டி.என்.ஏ வை விழிப்பிக்க வைக்கும் மந்திரம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினி சக்தியை விழிப்படையச்

செய்து, உங்களுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளை தருவார். தீட்சை அளித்து, உங்களுடைய உரிமைகளை பெறச் செய்வார். அந்த தீட்சைதான் சமய தீட்சை. இந்த சமய தீட்சையில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும்.
எம்பெருமானே, சதாசிவனே, காமிக ஆகமத்தில்சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகின்றாறோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதே முறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும்.



சமய தீட்சையின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் திருநீற்றுப்பையும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் தொண்டைக்குழியின்மீது இருக்கும். தொண்டைக்குள் இந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். இதனால் ருத்ராக்ஷம் சக்தி பெறும்.
மந்திரம் ஓடுவது நிற்கும்பொழுது ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.
தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை ஜபிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை ஜபிக்க வைக்கும். 24 மணி நேரமும் மந்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால், சிவத்தன்மை - சிவனுடைய ஆனந்தமும், அறிவும், சக்தியும் ஞானமும் உங்கள் உயிர்நினைவில் பொங்கிப் பெருகிக்கொண்டே இருக்கும்.
இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏ -வை விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்தீர்களோ, அந்த குலத்தின் தனித்துவமான டி.என்.ஏ விழிப்படையும்.
இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்துவமும் உங்களுக்குள் வெளிப்படத்துவங்கும்.

© 2015 Sri Nithyananda Paramashivam. All Rights Reserved