KAILASA Library/விஷேஷ தீட்சை/அநுஷ்டானம்Sign in
விஷேஷ தீட்சை

அநுஷ்டானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸூர்யோதயத்திற்கு ஐந்து நாழிகைக்கு முன் (2.5 நாழிகை = 1 மணி நேரம்) நித்திரை விட்டெழுந்து குருபதேசப்ரகாரம் சி வனை த்யானம் செய்க. பின் ஜலமலங்களைப் போ க்கி தந்தசுத்தி செய்து கிழக்கு முகமாக (நதி /ஆற்றில் குளிக்கும் சமயம் தண்ணீர் போக்கிற்கு எதிர் திசையாக) நின்று முழு தேகமும் தூய்மை ஆகும் வண்ணம் ஸ்நானம் செய்க. பிறகு உலர்ந்து வெண்ணிறமான தூய்மையான வஸ்த்ரங்களைத் தரித்துக்கொண்டு முதலில் ப்ராம்ஹி ஸந்தியைச் செய்தபின் சைவ ஸந்தியைச் செய்க.

காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும் மாலை மேற்கு நோக்கியும் ஆஸனத்தில் அமர்ந்து அநுஷ்டானம் செய்ய வேண்டும்.

அஸ்த்ராய நம: என்று மூன்றுமுறை சிரஸில் ப்ரோக்ஷித்து அஸ்த்ராய ஸ்வாஹா: என்று மூன்றுமுறை அர்க்யம் கொடுத்து அஸ்த்ராய நம: என்று பத்துமுறை ஜபித்து அஸ்த்ராய நம: என்று ஒருமுறை அர்க்யம் விடவும்

ஆசமனம்

வலது கையைப் பசுமாட்டின் காது போல வைத்துக்கொண்டு அதில் உளுந்து மூழ்குமளவு சுத்த ஜலத்தை உள்ளங்கையிலே வைத்து மூன்றுமுறை ஆசமனம் செய்க.

ஓம் ஹாம் ஆத்ம தத்வம் சோதயாமி ஸ்வதா ஓம் ஹாம் வித்யா தத்வம் சோதயாமி ஸ்வதா ஓம் ஹாம் சிவ தத்வம் சோதயாமி ஸ்வதா பிறகு ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று சொல்லி பெருவிரலை (கட்டை விரல்) மடித்துக் கொண்டு (அடிபாகத்தினாலே) உதடுகளை இருமுறை துடைக்க வேண்டும்.

மந்த்ரந்யாஸம் (மந்திரங்களை உடம்பில் பதிவு செய்தல்) வலது பெருவிரல் (கட்டை விரல்) அணிவிரல்களாலே (மோதிரவிரல்) ஓம் கம் கணபதயே நம: என்று முகம் / புருவ மத்தியில் ஓம் ஹாம் ஸூர்யாய நம: என்று சிரசு / தலை ஓம் ஹாம் சந்த்ராய நம: என்று ஹ்ருதயத்தையும்

ஓம் ஹாம் அஸ்வினீப்யாம் நம: என்று நாசி /மூக்கு ஓம் ஹாம் இந்த்ராதிப்யோ நம: என்று செவித்துளைகள் ஓம் ஹாம் விஷ்ணவே நம: என்று கரங்களையும், தோள்களையும் ஓம் ஹாம் ப்ரஜாபதயே நம: என்று நாபியையும் / தொப்புளையும் தொட்டு பிறகு ஐந்துவிரல் நுனிகளையும் சிரஸில் வைத்து ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்று சொல்லி மந்த்ரந்யாஸம் செய்யவும்.

பஸ்ம ஸ்நானம் (விபூதி தரித்தல்):

பஸ்மத்தை இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ராக்ஷஸர்களின் திருப்திக்காக வலதுகை மோதிரவிரல் மற்றும் பெருவிரல்களின் நுனியில் சிறிதளவு எடுத்து ஓம் அஸ்த்ராய நம: என்று சொல்லி நிருதி (தென்மேற்கு) திக்கிலே போட வேண்டும்.

சதுஸ்ஸம்ஸ்காரம் (நால்வகை சுத்தி) (நிரீக்ஷணம், புரோக்ஷணம், தாடனம் மற்றும் அப்யுக்ஷனம்) ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: வலதுகை பெருவிரல், நடுவிரல் இவைகளை இரு கண்களுக்கு நேராக வைத்து ஆள்கா ட்டி விரலை விபூதி நோக்கி நீட்டிப்பார்க்க வேண்டும். இது நிரீக்ஷணம் (விபூதியைப் பார்த்தல்). ஓம் ஹ: அஸ்த்ராய நம: புரோக்ஷணம் (ஜலத்தினால் தெளித்தல்) ஓம் ஹைம் கவசாயஹூம்: தாடனம்-ஆள்காட்டிவிரலால் விபூதியைத் தட்டவேண்டும். ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: அப்யுக்ஷணம்- ஒரு சொட்டு ஜலம் ஊற்ற வேண்டும்.

ஓம் ஹ: அஸ்த்ராய பட்: திக்பந்தனம்-வலதுகையை சொடுக்கிக் கொண்டே விபூதியை சுற்றவும். ஓம் ஹைம் கவசாய நம: அவகுண்டம்-ஆள்காட்டிவிரலை நீட்டி விபூதியைச் சுற்றவும். ஓம் ஹைம் கவசாய வௌஷட்: விபூதியை வலது உள்ளங்கையால் மூடவும். பின் 16 மந்திரங்களால் அபிமந்திரித்தல் (கலா மந்திரங்கள் 5, ஸம்ஹிகா மந்திரங்கள் 11) ஓம் ஹ்லாம் நிவ்ருத்தி கலாயை நம: ஓம் ஹ்வீம் ப்ரதிஷ்டா கலாயை நம: ஓம் ஹ்ரூம் வித்யா கலாயை நம: ஓம் ஹைம் சாந்தி கலாயை நம: ஓம் ஹௌம் சாந்த்யதீத கலாயை நம: ஓம் ஹோம் ஈசான மூர்த்தாய நம: ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம: ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம: ஓம் ஹீம் வாமதேவ குஹ்யாய நம: ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம: ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: ஓம் ஹீம் சிரஸே நம: ஓம் ஹூம் சிகாயை நம: ஓம் ஹைம் கவசாய நம: ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம: ஓம் ஹ: அஸ்த்ராய நம:

மலஸ்நானம் :

விபூதியை வலதுகை மோதிரவிரல், பெருவிரல் நுனியால் தொட்டு ஓம் அஸ்த்ராய நம: என்று சொல்லி தலை முதல் பாதம் வரையிலான அங்கங்களை தொட்டு ஸ்பரிக்க வேண்டும்.

பிறகு விபூதியில் வேண்டிய அளவு ஜலம் சேர்த்து ஓம் ஹௌம் கவசாய நம: என்று சொல்லி குழைத்து திரிபுண்டரமாக இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குல நீளத்திலும் மற்றையவிடங்களில் ஓர் அங்குல நீளமும் இட்டுக் கொள்ளவும்.

ஓம் ஹோம் ஈசான மூர்த்தாய நம:என்று சிரஸிலும்
ஓம் ஹேம் தத்புருஷாய வக்த்ராய நம:என்று நெற்றியிலும்
ஓம் ஹூம் அகோராய ஹ்ருதயாய நம:என்று மார்பிலும்
ஓம் ஹிம் வாமதேவாய குஹ்யாய நம:என்று நாபியிலும்
ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:என்று முழங்கால்களிலும் மற்றைய இடங்களிலும் இட்டுக்
கொள்ளவேண்டும்.’

சேஷித்த (மிகுந்து போன) பஸ்மத்தை ஜலத்துடனே கூட ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்று சொல்லி கும்பமுத்திரையினாலே சிரஸிலே அபிஷேகம் செய்து கீழே சிந்தின / விழுந்த பஸ்மத்தை ஹ்ருதயத்திலே சேர்த்துக் கொள்ளவும்.

ஸகளீகரணம் (கரந்யாஸம் - அங்கந்யாஸம்):

கரந்யாஸ மந்த்ரம்கரந்யாஸம் செய்தல்
ஓம் ஹ: அஸ்த்ராய பட்என்று சொல்லி வலது கையினால் இடது கையையும், இடது கையினால் வலது கையையும் மீண்டும் வலது கையினால் இடது கையையும் மேலும் கீழுமாகத் துடைக்கவும் (இடது 2 வலது 1).
ஓம் ஹௌம் சக்தயே வௌஷட்என்று சொல்லி இரண்டு கைக்கட்டை விரல்களால் உள்ளங்கையை கீழிருந்து மேலாக விரல்நுனிவரைத் துடைக்க வேண்டும்.
ஓம் ஹாம் சிவாஸனாய நம: ஓம் ஹாம் ஹும் ஹாம் சிவமூர்த்தயே நம:பின் மீண்டும் இரண்டு கட்டைவிரல்களையும் உள்ளங்கை மத்தியில் வைத்து சிவனுடைய ஆசனத்தையும், சரீரத்தையும் பாவிக்கவும்.
ஓம் ஹோம் ஈசான மூர்த்நே நம:இரண்டு ஆள்காட்டி விரல்களால் கட்டை விரல்களை கீழிருந்து மேலாக ந்யஸித்து
ஓம் ஹேம் தத்புருஷாய வக்த்ராய நம:இரண்டு கட்டை விரல்களால் ஆள்காட்டி விரல்களையும்
ஓம் ஹூம் அகோராய ஹ்ருதயாய நம:இரண்டு கட்டைவிரல்களால் நடுவிரல்களையும்
ஓம் ஹிம் வாமதேவாய குஹ்யாய நம:இரண்டு கட்டைவிரல்களால் மோதிர விரல்களையும்
ஓம் ஹம் ஸத்யோஜாதமூர்த்தயே நம:இரண்டு கட்டை விரல்களால் சிறுவிரல்களையும்
ஓம் ஹாம் ஹௌம் வித்யாதேஹாய நம:இரு கட்டை விரல்களையும் உள்ளங்கைகளிலும்
ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம:ஆள்காட்டி, நடு மற்றும் மோதிரவிரல்களால் உள்ளங்கைகளில் ந்யஸித்து
ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம:இரு கட்டைவிரல்களையும் உள்ளங்கைகளில் ந்யஸித்து கரமத்தியில் பாவித்த சிவத்திற்கு சிரஸூ, முகம், ஹ்ருதயம், நாபி, பாதங்கள், அங்கங்கள், வித்யாதேஹம், கண்கள் இவைகள் கற்பிக்கப்பட்டதாகப் பாவித்து
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:கட்டைவிரல்களால் சிறு விரல்களையும்
ஓம் ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹாகட்டை விரல்களால் மோதிர விரல்களையும்
ஓம் ஹூம் சிகாயை வௌஷட்கட்டை விரல்களால் நடுவிரல்களையும்
ஓம் ஹைம் கவசாய வௌஷட்கட்டை விரல்களால் ஆள்காட்டி விரல்களையும்
ஓம் ஹ: அஸ்த்ராய பட்ஆள்காட்டி விரல்களால் கட்டை விரல்களையும் ந்யஸித்து
ஓம் ஹைம் கவசாய ஹூம்இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று முறை சுற்றிய பிறகு
ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட்இரு கைகளையும் கூட்டி பரமீகரணஞ் செய்தல் வேண்டும்
அங்கந்யாஸ மந்த்ரம்அங்கந்யாஸம் செய்தல்
ஓம் ஹாம் சிவாஸனாய நம: ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தயே நம:வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலைச் சேர்த்து ஹ்ருதயத்தில் ந்யஸித்து
ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே நம:வலதுகைக் கட்டைவிரலை சிரஸில் ந்யஸித்து
ஓம் ஹேம் தத்புருஷாய வக்த்ராய நம:வலதுகைக் கட்டைவிரல் ஆள்காட்டி விரலைச் சேர்த்து புருவமத்தியில் ந்யஸித்து
ஓம் ஹூம் அகோராய ஹ்ருதயாய நம:வலதுகைக் கட்டைவிரல் நடுவிரலைச் சேர்த்து ஹ்ருதயத்தில் ந்யஸித்து
ஓம் ஹிம் வாமதேவாய குஹ்யாய நம:வலதுகைக் கட்டைவிரல் மோதிரவிரலை சேர்த்து நாபியில் ந்யஸித்து
ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:இரு கைக்கட்டைவிரல் சிறு விரல்களை முழந்தாளிலும் ந்யாஸிக்கவும்
ஓம் ஹாம் ஹௌம் வித்யாதேஹாய நம:வலதுக்கை கட்டைவிரல் மோதிரவிரலைச் சேர்த்து கண்டத்தில் ந்யஸித்து
ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம:ஆள்காட்டி, நடு மற்றும் மோதிரவிரல்களால் கண்களுக்கு நேரே நீட்டி ந்யஸித்து
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:வலதுக்கை கட்டைவிரல் சிறுவிரலைச் சேர்த்து ஹ்ருதயத்திலும்
ஓம் ஹ்ரீம் சிரேஸ ஸ்வாஹாவலதுக்கை கட்டைவிரல் மோதிரவிரல் சேர்த்து சிரஸிலும்
ஓம் ஹூம் சிகாயை வஷட்வலதுக்கை கட்டைவிரல் நடுவிரலைச் சேர்த்து சிகையிலும்
ஓம் ஹைம் கவசாய வௌஷட்இருகை ஆள்காட்டிவிரல்களையும் இருதோள்களிலும் ந்யஸித்து
ஓம் ஹ: அஸ்த்ராய பட்வலதுஆள்காட்டி விரலால் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டி
ஓம் ஹ: அஸ்த்ராய பட்வலது கட்டைவிரல், நடுவிரலைச் சேர்த்து சொடுக்கி தன்னை வலமாக சுற்றி திக்பந்தனம் செய்து

| ஓம் ஹைம் கவசாய ஹூம் | இருகை ஆள்காட்டி விரல்களால் தன் கண்டத்தைச் சுற்றி ஸ்தன மத்தியில் நிறுத்தி பிறகு | | ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட் | இரண்டு கைகளாலும் சிரஸிலிருந்து பாதம் வரை வருடி தன்னுடைய உருவத்தையே சிவமாகப் பாவிக்க வேண்டியது. |

ப்ராணாயாமம்

சரீரத்தில் இருக்கின்ற ப்ராணவாயுவை முறையாக வெளிப்படுத்தி (ரேசகம் வெளியிடுதல்) பிறகு மீண்டும் வெளிக்காற்றை இடது நாசியால் இழுத்து வயிற்றை (பூரகம் நிரப்புதல், பூரித்த காற்றை முறைப்படி நிறுத்தி (கும்பகம் நிறுத்துதல்) மீண்டும் வலது நாசியால் வெளியிடுதல் ப்ராணாயாமமாகும்.

ரேசகம், பூரகம், கும்பகம் இவைகள் ஒவ்வொன்றையும் பன்னிரண்டு மாத்திரை கால அளவில் (1 மாத்திரை=1 நொடி) செய்வது உத்தமம். ஒவ்வொரு முறை ப்ராணாயாமம் செய்யும்போதும் வலது காதை ஒவ்வொரு முறை தொட்டுக்கொள்ள வேண்டும். கங்கையானவள் வலதுகாதிலும் அக்னிதேவன் நாஸியிலும் வசிப்பதாக ஐதிகம். ரேசகம், பூரகம், கும்பகம் இவைகள் செய்யும்போது ஸம்ஹிதா மந்திரங்களை உச்சரித்து ஜபித்துக்கொண்டு செய்யவேண்டும்.

ஸம்ஹிதா மந்திரங்கள் :

ஓம் ஹோம் ஈசான மூர்த்தாய நம:
ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம:
ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:

ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
ஓம் ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா
ஓம் ஹூம் சிகாயை வஷட்
ஓம் ஹைம் கவசாய ஹூம்
ஓம் ஹௌம் நேத்ரத்ரயாய வௌஷட்
ஓம் ஹ: அஸ்த்ராய பட்