லிங்க சுத்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சல லிங்கம், க்ஷணிக லிங்கம் இதில் எவ்வகையில் உள்ளதோ அதற்கேற்றார்போல் சுத்தி (அபிஷேகம்) செய்வது லிங்க சுத்தியாகும். விசேஷார்க்ய ஜலத்தினால் ப்ரோக்ஷணம் மட்டும் செய்வது ஒருவகை. விஸ்தாரமாக லிங்கத் திற்கு அபிஷேகம் செய்வதும் உண்டு. அபிஷேக வேதிகையின் மேல் வஸ்திரம் சாத்தி, ஓம் ஹாம் அநந்த்தாய நம: ஓம் ஹாம் தர்மாய நம: ஓம் ஹாம் ஞானாய நம: ஓம் ஹாம் வைராக்யாய நம: ஓம் ஹாம் ஐச்வர்யாய நம: ஓம் ஹாம் பத்மாய நம: என்று ஷடுத்தாஸன பூஜை செய்து ஸ்வாமியின் பெட்டகத்தின் மேல் ஓம் ஹாம் பீம ருத்ராய நம: என்று பெட்டகத்தின் காவலரைப் பூஜித்து உள்ளிருக்கும் சிவலிங்கத்தை நமஸ்கரித்து
ஓம் நமோ தேவதேவேச ஸர்வலோகைக நாயக |
உத்திஷ்ட ஸ்நானகர்மார்த்தம் ஆத்ம ரக்ஷார்த்த ஹேதவே ||
என்று சொல்லி அபிஷேக வேதிகையில் எழுந்தருளச் செய்க. பின் சிவ காயத்ரியால் அர்ச்சித்து (ஓம் தந்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி தந்ந: சிவ: ப்ரசோதயாத்), ஸாமான்யார்க்யத்தினால் ஸ்வாகதார்க்யம் கொடுத்து தூபதீபம் காட்டி, பஞ்சப் பிரம்ஹ மந்திரத்தால் நிர்மால்ய புஷ்பத்தைக் களைந்து வடகிழக்கில் ஓம் ஹாம் சண்டேசாய ஸ்வாஹா என்று சொல்லி சுத்தமான வட்டகையில் வைக்க வேண்டும். ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று லிங்கத்தையும், ஓம் ச்லீம் பம் சும் ஹூம்பட் பாசுபதாஸ்த்ராய நம: என்று பீடத்தையும் ஸாமான்யார்க்யத்தினால் சுத்தி செய்து சக்திக்குத் தகுந்தவாறு எண்ணெய், தைலம் முதலாக த்ரவ்யங்கள் பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், விபூதி, சந்தனம் முதலானவைகளைக் கொண்டு ஸம்ஹிதா மந்த்ரம் ஸ்ரீ ருத்ரம், சமகம், திருமுறை பாராயணத்துடன் அபிஷேகம் செய்து விசேஷார்க்யத்தினால் அபிஷேகம் செய்து தூய்மையான வெண்மையான வஸ்த்ரம் கொண்டு லிங்கத்தைத் துடைத்து, மூல மந்திர உச்சாடனத்துடன் ஸ்வாமியைப் பூஜைப் பலகையில் எழுந்தருளச் செய்யவேண்டும்.
இவ்வாறு ஆத்ம ஸ்தான த்ரவ்ய மந்த்ர லிங்க சுத்தி செய்து கர்பாவரணத்தில் சிவபூஜை செய்க.