KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/செயல்முறை விளக்கம் :Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

செயல்முறை விளக்கம் :

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இந்தத் தியானத்தைத் தனியாகவோ, ஒரு குழுவாகச் சேர்ந்தோ செய்யலாம்.

உத்தரவிட மட்டும் ஒருவர் இருந்தால் போதும்.

ஆனால் அடிக்கடி உத்தரவிடுதல் கூடாது.

அப்படி செய்தால் உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்குள் ஏற்பட்டுவிடும்!

நீங்கள் நடக்கும்போதும், பேசும்போதும், வேலை செய்யும்போதும், நடனமாடும்போதும் - “உறைந்து விடு!” “நிறுத்து!” என்ற குரல் கேட்டதும், சட்டெனச் செயலை நிறுத்திச் சிலைப்போல நின்றுவிட வேண்டும்.

ஒரு கை மேலே உயர்த்தியபடி இருந்தாலும், வாய்திறந்தபடி இருந்தாலும் - அப்படியே இருந்துவிட வேண்டியதுதான்.

இதனை நேர்மையாகச் செய்யுங்கள். சௌகரியமான நிலைக்கு நகர்ந்து கொள்ள வேண்டாம். ஒரு கணத்தாமதமும், மிகத் தாமதம்தான்.

இதனை உங்களுக்கு நீங்களே விளையாட்டுப்போலச் செய்துகொள்ளலாம். ஓடிக் கொண்டிருக்கையில், அல்லது குளிக்கையில், தேநீர் அருந்துகையில் - சட்டென உங்களுக்கு நீங்களே உத்தரவிட்டுக் கொள்ளுங்கள், “நிறுத்து!” என்று. நிறுத்த முயலக்கூடாது. உடனே நிறுத்திவிட வேண்டும்.

ஒரு காரியத்தில் நீங்கள் முற்றிலுமாக ஆழ்ந்திருக்கும்போது, சட்டென நிறுத்தினால், அந்த நிறுத்தமே உங்களை நிலைதடுமாறச் செய்துவிடும்.

உங்கள் மையத்தை நோக்கி, நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள். ஒரு கணப்பொழுது தியான அமைதியை, மௌனத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

Portrait of Paramahamsa Nithyananda