நான் அவதார புருஷன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
எனக்குள் இருக்கும் அனுபூதியை பொங்கச் செய்து, உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வேன். இந்த முதல் உத்வேகத்தினை அளித்து சிவோஹம் எனும் அனுபூதியால் வருகின்ற உயர்ந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்கினேன் என்றால், இந்த உயர்ந்த தன்மையான சிவோஹத்தின் சக்தி வெளிப்பாடு உங்களுக்கு வரும். சக்தி வெளிப்பாடு வந்ததும், மேலும் தன்மை பொங்கும்.
மேலும் தன்மை பொங்கியதும், மேலும் சக்தி வெளிப்படும். மேலும் தன்மை பொங்கும், மேலும் சக்தி வெளிப்படும். இது இவ்வாறாக நிகழ்ந்து சிவோஹத்தன்மை மலர்ந்துவிடும். இது மலர்வதற்காக நான் உங்களுக்குத் தரப்போகின்ற முதல் உத்வேகம்தான் குண்டலினி விழிப்பு. குண்டலினி விழிப்பு நிகழ்வுக்காக தரப்படுகின்ற தீட்சைதான் சமய தீட்சை.