KAILASA Library/விஷேஷ தீட்சை/சிவ பூஜா விதிframamSign in
விஷேஷ தீட்சை

சிவ பூஜா விதிframam

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வடக்கு முகமாகயிருந்து ஆசமனம் பஸ்மதாரணம் அநுஷ்டான விதியில் சொல்லியபடி ஸகளீகரணஞ் செய்து மூன்று முறை ப்ராணாயாமம் செய்து ஸாமான்யார்க்ய பாத்திரத்தை ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்ற மந்திரத்தால் சுத்தி செய்து பின் சுத்த ஜலத்தால் புருவமத்தியிலிருந்து அம்ருதமயமாக வந்ததாகப் பாவித்து ஸாமான்யார்க்ய பாத்திரத்தில் ஓம் ஹாம் ஹ்ருதயாய வௌஷட் என்ற மந்திரத்தால் நிரப்பி, சந்தனம், புஷ்பம், அக்ஷதை, அருகு முதலானவைகளை அதில் சேர்த்து ஓம் நம: என்று ஒரு முறை பூஜித்து, அதே ப்ரணவ மந்திரத்தால் ஏழு முறை அபிமந்திரமாக பூஜித்து ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று திக்பந்தனம், ஓம் ஹைம் கவசாய நம: என்று அவகுண்டனமும், ஓம் ஹாம் ஹ்ருதயாய வௌஷட் என்று தேனு முத்திரையும் கொடுக்கவும். பின் இந்த ஸாமான்யார்க்ய ஜலத்தால் ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று தன்னையும் பூஜாஸ்தானத்தையும், மேற்கு த்வாரத்தையும் புரோக்ஷிக்கவும்.

பஸ்சிம (மேற்கு) த்வார பூஜை:

மேற்கு வாயில் நிலையின் (மேற்புறம்), தெற்கு பக்கத்தில் விநாயகரைப் பூஜிக்கவும்.

லம்போதரம் ச்யாமதநும் (ச்யாம நிபம்) கணேசம்
குடாரமக்ஷ ஸ்ருஜமூர்த்வ காப்யாம் |

ஸலட்டுகம் தந்தமத கராப்யாம்
வாமே தராப்யாம்ச ததான மீடே ॥

ஓம் ஹாம் கணபதயே நம:

நிலையின் (இடப்புறம்) வடதிசையில் ஸரஸ்வதியை பூஜிக்கவும்.

சுக்லாம் சுக்லாம்பராம் அக்ஷமாலா புஸ்தக தாரிணீம் |
ஸவ்ய வாமகராப்யாம்ச ஸூப்ரஸன்னாம் ஸரஸ்வதீம் ॥

ஓம் ஹாம் ஸரஸ்வத்யை நம:

விநாயகருக்கும், ஸரஸ்வதிக்கும் நடுவில் மஹா லட்சுமியை பூஜிக்கவும்.

வாம தக்ஷிண ஹஸ்தாப்யாம் தததீம் ஸ்ரீ பலாம்புஜே |
ஹேமாபாம்ஸ கைடேபாப்யாம் ப்லாவ்யமானாம் மஹாச்ரியம் ॥

ஓம் ஹாம் மஹா லக்ஷ்ம்யை நம:

வாயிலின் தென்புற நிலைக்காலில் நந்திகேசுவரரை பூஜிக்கவும்.

ரக்தம் த்ரிநேத்ரம் ஜடிலம் ஸ்வயவாம கரத்வயே |
அக்ஷமாலா த்ரிசூலம்ச ததானம் நந்திகேச்வரம் ॥

ஓம் ஹாம் நந்தினே நம:

நந்திக்கு வடக்கு பாகத்திலே கங்கையை பூஜிக்கவும்.

மகராஸன காங்கங்காம் ஸவ்யவாம கரத்வயே |
நீலோப்பலம் பூர்ணகும்பம் தததீம் சுக்லரூபிணீம் ॥

ஓம் ஹாம் கங்காயை நம:

வாயிலின் வடப்புற நிலைக்காலில் மஹாகாளரைப் பூஜிக்கவும்

க்ருஷ்ணம் த்ரயக்ஷம் மஹாகாளாம் ஸவ்ய வாம கரத்வயே |
கபாலம்ச த்ரிசூலம்ச ததானம் விகடானனம் ||

ஓம் ஹாம் மஹாகாளாய நம:

மஹாகாளருக்குத் தென்புறத்தில் யமுனா தேவியை பூஜிக்கவும்

ச்யாமாம் கூர்மஸ்திதாம் வாமஸவ்யஹஸ்த த்வயேகடம் |
நீலோத்பலம்ச பிப்ராணாம் யமுனாம்ச விபாவயேத் ||

ஓம் ஹாம் யமுனாயை நம:

இனி வாயிலின் தென்புறத்தில் ஓம் ஹாம் டிண்டிநே நம: என்றும் வடப்புறத்தில் ஓம் ஹாம் முண்டிநே நம: என்றும் பூஜித்து ஓம் ஹாம் ஸர்வேப்யோ த்வாரபாலேப்யோ நம: என்று பூஜிக்கப்பட்ட அனைத்து த்வாரபாலகர்களுக்கும் பொதுவாக தூப, தீப, நைவேத்யம், அர்க்யம் இவைகளை கொடுத்து உபசரித்து அவர்களைச் சிவபூஜைக்கு எவ்வித இடையூறும் வராமல் காக்குமாறு வேண்டி விக்னோச்சாடனம் செய்ய வேண்டும். (விக்னம் - தடை : உச்சாடம் - போக்குதல்)

வலது பெருவிரல், நடுவிரல் இவைகளை இருகண்களில் வைத்து சுட்டுவிரலை மேல் நோக்கியவாறு நீட்டி (திவ்ய முத்திரை) ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்ற சிவ மூலமந்திரத்தை உச்சரித்த வண்ணம் கண்களை மேல்நோக்கி நிரீக்ஷணம் செய்து ஸ்வர்க்கத்திலிருந்து வரும் விக்னங்களைப் போக்கி,

நாராச முத்திரையினாலே (இரு சுட்டு விரல்களிலும் புஷ்பம் வைத்து இருபெருவிரல்களாலும் நெறிப்பது).புஷ்பம் வைத்து ஓம் ஹ: அஸ்த்ராய பட் என்று ஆகாசத்திலெறிந்து அங்கிருந்து வரும் விக்னங்களைப் போக்கி

ஓம் ச்லீம் பம் சும் ஹூம் பட் பாசுபதாஸ்த்ராய நம: என்று வலது குதிகாலின் அடிப்பாகத்தை மும்முறை பூமியில் தட்டி அங்கிருந்து வரும் விக்னங்களைப் போக்கி வாயிலின் கீழ்நிலையில் ஓம் ஹ: அஸ்த்ராய த்வாரபாலாய நம: என்று

அஸ்திரதேவர் வாயிலைக் காப்பதாகப் பாவித்து பூஜிக்க

மேற்கு வாயிலில் த்வார பூஜையை முடித்து அவ்வாயிலின் வழியே உட்புகுந்து சுவாமியை வலமாக வந்து தென்மேற்குபுறத்தில் வாஸ்து பிரம்மனை பூஜிக்கவும்.

ஹம்ஸ ஸ்தந்துந்திலம் கௌரம் ஸச்மச்ரு சதுரானனம் ।
துதானம் தக்ஷிணேவாமே தண்டாக்ஷஸ்ருக் கமண்டலும் ॥

என்று த்யானித்து ஓம் ஹாம் வாஸ்த்வதிபதயே ப்ரம்மணே நம: என்று பூஜிக்கவும்

பிறகு ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று திருமஞ்சன / ஸ்நான குடம் / அண்டா / பாத்திரம் / கங்காளத்தை சுத்தப்படுத்தி ஓம் ஹாம் ஹ்ருதயாய வௌஷட் என்று ஜலத்தை நிரப்பி, அநுஷ்டான விதியில் சொல்லியபடி நிரீக்ஷணம், ப்ரோக்ஷணம், தாடனம், அப்யுக்ஷனம் முதலிய நால்வகை சுத்திகளைச் செய்து, புஷ்பம் முதலான பூஜா த்ரவ்யங்களையும், உபகரணங்களையும் திவ்ய முத்திரையினால் பார்க்கவும். பின் தர்ப்பாஸனத்தில் சுகாஸனமாக வடக்கு முகமாக உட்கார்ந்து பூதசுத்தி செய்க.