ஹரித்வாரின் மகிமை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஹரித்வார் - மகாதேவரை காணும் நுழைவாசல். இந்த நகரத்தை கங்காத்வார் மற்றும் ஹரித்வார் என்றும் அழைப்பர்.
நம்முடைய பாரதத்தில் ரிஷிகள் முற்றும் துறந்தவர்களாக, ஆசைகளுக்கு அப்பாற்பட்டு இருந்ததால் நம்மிடம் முன்பும் இப்போதும் எப்போதும் மிக நல்லவைகளே இருந்தன. அரசாங்கத்திடமோ, படைபட்டாளத்திடமோ மற்றும் பண வங்கிகளிடமோ எந்த விதமான தொடர்பும் அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் வைஷ்யர்களும் இல்லை; க்ஷத்ரியர்களும் இல்லை. இந்த அடையாளத்தன்மைகள் பிறந்த குலத்தினால் அவர்களுக்கு வரவில்லை. குணத்தால் வந்தது, அவர்களது மனநிலையாலும் முன் செய்த நல்வினைகளாலும் வந்ததே. அவர்கள் வைஷ்யர்களோ, க்ஷத்ரியர்களோ, சூத்திரர்களோ இல்லை; அவர்கள் குணத்தால்-உணர்வால் சுத்த பிராமணர்களே! அவர்கள் ஜீவன் முக்தர்கள், முக்தியில் வாழும் ஜீவன்கள். அவர்கள் மிக உயர்ந்த ஜீவன் முக்த உள்ளுணர்தலை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்த ரிஷிகள்தான் ஹிந்து தர்மத்தின் மூலக்கூறாக இருந்தவர்கள். அவர்களைச்சுற்றி அடுக்கடுக்காக நாகரீகம் வளர்ந்தது. அவர்கள் மகாதேவரிடம் செல்லும் வாசல் என்றழைக்கப்படும் ஹரித்துவாரின் மூலக்கூறாக விளங்கினார்கள்- சரியாக இந்த இடத்தில் தான் ஞானமடைவதற்கான இடமும் மூலக்கூறும் உருவாக்கப்பட்டது.