KAILASA Library/விஷேஷ தீட்சை/மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான விஞ்ஞானிSign in
விஷேஷ தீட்சை

மனிதனை இறைவனாக மாற்றும் மெய்ஞான விஞ்ஞானி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆழ்ந்து கேளுங்கள்... அப்பா-மகன் உறவில்... அப்பா என்ன சொல்கிறார், ‘நீ ஏதாவது வியாபாரத்தை செய்து உன் திறமையை நிரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கின்றேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.’

மகன் என்ன சொல்கிறார், ‘ நீ எதையாவது கொஞ்சமாவது கொடு. அதை வைத்துதான் என் வியாபாரத்தை நடத்தி என் திறமையை நிரூபிப்பேன்’. இது முடிவிற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, ‘சரிப்பா, உன் அப்பா கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை...முதல் காசோலையை நான் என்னுடையதிலிருந்து தருகிறேன். இதை வைத்து நிரூபி. நீ நிரூபிக்கும்பொழுது உன் அப்பா தரத்துவங்குவார். அப்பொழுது நீ இன்னும் மேலும் நிரூபிப்பாய். இதுபோன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் மொத்தமும் உனக்கே வந்து சேரும்.’

இதில், நீங்கள்தான் மகன். சிவன்தான் அப்பா.

அவர், ‘நீ நிரூபி’ என்கிறார். நீங்களோ, ‘தந்தால் நிரூபிக்கிறேன்’ என்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் குரு, ‘சரிப்பா. அவர் தரும்போது தரட்டும். முதலில் நான் தருகிறேன். இந்த சக்தியை வைத்து உன்னை நிரூபி. நீ பொறுப்பெடுத்து எழுந்து நில். அதன்பின், தானாகவே அவர் அனைத்தையும் தந்துவிடுவார்’ என்று உங்களுக்கு சொல்லி சாத்தியங்கள் அளித்து உத்வேகம் அளிப்பார். குருவே, உங்களுக்கு இந்த முதல் உத்வேகத்தை தருகிறார். உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளிக்க வந்தவரே குருநாதர்.

டி.என்.ஏ வை விழிப்பிக்க வைக்கும் மந்திரம்

குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, உங்களுடைய தெய்விக சக்திகளை வெளிப்படுத்துவதற்கான உரிமைகளை தருவார். தீட்சை அளித்து, உங்களுடைய உரிமைகளை பெறச் செய்வார். அந்த தீட்சைதான் சமய தீட்சை. இந்த சமய தீட்சையில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும்.

எம்பெருமானே, சதாசிவனே, காமிக ஆகமத்தில்- சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகின்றாறோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதே முறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும். சமய தீட்சையின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் திருநீற்றுப்பையும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் தொண்டைக்குழியின்மீது இருக்கும். தொண்டைக்குள் இந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். இதனால் ருத்ராக்ஷம் சக்தி பெறும்.

மந்திரம் ஓடுவது நிற்கும்பொழுது ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.

தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை ஜபிக்கவேண்டும் என்று உங்களுக்கு தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை ஜபிக்க வைக்கும். 24 மணி நேரமும் மந்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால், சிவத்தன்மை - சிவனுடைய ஆனந்தமும், அறிவும், சக்தியும் ஞானமும் உங்கள் உயிர்நினைவில் பொங்கிப் பெருகிக்கொண்டே இருக்கும்.

இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏ -வை விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்தீர்க ளோ, அந்த குலத்தின் தனித்துவமான டி.என்.ஏ விழிப்படையும். இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்துவமும் உங்களுக்குள் வெளிப்படத்துவங்கும்.