விசேஷ தீட்சை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சமய தீட்சை எடுத்து முடித்தவர்களுக்கான அடுத்த நிலை தீட்சை - விசேஷ தீட்சை. நான்கு நாள் தியான முகாமாக நடைபெற்று இந்த தீட்சை வழங்கப்படும். இதில் நீங்கள் தினமும் பூஜை செய்வதற்கு 'ஆத்மலிங்கம்' பிரதிஷ்டை செய்து தரப்படும்.
ஆத்மலிங்கம் ஸ்படிகத்தால் ஆனது. ஸ்ரீ சக்கரம் அதில் வரையப்பட்டிருக்கும். பெண்களும் இந்த தீட்சை பெற்று எல்லா நாட்களிலும் பூஜை செய்யலாம்.
மாதவிலக்கு காலங்களில்கூட பெண்கள் ஆத்மலிங்கப் பூஜை செய்யலாம். சிவபெருமான் சொல்கிறார், 'நான் அனைவரின் இதயத்திலும் இருக்கிறேன். மாதவிலக்கு காலங்களில் மட்டும் நான் என்ன பெண்களின் இதயத்திலிருந்து வெளியிலா வரமுடியும்?' என்று மிகத்தெளிவாக ஆகமத்தில் சொல்லியிருக்கிறார்.
தன்னை வழிபடுவதற்கு சிவபெருமான் யாருக்கும் எந்த தடைகளையும் தரவில்லை.
ஆண், பெண், திருநங்கை, வாழும் எல்லா ஜீவராசிகள், உயிரினங்களுக்கும் தன்னை வழிபடும் உரிமையுண்டு என்று சிவபெருமான் சொல்லியிருக்கிறார்.

விஷேசே தீட்சையில் முக்கியமாக கருதப்படும்...