பூதசுத்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பூதசுத்தி இரண்டு வகையாக செய்ய வேண்டும். ஸூக்ஷ்ம தேக சுத்தி (உள்சரீர சுத்தி), ஸ்தூல தேக சுத்தி (புறச்சரீர சுத்தி) தகுந்த ஆசிரியரைக் கொண்டு பயிற்சி செய்யவும். முதலில் ஸூக்ஷ்ம தேகத்தைச் சுத்தம் செய்து பிறகு ஸ்தூல தேகத்தை சுத்தி செய்ய வேண்டும்.
ஓம் ஹூம் ஹாம் ஹம் ஹாம் ஹூம் ஆத்மனே நம: என்று ஆன்மரக்ஷணம் செய்யவும். அநித்யமாகிய ப்ராரப்த தேக த்தைச் சுத்தம் செய்யும்பொழுது உள்ளிருக்கும் நித்யமாகிய ஆன்மாவை உச்சந்தலைக்குமேல் பன்னிரண்டங்குலத்திலுள்ள த்வாதசாந்தத்தில் பரசிவனிடத்தில் பூதசுத்தி முடியும் வரையில் சேர்ப்பித்து வைப்பது ஆன்மரக்ஷணமாகும்.
ஸூக்ஷ்ம தேக சுத்தி : (நுண்ணுடல் தூய்மை)
ப்ராஸாதோச்சாரணாத் ஹ்ருதயாதி ஸ்தாநேஷூ சப்தாதித்யாகாத்
சப்தஸ்பர்சௌ த்யஜேத் ப்ராஹ்மே ரஸம்வை கேசவேத்யஜேத் |
ரூபகந்தௌ த்யஜேத் ருத்ரே புத்யஹங்காரமீச்வரே |
மநோ பிந்துக்ரமாதேவ தத்வஞாநே சிவேத்யஜேத் ||
மூலமந்திர உச்சாடனத்தோடு சப்தஸ்பரிசங்களை ஹ்ருதயத்தாமரையிலிருக்கும் ப்ரம்மாவினிடத்திலும் ரஸதத்வத்தை கழுத்துத் தாமரையிலிருக்கும் விஷ்ணுவிடத்திலும் ரூபகந்த தத்வங்களை உள்நாக்கின் அடித்தாமரையிலிருக்கும் ருத்ரனிடத்திலும் புத்தி அஹங்கார தத்வங்களைப் புருவ மத்திய தாமரையிலிருக்கும் ஈஸ்வரனிடத்திலும் மனசு மற்றும் பிந்து தத்துவங்களை பரமாந்தரத் தாமரையிலிருக்கும் சிவனிடத்திலும் ஒடுக்க இது ஸூக்ஷ்ம தேக சுத்தியாகும்.
ஸ்தூல தேக சுத்தி : (பருவுடல் தூய்மை)
(1) பாதத்திலிருந்து முழங்கால்வரை ப்ருத்வீ மண்டலம் (நிலம்), நாற்கோண வடிவம் பொன்னிறம், வஜ்ரம் அடையாளம், ஹ்லாம் பீஜம், நிவ்ருத்தி கலை, ஸத்யோஜாதம் அதிதேவதை, ப்ரம்மா காரணேசுவரர், பாதம் முதல் சி ரஸூவரை நிவ்ருத்தி கலையின் பீஜம் வியாபித்திருக்கும்.
ஓம் ஹ்லாம் ஹ்லாம் ஹ்லாம் ஹ்லாம் ஹ்லாம் நிவ்ருத்தி கலாயை ஹ: ஹூம்பட் என்று உச்சரித்தவாறு மூச்சுக்காற்றை இடது நாஸியின் வழியே பூரகம் செய்து ஸூஷூம்னா நாடீ மார்க்கமாக த்வாதசாந்தம் வரை கொண்டுபோய் மீண்டும் வலது நாசியின் சாந்தம் வரை கொண்டுபோய் மீண்டும் வலது நாசியின் வழியே ரேசகம் செய்ய வேண்டும். இப்படி ஐந்து முறை செய்க. ப்ருத்வீ குணங்களாகிய கந்தம், ரஸம், ரூபம், ஸ்பர்சம், சப்தம் ஆகிய ஐந்தும் ஒடுக்கப்படுகின்றன. குணங்கள் இல்லாத பிருத்வியும் அதற்குப் பகையான வாயுவினால் ஒடுக்கப்பட்டதாகப் பாவிப்பது நிவ்ருத்தி கலா சு த்தியாகும்.
(2) முழங்காலிலிருந்து நாபிவரை, அப்பு மண்டலம் (நீர்), பிறைசந்திரன் வடிவம், வெண்மை நிறம், பத்மரேகை அடையாளம், ஹ்வீம் பீஜம் ப்ரதிஷ்டா கலை, வாமதேவம் அதிதேவதை, விஷ்ணு காரணேஸ்வரர், முழங்கால் முதல் சி ரஸூ வரை ப்ரதிஷ்டாகலையின் பீஜம் வ்யாபித்திருக்கும்.
ஓம் ஹ்வீம் ஹ்வீம் ஹ்வீம் ஹ்வீம் ப்ரதிஷ்டா கலாயை ஹ: ஹூம்பட் என்று உச்சரித்தவாறு மூச்சுக்காற்றை இடது நாசியின் வழியே பூரகம் செய்து ஸூஷூம்னா நாடீ மார்க்கமாக த்வாதசாந்தம் வரை கொண்டு போய் மீண்டும் வலது நாசியின் வழியே ரேசகம் செய்ய வேண்டும். இப்படி நான்கு முறை செய்க. அப்பு / நீரின் குணங்களாகிய ரஸம், ரூபம், ஸ்பர்சம், சப்தம் ஆகிய நான்கும் ஒடுக்கப்படுகின்றன. குணங்கள் இல்லாத அப்புவும் அதற்குப் பகையான அக்னியினால் ஒடுக்கப்பட்டதாகப் பாவிப்பது ப்ரதிஷ்டாகலா சுத்தியாகும்.
(3) நாபியிலிருந்து ஹ்ருதயம் வரை, தேயு மண்டலம் (அக்னி), முக்கோண வடிவம், சிவப்பு நிறம், ஸ்வஸ்திக் அடையாளம், ஹ்ரூம் பீஜம், வித்யாகலை, அகோரம் அதிதேவதை, ருத்திரன் காரணேஸ்வரர், நாபி முதல் சிரஸூ வரை வித்யாகலையின் பீஜம் வ்யாபித்திருக்கும்.
ஓம் ஹ்ரூம் ஹ்ரூம் ஹ்ரூம் வித்யாகலாயை ஹ: ஹூம்பட் என்று உச்சரித்தவாறு மூச்சுக்காற்றை இடது நாசியின் வழியே பூரகம் செய்து ஸூஷூம்னா நாடீ மார்க்கமாக த்வாதஸாந்தம் வரை கொண்டுபோய் மீண்டும் வலது நாசியின் வழியே ரேசகம் செய்ய வேண்டும். இப்படி மூன்று முறை செய்க. தேயு / அக்னியின் குணங்களாகிய ரூபம், ஸ்பர்சம், சப்தம் ஆகிய மூன்றும் ஒடுக்கப்படுகின்றன. குணங்கள் இல்லாத அக்னியும் அதற்குப் பகையான ஜலத்தினால் ஒடுக்கப்பட்டதாகப் பாவிப்பது வித்யா கலா சுத்தியாகும்.
(4) ஹ்ருதயத்திலிருந்து புருவமத்திவரை, வாயு மண்டலம் (காற்று), அறுகோண வடிவம், கறுத்த நிறம், ஆறு புள்ளிகள் அடையாளம், ஹைம் பீஜம், சாந்திகலை, தத்புருஷம் அதிதேவதை, ஈஸ்வரன் காரணேஸ்வரர், ஹ்ருதயம் முதல் சிரஸூ வரை சாந்திகலையின் பீஜம் வ்யாபித்திருக்கும்.
ஓம் ஹைம் ஹைம் சாந்திகலாயை ஹ: ஹூம்பட் என்று உச்சரித்தவாறு மூச்சுக்காற்றை இடது நாசியின் வழியே பூரகம் செய்து ஸுஷும்னா நாடீ மார்க்கமாக த்வாதசாந்தம் வரை கொண்டு போய் மீண்டும் வலது நாசியின் வழியே ரேசகம் செய்ய வேண்டும். இப்படி இரண்டு முறை செய்க. வாயு / காற்றின் குணங்களாகிய ஸ்பர்சம், சப்தம் ஆகிய இரண்டும் ஒடுக்கப்படுகின்றன. குணங்கள் இல்லாத வாயுவும் அதற்குப் பகையான ப்ருத்வியினால் ஒடுக்கப்பட்டதாகப் பாவிப்பது சாந்தி கலா சுத்தியாகும்.
(5) புருவமத்தியிலிருந்து ப்ரமாந்த்ரம்வரை ஆகாச மண்டலம் (ஆகாயம்), வட்ட வடிவம், சுத்த ஸ்படிக நிறம், சூன்யம் பிந்து சக்தியினால் அலங்க்ருதம், ஹௌம் பீஜம், சாந்த்யதீத கலை, ஈசானம் அதிதேவதை, ஸதாசிவன் காரணேஸ்வரர், புருவமத்தி முதல் சிரஸூ வரை சாந்தயதீதகலையின் பீஜம் வ்யாபித்திருக்கும்.
ஓம் ஹௌம் சாந்த்யதீத கலாயை ஹ: ஹும்பட் என்று உச்சரித்தவாறு மூச்சுக்காற்றை இடது நாசியின் வழியே பூரகம் செய்து ஸுஷும்னா நாடீ மார்க்கமாக த்வாதசாந்தம் வரை கொண்டு போய் மீண்டும் வலது நாசியின் வழியே ரேசகம் செய்ய வேண்டும். இப்படி ஒருமுறை செய்க. ஆகாச குணமாகிய சப்தம் ஒடுக்கப்படுகின்றன. ஆகாசம் அழிவில்லாததாகையால் அதற்கு ஒடுக்கம் இல்லை. சுத்தமான மஹா ஆகாசத்தினால் அநித்யமானதும் சுதந்திரமாய்ப் பரவி நில்லாததும், அசுத்தமானதுமாகிய தனது தேகத்தை ஒடுக்கம் செய்வித்ததாகப் பாவிப்பது சாந்த்யதீத கலா சு த்தியாகும். இப்படி பாதத்திலிருந்து ப்ரமரந்த்ரம்வரை சுத்தம் செய்வது ஸ்தூல தேக சுத்தியாகும்.
சரீர தகனமும், அம்ருதாப்லாவனமும்
ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று கால் பெருவிரலில் இருந்து காலாக்னியுண்டானதாய்ப் பாவித்து, அதனால் ப்ராரப்த தேகத்திலிருக்கும் பஞ்சபூத தோஷங்களை எறித்து, தனது தேஹம் நித்யமானதாயும், எங்கும் பரவி நிற்பதாயும், சுத்தமானதாயுமுள்ள மேலான ஆகாச வடிவினதாகப் பாவித்து அம்ருதத்தில் நனைந்ததாகச் சிந்திப்பது சரீர தகனமும் அம்ருதாப்லாவனமும் ஆகும்.
இனி த்வாதசாந்தத்தில் பரசிவனிடத்தில் ஒடுக்கப்பட்ட ஆன்மாவை மீண்டும் ஹ்ருதயத்தில் ஸ்தாபனம் செய்ய வேண்டும். ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட் என்று சொல்லி சரீரத்தின் உள்ளும் புறமும் நனைந்ததாப் பாவித்து ஹ்ருதயத்தில் ஓம்காரப் பிரணவத்தினால் சுத்தவித்யா தத்துவ வடிவான ஆஸனத்தை பாவிக்கவும். ஓம் ஹூம் ஹாம் ஹம் ஹாம் ஹூம் ஆத்மனே நம: என்ற ஆத்ம மந்திரம் உச்சரித்த வண்ணம் பூரகம் செய்து த்வாதசாந்தம் வரை ஸூக்ஷ்மனா மார்க்கமாய் சென்று ஸ்ருஷ்டி முத்திரை காட்டி மேலிருந்து கீழாகக் கொணர்ந்து ஆன்மா ஸூக்ஷ்ம தேகம் அடைந்ததாகப் பாவிக்க வேண்டும். பிறகு ஓம் ஹேம் சக்தயே வௌஷட் என்று சொல்லி இந்த சக்தி மந்திரத்தினால் பிந்து ஸ்தானத்திலிருந்து அமிர்தம் பெருகி உள்ளும் புறமும் நனைந்து தூய்மை அடைந்ததாகப் பாவிக்கவும்.
அந்தர்யாகம் - ந்யாஸமும் அகபூஜையும்
ஸூக்ஷ்ம, ஸ்தூல தேஹ சுத்தியான பிறகு சிவோஹம் பாவனையடைய அந்தர்யாகம் செய்ய வேண்டும். முதலில் அங்கந்யாஸம் (அநுஷ்டான விதியில் கூறியவாறு) செய்தபிறகு தண்டபங்கி, முண்டபங்கி, வக்த்ரபங்கி, காலபங்கி ந்யாஸம் செய்க.
| தண்டபங்கி ந்யாஸ மந்த்ரம் | ந்யாஸம் செய்தல் |
|---|---|
| ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம: | வலதுக்கைக் கட்டை விரலைச் சிரஸில் ந்யஸித்து |
| ஓம் ஹேம் தத்புருஷாய வக்த்ராய நம: | வலதுக்கைக் கட்டை விரல் ஆள்காட்டி விரலைச் சேர்த்து புருவமத்தியில் ந்யஸித்து |
| ஓம் ஹூம் அகோராய ஹ்ருதயாய நம: | வலதுக்கைக் கட்டை விரல் நடுவிரலைச் சேர்த்து ஹ்ருதயத்தில் ந்யஸித்து |
| ஓம் ஹிம் வாமதேவாய குஹ்யாய நம: | வலதுக்கைக் கட்டைவிரல் மோதிரவிரலை சேர்த்து நாபியில் ந்யஸித்து |
| ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: | இருகைக் கட்டைவிரல் சிறு விரல்களை முழந்தாளிலும் ந்யஸிக்கவும் |
| முண்டபங்கி ந்யாஸ மந்த்ரம் | ந்யாஸம் செய்தல் |
|---|---|
| ஓம் ஹோம் ஈசான மூர்த்நே நம: | வலதுக்கைக் கட்டை விரலைச் சிரஸில் ந்யஸித்து |
| ஓம் ஹேம் தத்புருஷாய மூர்த்நே நம: | வலதுக்கைக் கட்டை விரல் ஆள்காட்டி விரலைச் சேர்த்து சிரஸின் கிழக்குப் பகுதியில் ந்யஸித்து |
| ஓம் ஹூம் அகோராய மூர்த்நே நம: | வலதுக்கைக் கட்டை விரல் நடுவிரலைச் சேர்த்து சிரஸின் தெற்குப் பகுதியில் ந்யஸித்து |
| ஓம் ஹிம் வாமதேவாய மூர்த்நே நம: | வலதுக்கைக் கட்டைவிரல் மோதிரவிரலை சேர்த்து சிரஸின் வடக்குப் பகுதியில் ந்யஸித்து |
| ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: | வலதுக்கைக் கட்டைவிரல் சிறு விரலைச் சேர்த்து சிரஸின் மேற்குப் பகுதியில் ந்யஸிக்கவும் |
| வக்த்ரபங்கி ந்யாஸ மந்த்ரம் | ந்யாஸம் செய்தல் |
|---|---|
| ஓம் ஹோம் ஈசான வக்த்ராய நம: | கட்டைவிரலைச் சிரஸுக்கு கீழ் ந்யஸித்து |
| ஓம் ஹோம் தத்புருஷாய வக்த்ராய நம: | கட்டைவிரல் ஆள்காட்டிவிரலைச் சேர்த்து தத்புருஷ சிரஸிற்கு கீழ் ந்யஸித்து |
| ஓம் ஹூம் அகோராய வக்த்ராய நம: | கட்டைவிரல் நடுவிரலைச் சோத்து அகோர சிரஸிற்கு ந்யஸித்து |
| ஓம் ஹிம் வாமதேவாய வக்த்ராய நம: | கட்டைவிரல் மோதிரவிரலைச் சேர்த்து வாமதேவ சிரஸிற்குக் கீழ் ந்யஸித்து | | ஓம் ஹும் ஸத்யோஜாத வக்த்ராய நம: | கட்டைவிரல் சிறுவிரலைச் சேர்த்து ஸத்யோஜாத சிரஸிற்குக் கீழ் ந்யஸிக்கவும் |
| கலாபங்கி ந்யாஸ மந்த்ரம் | ந்யாஸம் செய்தல் |
|---|---|
| ஓம் ஹௌம் சாந்த்யதீத கலாயை நம: | வலதுக்கைக் கட்டை விரலைச் சிரஸில் ந்யஸித்து |
| ஓம் ஹைம் சாந்திகலாயை நம: | வலதுக்கைக் கட்டைவிரல் ஆள்காட்டி விரலைச் சேர்த்து முகத்தில் ந்யஸித்து |
| ஓம் ஹ்ரூம் வித்யகலாயை நம: | வலதுக்கைக் கட்டைவிரல் நடுவிரலைச் சேர்த்து ஹ்ருதயத்தில் ந்யஸித்து |
| ஓம் ஹ்வீம் ப்ரதிஷ்டா கலாயை நம: | வலதுக்கைக் கட்டைவிரல் மோதிர விரலைச் சேர்த்து நாபியில் ந்யஸித்து |
| ஓம் ஹ்லாம் நிவ்ருத்தி கலாயை நம: | இருகைக் கட்டைவிரல் சிறுவிரல்களை முழந்தாளில் ந்யஸிக்கவும் |
இன்னும் விஸ்தாரமாகச் செய்ய விரும்பமுள்ளவர்கள் அஷ்டத்ரிம்சத் கலா ந்யாஸம் ஸ்ரீகண்ட ந்யாஸம், ஷடத்வ ந்யாஸம் இவைகளையும் செய்யலாம்.
ஹ்ருதயத்தில் பாவித்த சிவாஸனத்தை முதலில் பூஜிக்கவும்.
ஓம் ஹாம் ஆதார சக்த்யே நம: ஓம் ஹாம் அனந்தாஸனாய நம: ஓம் ஹாம் ஸிம்ஹாஸனாய நம: ஓம் ஹாம் யோகாஸனாய நம: ஓம் ஹாம் பத்மாஸனாய நம: ஓம் ஹாம் விமலாஸனாய நம: ஓம் ஹாம் குடிலாசக்த்யே நம: ஓம் ஹாம் சிவாஸனாய நம: என்று பூஜித்து அதன் மேல் சிவலிங்கத்தில் ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தயே நம: ஓம் ஹாம் ஹௌம் வித்யாதேஹாய நம: ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம: என்று சிவபெருமானை பூஜித்து மானஸாபிஷேகம் முதலியனவும் பாவனையாகச் செய்யவும். (அந்தர்யாகம்) த்வாதசாந்தத்திலிருந்து அமிர்தம் பெருகி ஸூஷூம்னா நாடீ மார்க்கமாய் ஹ்ருதயத்தில் பாவித்த சிவனுக்கு அபிஷேகம் செய்வித்ததாக எண்ணி வஸ்த்ரம், ஆபரணங்களை அன்பின் வடிவாக அர்ப்பணம் செய்க.
பின்னர் எண்வகையான நற்குணங்களை அஷ்ட புஷ்பங்களாக பாவித்து அஷ்ட புஷ்பார்ச்சனை செய்க:
| ஓம் பவாய சிவாய நம: | கொல்லாமை | அஹிம்ஸா புஷ்பம் |
|---|---|---|
| ஓம் ஸர்வாய சிவாய நம: | ஐம்பொறி அடக்கம் | இந்த்ரியநிக்ரஹ புஷ்பம் |
| ஓம் ஈசானாய சிவாய நம: | பொறுமை | க்ஷமா புஷ்பம் |
| ஓம் பசுபதயே சிவாய நம: | கருணை | தயா புஷ்பம் |
| ஓம் ருத்ராய சிவாய நம: | மெய்யறிவு | ஞான புஷ்பம் |
| ஓம் உக்ராய சிவாய நம: | தவம் | தபோ புஷ்பம் |
|---|---|---|
| ஓம் பீமாய சிவாய நம: | வாய்மை | ஸத்ய புஷ்பம் |
| ஓம் மஹதே சிவாய நம: | பொறை/அருள் | பாவ புஷ்பம் |
பிறகு தூபதீப நைவேத்யம், தாம்பூலம், கற்பூரஹாரதி முதலான உபசாரங்கள் மானஸீகமாக செய்து தன்னை சிவோஹம் பாவனையாக எண்ண வேண்டும்.
பின் நாபி குண்டலத்தில் ஹோமம் செய்யும் பொருட்டு சிவனிடம் அனுமதி பெற்று அக்னிகார்யத்தை க்ரமமாக பாவனையாகச் செய்க. ஜடராக்னியையும் (ஜடரம் - வயிறு) த்வாதசாந்தத்திலிருந்து ஞானாக்னியையும் உபயோகித்து பூர்ணாஹூதி வரை செய்து, இந்த அந்தர்யாகத்தை சிவப்ரீதி செய்க.
அகப்பூஜை முடித்து புறப்பூஜை செய்யும் நிமித்தம் சமாதி நிலையை விடுத்து "சிவபெருமானே புறத்தேயும் பூஜை செய்ய அனுமதி அளித்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்து அநுக்ஞை பெற்று ஸ்தான சுத்தி செய்ய வேண்டும்.
ஸ்தான சுத்தி
ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று வலது ஆள்காட்டி நடு மற்றும் மோதிர விரல்களால் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டி ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று வலதுக்கை கட்டைவிரல் நடுவிரலைச் சேர்த்து சொடுக்கி தன்னை வலமாக சுற்றி திக்பந்தனம் செய்து தன்னைச்சுற்றி உள்ள விக்னங்களை போக்க வேண்டும். ஓம் ஹைம் கவசாய நம: என்று வலது ஆள்காட்டி விரலால் தன்னை மும்முறை சுற்றி அக்னிமயமான மூன்று அகழிகள் தன்னைச் சுற்றி உண்டானதாகப் பாவித்து ஓம் ஹாம் ஹௌம் ஸக்த்யை நம: என்று தேனு முத்திரை காண்பித்து தனக்கு மேலும், கீழும் சக்தியின் பாதுகாவல் உண்டானதாகவும் தன்னையும் பூஜாஸ்தானத்தைச் சுற்றியும் எவ்வித இடையூறும் வரா வண்ணம் பாதுகாப்பு வளையம் இட்டதாக எண்ணுதலே ஸ்தான சுத்தியாகும். பின் பூமிதேவியை ஸாமான்யார்க்ய ஜலத்தால் தெளித்து ஓம் லம் பூமிதேவ்யாஸனாய நம: ஓம் லம் பூமிதேவ்யை மூர்த்தயே நம: ஓம் லம் பூமிதேவ்யை நம: என அர்ச்சிக்கவும்.
த்ரவ்ய சுத்தி
பின் விசேஷார்க்யம் தயார் செய்து அம்ருதீகரணம், பஞ்சப்பிரஹ்ம, ஷடங்க, ஸம்ஹிதைகளாலும் அபிமந்திரித்து, தன்னையும் பூஜா த்ரவியங்களையும் ப்ரோக்ஷிக்கவும். பூஜையின் உபகரணங்கள் யாவற்றையும் சதுஸ்ஸம்ஸ்க்காரம் செய்க. பாத்திரம், ஆசமன ஸாமான்யார்க்யங்களை தனித்தனியே தயார் செய்து கொள்ளவும். இது த்ரவ்ய சுத்தியாகும்.
மந்த்ர சுத்தி
tனது ஆஸனத்தை ஓம் ஹாம் சிவாஸனாயை நம: என்றும் தனது சரீரத்தை ஓம் ஹாம் சிவமூர்த்தயே நம: என்றும் தன் சிரஸில் ஒரு புஷ்பம் வைத்து ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்று பூஜித்து பஞ்சப்ரம்ஹ மந்திரங்களை மூலாதாரத்திலிருந்து புருவ நடு பிந்துஸ்தானமாகவும், ஷடங்க மந்திரங்களை மூலாதாரத்திலிருந்து சிரஸ்ூ ப்ரமாந்திர அளவாகவும் மூலமந்திரத்தை மூலாதாரத்திலிருந்து த்வாதசாந்தமளவாகவும் முறையோடு நாதாந்தமாக ஓம்காராதி நமோந்தமாக உச்சரிக்க வேண்டும். இது மந்திர சுத்தியாகும்.
பின் சிவஹஸ்த (சிவscreenாஹம்) பாவனை: வலது உள்ளங்கையில் இடது பெருவிரலால் சந்தனத்தால் வளையமிட்டு அதன் நடுவே முக்கோணம் வரைந்து அதன் நடுவே ப்ரணவத்தை எழுதி, ப்ரணவத்தில் ஓம் ஹாம் சிவாஸனாய நம: ஓம் ஹாம் சிவமூர்த்தயே நம: என்று பூஜித்து பஞ்சப்பிரஹ்ம ஷடங்க மந்திரங்களை ஐந்து விரல்களிலும் மூலமந்திரத்தால் உள்ளங்கையிலும் பூஜிக்க. இது சிவோஹம் பாவனை அடைதலாகும்.