்கத்தைச் செம்மைப்படுத்துவதற்கான தியான உத்திகளையும் நாம் பார்க்கப்போகிறோம். உறக்கத்தின் தரம் மேம்படும்போது, நீங்கள் விழித்திருக்கும் காலத்தின் உற்பத்தித் திறனும் இயல்பாகவே வளர்ச்சி அடைந்துவிடும்.

இரண்டாவது படி - எண்ணங்களின் மீதான செயல்பாடு:

எண்ணங்கள், நமது வாழ்வில் சபலங்களைக் கிளறி விடும் தன்மை வாய்ந்தவை.

பெரும்பாலான சமயங்களில் நமது எண்ணங்களின் மீது நமக்குக் கட்டுப்பாடே இல்லை.

நமது எண்ணங்கள், நம்மை அவற்றின் விருப்பப்படி இழுத்துச் செல்கின்றன. உங்கள் மனத்தில் தோன்றும் ஒழுங்கற்ற எண்ணங்களை உரக்கச் சொன்னால், உங்களுக்கே வெட்கமாகவும், அவமானமாகவும் தோன்றும்!

காரணம், நமது எண்ணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாதவை!

நிகழ்காலத்தோடு எந்தச் சம்பந்தமும் அற்றவை ;

அர்த்தமற்றவை! - என்றாலும், நமது வாழ்வில் அவற்றைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். அப்படிப்பட்ட எண்ணங்களாலேயே நாம் வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்!

ஒரு சின்ன கதை:

ஒரு நாட்டில், தீர்க்கதரிசனம் சொல்லக்கூடிய மனிதர் ஒருவர் இருந்தார்.

அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாட்டு மன்னர், அவரைச் சோதித்துப் பார்க்க விரும்பினார்.

அவர், அவரைப் பரபரப்பான துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே, தினத்திற்கு நூற்றுக்கணக்கான கப்பல்கள் வருவதும் போவதுமாக இருக்கும்.

இன்று எத்தனைக்கப்பல்கள் இங்கிருந்து பயணம் புறப்படப் போகின்றன என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டார் மன்னர்.

மூன்று கப்பல்கள் அரசே, என்றார் அந்தத் தீர்க்கதரிசி.

தொடர்ந்து அவர், இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், மூன்று கப்பல்களே இந்தத் துறைக்கு வருகின்றன; மூன்று மட்டுமே புறப்பட்டுப் போகின்றன, என்றார்.

மன்னன் வியப்படைந்து, என்ன சொல்கிறீர்கள்! எந்தக் கப்பல்கள் அவை? என்றார்.

பணக் கப்பல், அதிகாரக் கப்பல், காமக் கப்பல்... அரசே! எல்லா மக்களும், உங்களையும் சேர்த்துத்தான், இந்த மூன்று கப்பல்களில் பயணம் செய்துதான் வாழ்வைக் கழிக்கிறீர்கள், என்றார் தீர்க்கதரிசி. இதுதான் உண்மை.

பெரும்பாலான நேரங்களில் நாம் பணம், அதிகாரம், காமம் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது எண்ணங்களுக்கு நாம் வேறு பெயர் சூட்டினாலும், கடைசியில் அவை இந்த மூன்றில் ஒன்றில்தான் அடங்கும். இங்கே காமம் என்பது எல்லாவித ஆசைகளையும் குறிப்பது.

யோசித்துப் பாருங்கள்.

எல்லா நேரத்திலும் நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

மேலே குறிப்பிட்ட மூன்றில் ஒன்றைத்தான்!

நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுவது, பணத்திற்காகவும், பதலிக்காகவும்.

வாழ்வில் எவ்வளவு முறை உங்களது எண்ணம் சத்தியம், அழகு, நன்மையைப் பிரதிபலிக்கிறது?

அதைப் பற்றி என்ன தேவை வந்தது இப்போது? என்று நீங்கள் நினைக்கலாம்...

என் வாழ்வு சத்தியத்தைப் பொறுத்ததா? இல்லை உலக கவர்ச்சிகளைப் பொறுத்ததா?

எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? எவ்வளவு பதவி பலத்தை அதிகரிக்கலாம்? என்பவை சுற்றியே என் வாழ்வு அமைந்திருக்கிறதா?

இவற்றையெல்லாம் தாண்டிய ஒரு உண்மை. வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றவை நம் எண்ணங்கள்.

நீங்கள் ஏதாவது ஒன்றின் மீதே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், அது உங்களது மனநிலையை மட்டுமல்ல, வாழ்வையே மாற்றிவிடும்.

நீங்கள் எப்பேதும் அழகைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உங்களது வாழ்க்கை அதிக அழகு உடையதாக மாறிவிடும்.

மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் மேலாக...

உங்கள் மனத்திற்குள் எத்தகைய எண்ணங்கள் வருகின்றன. வெளியே போகின்றன என்பதில் விழிப்புணர்வோடு இருங்கள்.

இப்போது உங்கள் மனம், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நுழையும், திறந்து கிடக்கும் வீடு போலிருக்கிறது.

அதனால் எந்த எண்ணமும், எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். அவை ஏற்கனவே இருக்கும் எண்ணங்களோடு சண்டையிட்டு மனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, அவை விரும்பும் காலம் வரை மனத்தை அலைக்கழிக்கலாம்.

பிறகு அவை எப்போது வேண்டுமானாலும் மனத்தை விட்டுவிட்டு இறங்கி விடலாம். அவற்றின் விருப்பம்போல்

உங்களுக்குள் பிரவேசித்து, உங்களது வாழ்வைப் பாதித்து, மனத்தையும் பாதிக்கும் எண்ணங்களின் மீது, உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை.

உங்களது எண்ணங்களை, சும்மா பார்த்துக் கொண்டிருங்கள்.

ஒருவகையான எண்ணம் உங்களுக்குள் நுழையும் போது, உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

கோபம், காமம், பேராசை போன்ற எண்ணங்கள் மனத்தில் புகும்போது, உங்களது உள் கட்டமைப்பில் சில அசௌகரியங்களை அவை ஏற்படுத்தி விடுகின்றன.

எப்போதெல்லாம் அகங்காரம் மேலெழுகிறதோ,
அப்போதெல்லாம் ஒருவித அசௌகரியத்தை நீங்கள்
உணர்வீர்கள்.

மகிழ்ச்சியும், நிம்மதியும் தரவல்ல எண்ணங்களை மட்டும் கவனமாகப் பாருங்கள். இவற்றை மட்டுமே பற்றிக் கொண்டு, மற்றவற்றைத் தூக்கி வெளியே வீசிவிடுங்கள்.

உங்கள் மனத்தின் காவலனாக மாறிவிடுங்கள்.

உங்கள் எண்ண ஓட்டத்தைக் கவனமாகக் கவனியுங்கள்.

உங்கள் எண்ணங்களோடு எவ்வளவு அழுத்தமாக உங்கள் அடையாளம் அமைந்துவிடுகிறது என்பதைப் பாருங்கள். எண்ணங்கள் உங்களது உணர்வற்ற மனத்தின் ஆழியாழத்திலிருந்து பிறப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.

உணர்வற்ற மனத்தில் பிறக்கும் எண்ணங்களை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால், உங்களது விழிப்புணர்வுப்பூர்வமான வாழ்வின் போக்கையும் உங்களால் மாற்றிவிட முடியும்!

இப்படி முயற்சி செய்து பாருங்கள்: உங்களது விழிப்புணர்வு வாழ்வின் சில அம்சங்களை நீங்கள் மாற்ற விரும்பினால், உங்களது கோபம் அல்லது பொறாமையை ஒழிக்க விரும்பினால் உறங்கப் போகுமுன், அவற்றை மாற்றும்படியாக உங்களது மனத்திற்கு ஆலோசனை சொல்லுங்கள்.

அவ்வாறு தொடர்ந்து ஆலோசனை சொல்லிக் கொண்டே வர, உங்களது நிதர்சன வாழ்வு அந்தத் திசையில் மாறிச் செல்வதைக் கண்டு நீங்களே வியப்படைவீர்கள்!

மூன்றாவது படி - உங்கள் உணர்வுகளின் மீதான செயல்பாடு:

உங்கள் உலகை, உங்கள் உணர்வுகளே தீர்மானிக்கின்றன.

நம்புகிறீர்களோ இல்லையோ, ஒப்புக்
கொள்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் எல்லோருமே
கடவுள்தான்!

உங்களது உணர்ச்சிகள், உணர்வுகள் கொண்டே உங்களது உலகை நீங்கள் படைத்துக் கொள்கிறீர்கள்.

மிகவும் தெளிவாக இருங்கள்: உங்களது விழிப்புணர்வின் தரம் என்னவோ, உங்களது வாழ்வும் அதே தரத்தைக் கொண்டதாகத்தான் இருக்கும்!

உங்களது உணர்ச்சிகள் தெளிவாகவும், நேர்மறையாகவும் இருக்குமானால், உலகம் முழுவதுமே உங்களுக்கு அழகானதாகத் தோன்றும். இயற்கை உங்கள் மீது தனது ஆசிகளைப் பொழியும்.

உங்களிடம் அன்பு நிறைந்திருந்தால், நீங்கள் எங்கும் அன்பையே காண்பீர்கள்.

உங்களிடம் வெறுப்பே நிறைந்திருந்தால், நீங்கள் வெறுப்பையே எங்கும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

இது ஒன்றும் நீதிக் கதையல்ல; உண்மைக் கதை.

வரையறைக்குட்பட்ட குறைவான புரிந்து கொள்ளும் திறன் இருப்பதால், நம்மால் இதை உணர முடிவதில்லை.

நாம் காரணங்களை எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம். உண்மை நிலைமை என்னவென்றால், நமது வாழ்வின் இன்றையத் தரத்திற்கு 100% நாமே பொறுப்பு.

உங்கள் உணர்ச்சிகள் மீது நீங்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டால், மேலே சொன்னது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்குப் புரியவரும்.

நமது உணர்ச்சிகள் நம்மை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கின்றன என்பதை நாம் உணர்வதே இல்லை.

நமது செயல்களை எல்லாம் கட்டுப்படுத்துவது நமது மனம்தான். நாம் முடிவுகள் எடுப்பதெல்லாம் நமது புத்திசாலித்தனத்தால்தான் என்று நினைக் கிறோம். உண்மையில், நமது வாழ்வின் பெரும்பகுதியைத் தீர்மானிப்பது நமது உணர்ச்சிகளே.

உங்கள் உணர்ச்சிகளைக் கையாள்வதில் மூன்று படிகள் இருக்கின்றன.

அ). உங்கள் வலுவான உணர்ச்சிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்:

எது உங்களை இயக்குகிறது?

உங்கள் செயல்களை எந்ததெந்த உணர்ச்சிகள் கட்டுப்படுத்துகின்றன?

உங்கள் வாழ்வு, வெறுப்பு ஆக்கிரமிப்பு சினம் ஆகியவற்றைச் சுற்றிச் சூழ்ந்து இயங்குகிறதா?

காரணமே இல்லாமல் உங்களுக்குச் சோர்வு தோன்றுகிறதா?

உங்களுக்கு அன்பு செலுத்துவது முக்கியமா? சண்டை போட்டுக் கொள்வது முக்கியமா?

உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். முதலில் உணர்ச்சிகளை நீங்களே அங்கீகரிக்க வேண்டும் - இல்லாவிட்டால், அவற்றை எவ்வாறு நீங்கள் மாற்றப்போகிறீர்கள்?

நீங்கள் வெறுப்பான சூழலில் வாழ நேர்ந்தால், எதிர்மறை உணர்ச்சிகளோடு உங்களுக்கு நெருக்கம் ஏற்பட்டுவிடும். உங்களுக்கு எதிர்மறை உணர்ச்சிகளின் நெருக்கம் தேவைப்படுகிறது. நீங்கள் தாக்கு பிடித்து வாழ்வதற்கு அதனுடைய நெருக்கம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் உங்களுக்குரிய சக்தியைப் பெறுவதே அந்த எதிர்மறை உணர்ச்சிகளிடமிருந்துதான்.

போர்க் காலங்களில் குற்றங்களும் தற்கொலைகளும் மிகவும் குறைந்து விடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காரணம், நமது எதிர்மறை உணர்வுகள் வெளிப்பட, ஒரு திறந்த மேடை கிடைத்து விடுகிறது.

அதனால் தனிப்பட்ட முறையில், குற்றம் புரியவோ, தற்கொலை செய்து கொள்ளவோ தேவையில்லாமல் போய்விடுகிறது!

"ஒரு நாட்டைச் சக்தி மிகுந்ததாக ஆக்க வேண்டுமானால், எதிரிகளை உற்பத்தி செய்துவிடுங்கள்," என்று ஹிட்லர் கூடச் சொல்லியிருக்கிறார்! அந்தப் பகைவர்கள் உண்மையாக இருக்க வேண்டியதே இல்லை. கற்பனைப் பகைவர்கள் இருந்தாலே போதும்!

மக்கள் வெறுப்புணர்வில் இருக்கும் நேரத்தில், தங்களை வலிமை மிக்கவர்களாகவே உணர்கிறார்கள். அவர்கள் கலகம் செய்யும் போதும், தங்களைச் சக்தி மிகுந்தவர்களாகவே உணர்கிறார்கள். நமது எல்லாச் ச க்திகளும் எதிர்மறை உணர்வாக மாறி விடுகின்றன. சலிப்புணர்வுகூட, சினத்தால் விளைவதுதான். உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது, அது சி னம்போலத் தோற்றமளிக்கிறது.

அதை ஒடுக்கும்போது, அது சலிப்பாக மாறுகிறது. இரண்டுமே எதிர்மறை உணர்வுகள்தாம்.

நமது எதிர்மறை உணர்ச்சிகளை நாம் வெளிப்படுத்தும் போது, ‘எனக்கு எதிராக அவர்கள்’ என்று நினைக்கும்போது, நம்மைத் தனிமைப்படுத்தும் உணர்ச்சி களை நாம் வளரவிடும்போது, அகங்காரம் மிகவும் ஆற்றல் கொண்டதாக அமைந்துவிடுகிறது. நாம் சண்டையிடும் நிலையில் இருக்கும்போது, நாம் மகிழ்ச்சியடைவது அதனால்தான்.

நேர்மறை உணர்வுகள் நம்மை மென்மையாக்கி விடுகின்றன. அன்பு, மகிழ்ச்சி, கருணை போன்றவை மனத்தின் மென்மையான நிலைகள்.

இந்த உணர்வுகளை நாம் அனுபவிக்கும்போது, நமக்கும் உலகிற்குமான எல்லைக்கோடு மிக மெல்லியதாகிவிடுகிறது. ஆணவத்தின் சக்தியும் குறைந்து விடுகிறது.

அதனால்தான், இந்த உணர்வுகளுக்கு நாம் அஞ்சுகிறோம். மனத்தின் அடியாழத்தில், நாம் அன்பு செலுத்த அஞ்சுகிறோம் - காரணம், அன்பு நிலையில், நாம் ஆணவத்தைச் சரணாகதி செய்ய நேர்கிறது!

ஆன்மிக வழியில், ஆணவத்தை இழக்கும் செயல்பாடுதான் அது. நீங்கள் பலவீனப்பட்டு விடுகிறீர்கள் என்பதால்தான் அன்பு செய்யக்கூட அஞ்சுகிறீர்கள் - இந்த நிலையில் எவ்வாறு நீங்கள் தியானத்தை நோக்கி, அதன் உள்ளே பிரவேசிக்க முடியும்?

ஆ). நேர்மறை உணர்வுகளின் மீது கவனம் செலுத்துங்கள்:

உங்களது ஒரு சாதாரண நாள் எப்படி இருக்கிறது? சற்றே நினைத்துப் பாருங்கள். நாள் முழுவதும் நமக்குள் எத்தனையோ உணர்வுகள் பாய்கின்றன. காலையில் கண் விழிக்கும்போது மகிழ்ச்சியாகவோ அல்லதுாதாரணமாகவே வாத்தான் கண் விழிக்கிறீர்கள்.

பிறகு மனைவி காப்பிக் கொண்டு வருகிறார். அதை மேசை மேல் வைக்கும்போது, கொஞ்சம் சிந்திவிடுகிறது - ச ட்டென உங்களுக்குக் கோபம் வந்து விடுகிறது.

சிற்றுண்டி முடித்தவுடன் பழையபடி நல்ல மன நிலைக்கு வந்துவிடுகிறீர்கள். வேலைக்குப் போகும் வழியில் வாகன நெரிசலில் சிக்கிக் கொள்ள - யாரையாவது கொன்றுவிட வேண்டும் என்பதுபோல கோபம்!

அலுவலகத்தில், திட்டமிட்டபடி வேலை முடிவதில்லை - மறுபடியும் மன இறுக்கம்.

இப்படியே....ஒவ்வொரு நிமிடமும் வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களைத் தாக்குகின்றன. நீங்கள் வாழ்வது, தலைகீழாகப் பறக்கும் சக்கரக் குடைராட்டினத்தில் பறப்பதுபோல, எவ்வளவு நேரந்தான் ஒத்துப்போவது?

நல்லவேளையாக, நாம் அனுபவிக்கும் உணர்வுகள் எல்லாம் மோசமானவை அல்ல. ஒவ்வொரு நாளிலும் நாம் சில தருணங்களில், அமைதியாகவோ, மகிழ்ச்சியாகவோ, தியானநிலையிலோ இருக்கத்தான் செய்கிறோம்.

சாதாரணமாகத் தினசரி செய்யக் கூடியவை:

உங்கள் தோட்டத்தில் அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தேநீர் அருந்துவது.

குளிப்பது.

இசை கேட்பது.

குழந்தைகளோடு விளையாடுவது.

ஒவ்வொரு நாளும், நம் ஒவ்வொருவருக்கும் இந்தத் தருணங்கள் வாய்க்கின்றன.

ஆனால் நம்மில் எத்தனைபேர் இவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம்.

"இன்றைய நாள் எப்படி கழிந்தது?" என்று யாராவது நம்மைக் கேட்கும்போது, உடனே நமக்கு நினைவிற்கு வருவது, வாகன நெரிசலும், சிந்திய காப்பியும், தேங்கிப்போன வேலையும்தான்.

ஒரு மாறுதலுக்காக நாம் நல்லவற்றையே நினைத்து, சுகமான அனுபவங்களிலேயே ஏன் தினசரி கவனம் செலுத்தக் கூடாது? இந்தச் சோதனையைச் செய்து பாருங்கள்:

ஒரு நாளில், 24 மணி நேரத்தில் நடைபெற்ற நல்லவைகளை மட்டும் நினைத்துப் பாருங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு நன்றி பாராட்டுங்கள்:

வேலைக்குப் புறப்படும்போது மழை பெய்யவில்லை என்பதற்காக; நமது வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கும் மஞ்சள் மலர்களுக்காக; இன்று வீட்டு வேலைக்காரர் விடுமுறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக, பாருங்களேன்! இவற்றையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.

வேலைக்காரர் ஒரு நாள் வராமல் போனாலும், அதை நாம் என்றும் மறப்பதில்லை - அவர் வருவதை நாம் நினைவு கூர்கிறோமா? நம் மனதளவிலாவது, அவருக்கு நன்றி சொல்கிறோமா?

"ஒவ்வொரு சுகமான அனுபவத்தையும் நினைவு கூறுங்கள்," என்று நான் சொல்லும்போது, அதை நிச்சயம் செய்து பார்க்க வேண்டும். உண்மையான ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

24 மணி நேரமாவது செய்து பாருங்களேன்! அப்போது, உங்களுடைய வாழ்வு எவ்வாறு உருமாற்றம் அடைகிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். சுகமான அனுபவத்தை ஒருமுறை சுவைக்க ஆரம்பித்து விட்டால், மறுபடியும் உங்களை என்றும் சலிப்பில் ஆழ்த்திக் கொள்ளவே மாட்டீர்கள்.

இந்தப் பயிற்சி விளையாட்டுக்கல்ல. இது நாம் வாழ்வதற்கான ஒரு சிறந்த தியானமுறை.

வாழ்வின் மீது நீங்கள் கல்லெறிந்தால், அது உங்கள் மீது கல்லெறியும். வாழ்வை மலர் கொண்டு வரவேற்றால், உங்களுக்கு மலர்களே கிடைக்கும். பிறகு, வாழ்வை நன்றியோடு வரவேற்பதற்கான தியான முறைகளை நீங்கள் பெறப்போகிறீர்கள்.

இ). எதிர்மறை உணர்வுகளை மாற்றக் கற்றுக் கொள்ளுங்கள்:

“தினசரி நான் அனுபவிக்கும் எதிர்மறை உணர்வுகளுக்கு என்ன நேர்கின்றன,” என்று நீங்கள் என்னிடம் கேட்கலாம். அவ்வப்போது சில சுகமான நேர்மறை உணர்வுகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாலும்கூட, எதிர்மறை உணர்வுகள் உங்களுக்குள்ளேயேதான் இருக்கும்! அவை ஒன்று திரண்டு கொண்டே இருக்கும்.

தியானத்தின்மூலம், பழைய அடைப்புகளையெல்லாம் உங்களால் கரைக்க முடிந்தாலும்கூட, புதிய அடைப்புகள் ஏற்பட்டுவிடாமல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்! ஒவ்வொரு வினாடியும் அதற்கான புதிய சூழல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

சான்றாக சிலர் உங்கள் சினத்தை மேலும் மேலும் கிளறிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். நமது உடலில் அதிகப்படியாகச் சுழன்று கொண்டிருக்கும் சக்தியை என்ன செய்யப்போகிறீர்கள்? அந்த எதிர்மறை உணர்வுகளை, நேர்மறை உணர்வுகளாக மாற்றுக் கற்றுக்கொள்ளுங்கள்.

மறந்து விடாதீர்கள், சக்தி, நடுநிலையானது.

சினம் நல்லதுமன்று; தீயதுமன்று.

காமம் நல்லதுமன்று; தீயதுமன்று. இவை எல்லாம் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்.

அதை ஆக்கத்திற்கோ, அழிவிற்கோ பயன்படுத்துவது உங்களைப் பொறுத்தது.

ஒரு குழந்தையின் கையில் கிடைத்த கத்தி கெடுதல் செய்வதுபோலவும், அறுவை மருத்துவரின் கையில் உள்ள கத்தி நன்மை செய்வதுபோலவும் ஒரே கத்தியை முற்றிலும் மாறுபட்ட விளைவு தரும்படியாக நீங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் ஆற்றலைச் சரியான வழியில் செலுத்த நீங்கள் கற்றுக்கொண்டால், உங்கள் சினத்தைப் படைப்பாற்றலாக நீங்கள் மாற்றிவிட முடியும், உங்கள் ஆற்றல்களையெல்லாம், கலை, இசை, விளையாட்டுத் துறைகளில் திருப்பி விடுங்கள்.

ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நடனமாடுங்கள்.

இவையெல்லாம் சக்தியின் பாதைகள், சினத்தைப்போலவே!

ஒரே வித்தியாசம், இவையெல்லாம் படைப்பாற்றல் வழிகள். இவற்றைத் திருப்பிவிடுங்கள். உங்கள் சாதாரண வாழ்வை படைப்பாற்றல் மிக்க பரிமாணத்திற்கு உயர்த்துங்கள்.

இந்த வகையில், உங்களிடமிருக்கும் அழிக்கும் ஆற்றல்களை எல்லாம் படைப்பாற்றல்மிக்க, நேர்மறை ஆற்றல்களாக மாற்றி விடலாம். முழுப் பயனைப் பெறலாம்.

நேர்மறை உணர்வுகள் மீது கவனம் செலுத்த செலுத்த, உங்களுடைய வாழ்வு தானாகவே நல்வழியில் மாறிவிடுவதை நீங்கள் காணலாம்.

நீங்கள் அன்பை உணரும்போது, நீங்கள் அன்பையே வழங்குவீர்கள். உங்களுக்குக் கிடைப்பதும் அன்பாகவே இருக்கும். அது ஓர் அழகான வட்டச் சுழற்சி.

நீங்கள் அதை அனுபவித்தால் தவிர, அதை உங்களால் நம்ப முடியாது. ஆனால் அது மெய்யாகவே நிகழக் கூடியதுதான்.

நீங்கள் இந்த மனோபாவத்துடன்தான் பிறந்திருப்பதாக நினைத்துக் கொள்ளாதீர்கள். “ஆஹா, அவர் எவ்வளவு அதிர்ஷ்டமானவர்! எப்போதும் எப்படி மலர்ந்த முகத்துடன், புன்முறுவலுடன் நடந்துபோகிறார்! நான்தான் இப்படி மன இறுக்கத்துடன் அல்லல் படுகிறேன்,” என்றெல்லாம் சொல்லாதீர்கள்.

வாழ்வை நேர்மறையாக புரிந்துகொள்ளும், எதிர்கொள்ளும், பக்குவத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். நீங்கள் மகிழ்ச்சியில் நிறைந்து திளைத்துக் கொண்டிருக்கும்போது, கவலை உங்களைக் கண்டு அஞ்சும்! சினத்தால் உங்களைத் தொடவும் முடியாது. உங்களுக்குள் ஒரு பரவச நிலையை உருவாக்கிக் கொண்டால்தான், தியானத்தில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியும்.

உங்கள் வாழ்வை, அன்பாலும், சிரிப்பாலும், நன்றி உணர்வாலும் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அப்போதுதான், வாழ்க்கையே தியானமாகும்.

வாழ்வே கொண்டாட்டமாக மாறும்.