KAILASA Library/விஷேஷ தீட்சை/மாற்ற முடியாத உண்மைSign in
விஷேஷ தீட்சை

மாற்ற முடியாத உண்மை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆகமத்தை சிவபெருமான் வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாக சொல்லுகின்ற சத்தியம்...

‘உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.’

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்... உங்கள் எல்லோருக்குள்ளும் ‘ சிவோஹம்’ என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார்.

சிவோஹம் என்றால் சிவ + அஹம். நான் என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது ‘சிவம்’. இந்த அனுபூதியாக உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன் என்று சிவபெருமான் சொல்கிறார்.

சிவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்த சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவர் உள்ளே சிவோஹம் இருப்பது உண்மை. ‘ சிவோஹம்’ எனும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம், அனுபவிக்காமல்விட்டாலும் விடலாம், ஆனால் ‘சிவோஹம்’ உங்களுக்குள் இருப்பது உண்மை, இது மாற்ற முடியாத உண்மை.

உண்மையை மறைக்கும் மாயத்திரை

‘நீங்கள்தான் சிவன்’ என்று சொன்ன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி... ‘என் மனைவியே நான் சொல்வதை கேட்பதில்லை. நான் எப்படி சாமி சிவனாக முடியும்’

நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்...நீங்கள் என்று உங்களைப்பற்றி நீங்கள் வைத்திருக்கின்றீர்களே ஒரு கருத்து, அந்த கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை. ‘உடல்தான் நான், மனம்தான் நான்’ என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சிவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற திரை. ‘உடல்தான் நான், மனம்தான் நான்’ எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், அந்த கருத்துதான் நிஜமான உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.

நிஜமாகவே ‘நீங்கள்’ என்று நீங்கள் எதை கருதுகின்றீர்களோ, ‘நீங்கள்’ என்று நீங்கள் எதை உணர்கின்றீர்களோ, அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், ‘சிவோஹம்’ எனும் நிலையில் எப்பொழுதும் இருக்கின்ற உங்களை, அதை உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.

சிவோஹ அனுபவம் அனுபூதியாகும்

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்கு புரிந்துவிடும். ‘ஆமாம் சாமி. உண்மையில் பார்த்தீர்கள் என்றால் எனக்குள் இருக்கின்ற ஆத்மா, சிவம் வடிவானது. அது எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே, அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம்தானே. அதை அடைந்தால்தானே சிவம்.

நீங்கள் என்ன சொல்கின்றீர்கள், ‘எனக்கு அந்த அனுபூதி வரட்டும், அதன்பிறகு சிவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன். அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால், நீ சிவன்போன்று உயர்ந்த வாழ்க்கையை வாழ ஆரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்திகளை எல்லாம் பொங்கிப்பெருக வைக்கிறேன்.

இது எவ்வாறு இருக்கிறது என்றால், மாமியாரும் மருமகளும் சண்டைப் போட்டு முடித்தபிறகு, அம்மா மகனிடம் என்ன சொல்கிறார் என்றால், ‘ஆமாம் சண்டைப்போட்டோம்தான். என்னவாக இருந்தாலும், நான் வயதில் பெரியவள்தானே. உன் மனைவியை வந்து பேசச் சொல்’ என்று. மனைவி என்ன சொல்கிறார், ‘என்னவாக இருந்தாலும் பெரிசுக்கு பொறுமை இருக்கவேண்டாமா?. முதிர்ச்சி இருக்க வேண்டாமா? அவர்கள்தானே சத்தம் போட்டார்கள். அவர்களையே வந்து என்னிடம் பேசச் சொல்’.

எல்லா மாமியார்-மருமகள் சண்டையிலும், மாமியார் என்ன சொல்கிறார், ‘என்ன இருந்தாலும் சின்னப் பொண்ணுக்கு பொறுமை இருக்கவேண்டாமா? பொறுப்பு இருக்க வேண்டாமா? மருமகளை வந்து முதலில் பேசச் சொல், நான் பேசுகி றேன் என்கிறார். மருமகள் என்ன சொல்கிறார், மாமியாரை முதலில் வந்து பேசச் சொல்லுங்கள். பிறகு நான் பேசுகிறேன் என்கிறார். இந்த இரண்டு பேருக்கும் நடுவில் நின்று மாட்டிக்கொண்டு முழிப்பது யார் என்றால்? ... மகன்-கணவன். இவர் முதலில் யாரை பேச வைப்பது என்பது தெரியாமல், தான் பேசாமல் இருப்பார். அம்மா காலில் விழுந்து மனைவியிடம் பேச வைப்பதா? அல்லது மனைவி காலில் விழுந்து அம்மாவிடம் பேச வைப்பதா? என்று நடுவில் இருந்துக்கொண்டு விழிப்பார். இவர்கள் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளும் இந்த மனுஷனின்நிலைதான் குருவின் நிலை.

நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள், ஒருபக்கம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ‘ சிவோஹம் என்று நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் சாமி. அந்த அனுபூதியை எனக்குள் வரச்சொல்லுங்கள். அதன்பிறகு சிவன்மாதிரி வாழ்கிறேன்’ என்று. மறுபக்கம் அந்த அனுபூதி என்ன சொல்கிறது, ‘ பொறுப்பெடுத்து சிவன்போன்று வாழச்சொல். நான் அந்த அனுபூதியாக உள்ளிருந்து வெளிப்படுகிறேன்’ என்று.

தெரிந்துக்கொள்ளுங்கள்...மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் மாட்டிக்கொண்ட மனுஷன் விழிப்பதுபோன்று நான் இருக்கப்போவதில்லை.