KAILASA Library/விஷேஷ தீட்சை/குண்டலினி சக்தியை உயிர்த்து எழச் செய்யும் நேர்வழிSign in
விஷேஷ தீட்சை

குண்டலினி சக்தியை உயிர்த்து எழச் செய்யும் நேர்வழி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் உடலில்... உங்கள் தாயின் தசை நினைவு (Muscle Memory), உங்களுடைய தசை நினைவாக இருக்கும். உங்கள் தந்தையின் உயிர் நினைவு (Bio-Memory), உங்களுடைய உயிர் நினைவாக இருக்கும்.

தீட்சையின் பலனாக... உங்கள் குருவின் ஜீவசக்தி (Bio-Energy), உங்களுடைய ஜீவ சக்தியாக-அனுபூதியாக பொங்கும்.

உங்களுக்குள் சிவோஹம் எனும் அனுபூதி நிலையாகி, ஆனந்தம் வெளிப்பட்டு, அறிவும் ஆற்றலும் பெருகி, குண்டலினி சக்தி பொங்குவதற்காக அளிக்கப்படும் தீட்சையே சமய தீட்சை.

ஞானமடையாதவரிடமிருந்து தீட்சை பெறும்பொழுது, தீட்சைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம் செய்யவேண்டும்.

ஆனால், வாழும் அவதார புருஷரிடம் தீட்சை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவ சக்தியில் பதிய வைக்கிறார். அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம் தொண்டைக்குழியில் ஓடிக்கொண்டே இருக்கும், இயங்கிக்கொண்டே இருக்கும்.

நீங்கள் சிவமாக மாறும் வரை இந்த ருத்ராக்ஷத்தை அணிந்திருங்கள். உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தியூட்டி தரப்படும் திருநீற்றுப்பையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.

திருநீறு சிவபெருமானின் அஸ்திர தேவதை.

நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து நீங்கள் திருநீற்றை அளித்தாலும், அது சென்று அவ்வேலையை செய்து முடித்துவிட்டு திரும்பி வரும். இந்த தீட்சையை பொறுத்த வரை நீங்கள் தீட்சையின்படி வாழ ஆரம்பித்தால்போதும், மிகப்பெரிய சக்திகளை உங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்த துவங்குவீர்கள். சமய தீட்சை குண்டலினி சக்தியை உங்களுக்குள் உயிர்த்து எழ வைக்கும்.

ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்

ஆகமத்தில், சிவபெருமான் சமய தீட்சையை அடிப்படை தீட்சையாக தருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீட்சை எடுத்தப்பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.

எம்பெருமான் ஆலய வழிபாட்டிற்கான அடிப்படை தீட்சையாக சமய தீட்சையை சொல்கிறார். பிரதோஷ காலங்களில் நந்தியை சென்று வழிபடுவது எல்லாம்கூட சமய தீட்சை பெற்றபிறகுதான் பலன் தரும். உண்மையில் தீட்சை எடுத்தால்தான் ஆலய வழிபாட்டிற்கு heட பலன் உண்டு. இதை ஆகமத்தில் சிவபெருமான் மிகத்தெளிவாக சொல்கிறார். சமய தீட்சையால் ஆலய வழிபாட்டின் முழுப்பலனையும் பெறுங்கள். அதிர்ஷ்டசாலியாகுங்கள்

பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன்...

சிலபேருக்கு சிவபெருமானிடமிருந்து சொத்து கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடைக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும். சிவபெருமானின் வண்டி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லாம் அதிர்ஷ்டசாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதிர்ஷ்டசாலி.

‘அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி’ என்று சொல்வோம். எம்பெருமான் சொன்னபடி, அவர் விதித்த விதிப்படி, அவர் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அளிக்கப்படும் சிவதீட்சை பெற்று வாழுங்கள், மயத்தை சிவ hisசிவஹோமாக்குங்கள்.

எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கும் சொல்லி சமய தீட்சை பெற வையுங்கள். சிவோஹம் என்ற ஜீவன்முக்த விஞ்ஞானத்தை, ஜீவன்முக்த வாழ்க்கை முறையை மக்களெல்லாம் வாழ வையுங்கள். வேதநெறி தழைத்தே தாங்கும்.

தத்துவத்தை தெரிந்து, சத்தியத்தை உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான். ஞானம் கிடைக்கும். ஆண்டவன் இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலய வழிபாடாகும். தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். தத்துவம் புரியாமல் செய்வது, அறியாமல் செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.

சிவதீட்சை பெற்று, தத்துவத்தை அறிந்து சிவோஹத்தை பெறும் அதிர்ஷ்டசாலியாகுங்கள்.