KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/உணர்வை நிறுத்து!Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

உணர்வை நிறுத்து!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியானமும் அதற்கான செயல்முறைகளும் :

'நிறுத்துதல்' என்பது உடலின் செயலை மட்டுமே பொறுத்ததல்ல. நீங்கள் உங்கள் உணர்களையும், விருப்பங்களையும், தாமாக நிகழும் செயலை அல்லது உணர்வையும் கூடச் சட்டென நிறுத்திவிட முடியும்.

எதையாவது செய்யலாம் என்ற உணர்வு ஏற்படும்போது, சட்டென நிறுத்திவிடுவது இது. கவலையில் அழுதால் - அழுகையின் நடுவில் நிறுத்தி விடும்டி, உங்களுக்கு நீங்களே உத்தரவு போட்டுக்கொள்வது.

சட்டென நிறுத்திப் பார்த்தால் புரியும். எவ்வளவு எளிதாக நிறுத்திவிட முடியும் என்பது! அப்போது சட்டென நின்றுவிடும்! அவ்வளவுதான்.

தடுக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத தும்மல் வந்தால்கூட, பாதி வழியில் நிறுத்திவிடலாம். ஆனால் இது அடக்குவதன்று. அடக்குவது தவறு. நீங்கள் தும்மலைத் தொடர்வதை நிறுத்தினால் போதுமானது.

சினம் வந்தால், மற்றவரை அடிக்க வேண்டும் என்று தோன்றும் அளவுக்குச் சினம் வந்தால்கூட, எதையாவது உடைக்கலாம் என்று தோன்றினால்கூட, சட்டென நிறுத்தி விடுங்கள். கோபப்படுதலையும், அதைத் தொடர்ந்து வெகுண்டெழுவதையும் கவனியுங்கள். அதை நிறுத்துங்கள்.

உங்கள் குழந்தையை, மனைவியை, நண்பரைப் பார்க்கும்போது, தழுவிக் கொள்ளலாம் என்ற ஆவல் எழுந்தால்கூட - 'நிறுத்துதல்' என்ற பயிற்சியைக் கடைப்பிடிக்கும் சில நாட்களில் சட்டென நிறுத்திவிடுங்கள்! அது தவறில்லை.

நீங்கள் கவனம் செலுத்துவதை நோக்கி உங்களிடம் உள்ள சக்தி வெளியே பாய்வது இயல்பு. !

நீங்கள் பேசும்போதும் நடக்கும்போதும், உங்கள் கவனமும், சக்தியும் வெளிப் பொருள்களை நோக்கி அல்லது பிறரை நோக்கி வெளியே பாய்கிறது..

'உங்கள் கவனமே, உங்கள் சக்தி' வெளியே பாயும் சக்தியைச் சட்டென நிறுத்தினால் என்ன ஆகும்? அந்தச் சக்தி உள்ளே பாயும்.

உங்கள் சக்தி, உங்கள் கவனம், சட்டென உள்நோக்கிப் பாயும். மீண்டும் நீங்கள், உங்களது மௌன மையத்தை நோக்கித் தூக்கி வீசப்படுவீர்கள்.

ஒருமுறை, அந்த மையத்தின் தரிசனம் ஒரு துளி கிடைத்துவிட்டால், உங்கள் செயலில் நீங்கள் உங்களை இழந்துவிட மாட்டீர்கள்.

செயல்புரிந்து கொண்டே இருந்தாலும்கூட உங்கள் இருப்பை என்றும் உணர்ந்து கொண்டேதான் இருப்பீர்கள்.

உங்கள் உள்மௌனத்தைத் தொட்டுவிடுவீர்கள். பிறகு உங்களது காரியங்கள் எல்லாமே, நீர்நிலையின் மேல் உள்ள அலைகளாகவே அமைந்துவிடும். மிகச் சரியான தியானத்திற்கான மனநிலைத் தருணம் அதுதான்.

காமஹரணம்

தியானமும் அதற்கான செயல்முறைகளும் ;

இதுவும் ஒரு 'நிறுத்துதல்' உத்திதான்.

முதலில் குறிப்பிட்டதற்கும் இதற்கும் வேறுபாடு என்னவென்றால், செயலையோ உணர்வையோ பாதி வழியில் நிறுத்த வேண்டியதில்லை.

உணர்வுகளையோ, விருப்பங்களையோ நிதானமாக, மெல்லக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒரு விருப்பம் எழுந்தால், அதை நன்றாக உணருங்கள். தைரியமாக, முழு ஆற்றலுடன் நேருக்கு நேர் அதை எதிர்கொள்ளுங்கள்.

அந்த உணர்வை, விருப்பத்தை நீங்கள் உணர்வதை, உணர்ந்திருங்கள். பிறகு, உடனே அதை விட்டுவிடுங்கள். அப்படியே விட்டுவிடுங்கள்.

ஓர் அழகான பெண்ணைப் பார்க்கும்போது உங்களுக்குள் உணர்வுகள் எழலாம். உங்கள் உணர்வைச் சோதித்துப்பாருங்கள்.

அந்தக் கணத்தில், உங்களுக்கு என்ன நேர்கிறதென்பதைக் கவனியுங்கள். உங்கள் உடல் காய்ச்சல் வந்ததுபோலவோ, நடுங்குவதுபோலவோ தோன்றுகிறதா என்பதைக் கவனியுங்கள். உங்கள் நாடித் துடிப்பு அதிகரிக்கிறதா, தெளிவாகச் சிந்திக்க முடியவில்லையா என்பதைப் பற்றித்தெரிந்து கொள்ளுங்கள். அந்த உணர்வு எவ்வாறு உங்களை ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.

உங்களையோ, அந்த விருப்பத்தையோ மதிப்பீடு செய்து பார்க்க வேண்டாம். இது ஒரு மோசமான உணர்வு என்று உங்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டாம்.

எந்த அபிப்பிராயமும் கொள்ளாமல், சும்மா பார்த்துக் கொண்டிருங்கள்.

பிறகு, சட்டென அந்த விருப்பத்தைக் கை கழுவி விடுங்கள்.

அது முடியும்!

உங்களால் அப்படியே கழற்றிவிட்டுவிட முடியும்.

தெளிவாக இருங்கள்; நீங்கள் உங்கள் ஆசையை ஒடுக்கவில்லை! ஆசையை ஒடுக்கக்கூடாது. அடக்குதல் மற்றும் ஒடுக்குதலே சகல மனநோய்களுக்கும் மூலகாரணம்.

எப்படி அதை உதறிவிடுவது என்று யோசிக்கவே வேண்டாம்.

ஒர் உணர்வோடு எதிர்த்து மோதும்போது, ஒரு உணர்வை அடக்கி வைக்கும்போது, அந்த உணர்வு சக்தி பெற்றுவிடும்!

நன்றாக அறிந்துகொண்டால், அதை விட்டுவிடுதல் எளிதாகிவிடும். ''விட்டுவிடு,'' என்று நீங்கள் சொல்லும் நேரத்தில், நீங்கள் தனியே பிரிந்து, விலகி நின்று, ஒரு பார்வையாளர் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் உடல் ஆசையால் நிறைந்திருப்பதை, உங்கள் மனம் ஆசையால் நிறைந்திருப்பதை நீங்கள் பார்க்கும்போது, அவை 'நீங்கள் அல்ல' என்று ஆகிவிடும். அந்தக் கணத்தில், எந்த உணர்வும் 'நீங்கள் அல்ல' என்று உணரும்போது உங்கள் இருப்பிற்குள் தூக்கி எறியப்படுவீர்கள்.

உங்கள் போதைகளையெல்லாம் தொலைத்து விடுவதற்கு இந்தத் தியானம் மிகச் சிறந்ததாகும்.

சங்கிலித் தொடர்போல் விடாது புகை பிடிப்போர், விடா மதுப்பழக்கம், பெண் பித்து போன்றவற்றை ஒருமுறை ஒழித்துவிட்டால், பிறகு அவை எப்பொழுதும் திரும்பிவராது. அவற்றை ஒழிக்க அவர்கள் முயற்சி எடுப்பதில்லை. முற்றிலும் ஒழித்தே விடுகிறார்கள். அவ்வளவுதான்!

இந்தத் தியானத்தின் மூலமாக, செயல்மட்டுமல்ல, அதற்கான ஆசையே முற்றிலும் ஒழிந்துபோகும்! நீங்கள் உங்கள் அடிமைப் பழக்கங்களுடன் போராட வேண்டியதே இல்லை. மாறாக அவற்றிற்கான ஆசைகளே அற்றுப் போகும்.