சிவ தீட்சை - ஓர் பின்னணி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாமல் விட்டாலும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது. பிரபஞ்ச சக்தி உருவம், அருவம் இரண்டையும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவமும் தாங்குகிறது.
பிரபஞ்ச சக்தியின் மூலப்பொருள், பரம்பொருள் சிவ பெருமானாய் திருவுருவம் தாங்கி வந்து சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அனுபூதியாக அளித்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றியது.
ஆகமம்
சிவோஹம் என்னும் ஜீவன் முக்த நிலையை அடையவதற்கான வாழ்க்கை முறைகளையும், தீட்சை முறைகளையும் சி வபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள்தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கிட்டியதாலும் சி வபக்தர்களுக்கு இது வாழ்க்கைமுறை என்பதாலும் இதற்கு ‘ஆகமம்’ என்று பெயர்.
ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி
தென்னாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவாலயங்கள் உத்தர காமிக ஆகமத்தின் விதிப்படி பூஜைகளையும், ஹோமங்களையும், திருவிழாக்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக ஆகமம் என்பது நேரடியாக சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமான் சதாசிவன் ஆன்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒருசில தீட்சை முறைகளை விளக்குகிறார். சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிகச் சக்தி வாய்ந்த தீட்சைகளையும், தீட்சை முறைகளையும் அருளியிருக்கிறார்.
இதில் சமயதீட்சை என்னும் இந்த சிவதீட்சையை பற்றி உரைக்கும் பொழுது ஆன்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார். இது சிவனடியார்கள், சிவ பக்தர்கள், இந்து மதத்தை, ஆன்மீக வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்களுக்கான, ஆன்மீக வாழ்க்கையை துவங்குவதற்கான முதற்படியாகும்.
இந்த சிவதீட்சையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள், பெண்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார். இந்த தீட்சை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ருத்ராக்ஷம், திருநீற்றுப்பையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராக்ஷத்தை தொண்டைக் குழியில்படும்படி கட்டி மந்திர தீட்சை வாங்கும்பொழுது இந்த ருத்ராக்ஷம் தொடர்ந்து மந்திரத்தை இயக்கும். மந்திரம் தன் சக்தியால் ருத்ராக்ஷத்தை அதிர வைக்கும். இந்த சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது சிவோஹம் என்ற அனுபூதி நிலையை- ஜீவன் முக்த நிலையை நாம் அடைவதற்கு துணை செய்யும்.
நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள்
ஆழமான இந்த சில சத்தியங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், விரும்பினாலும் விரும்பாமல்விட்டாலும் , நம்பினாலும், நம்பாதுபோனாலும் மாற்றவே முடியாத இறுதியான, அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கிறது.
உங்கள் வீட்டின் ஜன்னலையோ வாசற்காலையோ எந்த திசை நோக்கி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சூரியன் கிழக்கில்தான் உதிக்கும், மேற்கில்தான் மறையும். அதை ஒன்றும் செய்ய முடியாது. ‘இல்லையில்லை, எங்கள் ஊரில் உதிப்பதே இல்லை, மறைவதே இல்லை’ என்று சொன்னால், உங்கள் வீட்டின் ஜன்னல் - வாசல்காலின் திசை வேறாக இருக்குமே தவிர, சூரியன் உதிப்பதும் மறைவதும் மாறுவதில்லை. ஜன்னல் - வாசல்காலின் திசை கிழக்கு மேற்காக இருந்தால், சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம், மாறியிருந்தால் பார்க்காமல் போகலாம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும், சூரியன் உதிக்கிறார் - மறைகிறார்.
அதேபோன்று இந்த உடலிலும் மனதிலும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், ஞானமடைந்த பிறகும் நீ ங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடு ஒன்றானவர்கள். சிலபேருக்கு புரியும் சிலபேருக்கு புரியாது. ஆனால், இது சத்தியம்.
சிலபேர் ஜன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காக வைத்து சூரியன் உதிக்கும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள், மறையும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள். சிலபேர் வடக்கு தெற்காக வைத்து அதைப்பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.
அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், ' சிவோஹம்' எனும் அனுபூதியை வாழ்ந்து, சக்தியை வெளிப்படுத்தி, அதை மகிழ்ச்சியோடு ஆனந்தத்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபேர் கொண்டாடுவதில்லை. ஆனால் மாறாத உண்மை - நாம் எல்லோரும் 'சிவம்' எனும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.