KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/பிரத்யாகார தியானம்Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

பிரத்யாகார தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்தத் தியானமுறையைப் பற்றி :

வெளியுலகிலிருந்து உங்களை நோக்கி வரும் சமிக்கைகளைத் தடுத்துவிடுவதுதான் இந்தத் தியானம்.

உலகிலிருந்து நீங்கள் பெறுவன எல்லாம், ஐம்புலன்கள் (பார்வை, ஒலி, சுவை, மணம், தொடுவுணர்வு) வழியாகவே உங்களை வந்தடைகின்றன:

புலன்கள் வழியாக வரும் எல்லா அனுபவங்களையும் இந்தத் தியானம் தடுத்து மூடிவிடுகிறது. உலகிலிருந்து விடுபட்டு உங்கள் நீங்கள் மூடிக் கொள்ளும்போது, நீங்கள் உங்கள் உடலிலிருந்தும் விட்டுபட்டு மூடிக் கொள்கிறீர்கள். அப்போது, உங்கள் சக்தி உள்நோக்கித் திரும்பும்.

செயல்முறை விளக்கம் :

இதை எங்கும், எப்போது செய்யலாம்.

நீங்கள் எங்கிருந்தாலும் சரி, புலன்கள் மூலமாக உங்களுக்குள் வரும் சமிக்ஞைகளைக் கவனியுங்கள். தோட்டத்திலுள்ள ஒரு மலரை நீங்கள் பார்க்கலாம். பறவைகளின் பாட்டைக் கேட்கலாம். கால் மீது ஏறும் ஓர் எறும்பின் செயலையும் உணரலாம்.

என்ன செய்ய வேண்டும்?

வெறுமனே கண்களை மூடிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கண் பார்வையற்றவராகவும், பறவையின் பாடலைக் கேட்க முடியாதவராகவும், எறும்பு ஊர்வதை உணர முடியாதவராகவும் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உறைந்து போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். அசைய முடியாதபடி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உணர்வில் ஆழ்ந்து செல்லுங்கள்.

உங்களால் அது முடியும்!

எப்படி?

ஒரு வினாடி நேரம் மூச்சை நிறுத்திப் பாருங்கள். உங்கள் புலன்கள் தாமே மூடிக் கொண்டுவிடும். மூச்சு நின்றுவிடும்போது, உணர்வுகளும் நின்று விடுகின்றன.

மூச்சை நிறுத்திவிட்டுக் கவனித்துப் பாருங்கள்.

உங்கள் தோலில் ஏற்பட்ட நமைச்சல் தெரிகிறதா? தூரத்து ஓசை கேட்கிறதா? உங்கள் உடல் முற்றிலும் உறைந்து போய் விட்டது. உங்களால் கையைத் தூக்கக்கூட முடியாது!

நிம்மதியடைவதற்கு இது ஒரு அருமையான உத்தி.

நீங்கள் வெளிநோக்கிப் பாய முடியாதபோது, புலன்கள் மூலம் உணர்வுகள் பெற முடியாதபோது நீங்கள் உங்களை நோக்கி உள்ளே வீசி எறியப்படுகிறீர்கள்.

நீங்கள் ஒரு நிசப்தத் தீவாக மாறிவிடுவீர்கள்.

அந்த நிசப்தத்தில், நீங்கள் உங்களுடைய சொந்த மையத்தைக் கண்டு கொள்வீர்கள்.

அந்த நிலையில், நீங்கள் வெளியே பார்த்தாலும், எதையாவது கேட்டாலும்கூட, அவற்றை நீங்கள் உங்கள் சொந்த நிசப்த மையத்திலிருந்தே பார்ப்பீர்கள்.

ஒரு முறை அந்த இடத்தைக் கண்டுபிடித்தபிறகு, எந்தக் காரணம் கொண்டும், புலன்களின் பேரிரைச்சலால் நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீர்கள். உங்கள் மன உறுதியால், நீங்கள் உங்கள் புலன்களை மூடி அடைத்துவிட முடியும். பிறகு, உங்கள் புலன்களின் பார்வையாளராக நீங்கள் ஆகிவிடவும் முடியும்.