KAILASA Library/சமய தீட்சை/குண்டலினி சக்தியை உயிர்த்து எழச் செய்யும் நேர்வழிSign in
சமய தீட்சை

குண்டலினி சக்தியை உயிர்த்து எழச் செய்யும் நேர்வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் உடலில்... உங்கள் தாயின் தசை நினைவு (Muscle Memory), உங்களுடைய தசை நினைவாக இருக்கும். உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory), உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.

தீட்சையின் பலனாக... உங்கள் குருவின் ஜீவசக்தி (Bio-Energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாக பொங்கும்.

உங்களுக்குள் சிவோஹம் எனும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினி சக்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீட்சையே சமய தீட்சை.

ஞானமடையாதவரிடமிருந்து தீட்சை பெறும்பொழுது, தீட்சைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம் செய்யவேண்டும்.

ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீட்சை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவ சக்தியில் பதிய வைக்கிறார். அதனால் நீங்கள் என்ன வேலை செய்துக்கொண்டிருந்தாலும், மந்திரம்

Sri Nithyananda Paramashivam

© 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved தொண்டைக்குழியில் ஓடிக்கொண்டே இருக்கும், இயங்கிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் சிவமாக மாறும் வரை இந்த ருத்ராக்ஷத்தை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி தரப்படும் திருநீ ற்றுப்பையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.

திருநீறு சிவபெருமானின் அஸ்திர தேவதை.

நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து நீங்கள் திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்து முடித்துவிட்டு திரும்பி வரும்.

இந்த தீட்சையை பொறுத்த வரை நீங்கள் தீட்சையின்படி வாழ ஆரம்பித்தால்போதும், மிகப்பெரிய சக்திகளை உங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்த துவங்குவீர்கள். சமய தீட்சை குண்டலினி சக்தியை உங்களுக்குள் உயிர்த்து எழ வைக்கும்.

உங்களுக்குள் சிவோஹம் எனும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினி சக்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீட்சையே சமய தீட்சை.

Sri Nithyananda Paramashivam