தெய்வீகம் உங்களின் கூட்டுப்படைப்பாளர் ஆவதற்கு அனுமதியுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தெய்வீகம்
உங்கள்
அனுமதிக்காக
காத்திருக்கிறது!
இன்னர் அவேக்கனிங் (IA) செய்ய நீங்கள் முடிவெடுத்து, விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்திட்டவுடனேயே உணர்வுறவு (Entanglement) தொடங்கிவிடுகிறது. நிகழ்ச்சி க்கு வருகை தந்து பதிவு செய்தவுடன், பயிற்சியானது (Entrainment) தொடங்கிவிடுகிறது. அதன்பின், என்னை காணும் முதல் நாளிலிருந்து, தருணத்திலிருந்து ஜீவன் முக்தி (Enlightenment) தொடங்குகிறது!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணங்கள் ஒன்றுபடும்போது என்டான்ங்கிள்மென்ட் எனும் உணர்வு தொடர்பு உண்டாகிறது. இரண்டு பேர் ஒரே கருத்திற்காக ஒருங்கிணைவது என்ட்ரைன்மென்ட் எனும் பயிற்சி. இரண்டு பேர் தம்முடைய கருத்துக்களை கடந்து ஒருங்கிணைவது ஜீவன் முக்தி. நாம் எண்ண ஓட்டமில்லாத நிலையில் இருக்கும்பொழுது, ஜீவன் முக்தரோடு உணர்வால் ஒருங்கிணைந்து இருப்போம்.
புரிந்துகொள்ளுங்கள், இன்னர் அவேக்கனிங் தியான முகாமில் கலந்துகொள்ளவேண்டும் என நீங்கள் முடிவெடுக்கும்போதே உங்கள் உணர்வோடு தொடர்பு இணைக்கப்படுகிறது-அக்கணமே இணைப்பு துவங்குகிறது. அதன்பிறகு அந்த விருப்பத்தை உண்மையாக்குவது எனது கடமை. தமிழில் அழகான பாடல் ஒன்றுள்ளது‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதே அது. அவரது அருள் இல்லையென்றால் நீங்கள் அவருடனான தொடர்பை, இணைப்பை உணர முடியாது. அருள் இல்லையென்றால் இன்னர் அவேக்கனிங் செய்யும் எண்ணமே உங்களுக்கு தோன்றி இருக்காது. அதனால், இன்னர் அவேக்கனிங் செய்யும் எண்ணம் தோன்றிய அக்கணமே என் ஆசிகள் உங்களுக்கு உரித்தாகிவிட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
விருப்பப்படிவம் பூர்த்தி செய்து தந்தவுடன், உங்கள் வாழ்க்கையில் நுழைவதற்கும், உங்கள் உணர்வு நிலையை மாற்றியமைப்பதற்கும், தடைகளை விலக்குவதற்கும், இன்னர் அவேக்கனிங் செய்வதற்கு அனுகூலமான எல்லா வாய்ப்புகளை திறப்பதற்கும் எனக்கு நீங்கள் ஆதாரபூர்வமாக அனுமதி தருகிறீர்கள். விருப்பப்படிவம் அதற்கான அனுமதியை எனக்கு கொடுக்கிறது.
எனது அருள் எப்போதும் எல்லா திசைகளிலும் பாய்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அருள் எப்போதுமே நுழைவதற்கு வெட்கப்படும். அது, ‘நான் உள்ளே நுழையலாமா? நான் தொல்லை தருவதாக அவர் நினைப்பாரா? அவர் தனிமையை அவமதித்ததாக நினைப்பாரா?’ என்று தயங்கும்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நிறைய தருணத்தில் கடவுள் உதவிசெய்ய தயாராக உள்ளார். ஆனால் நீ ங்கள், ‘நீ எப்படி உள்ளே நுழையலாம், எதற்காக உள்ளே நுழைந்தாய்?’ என திட்டுவீர்களோ என அஞ்சுகிறார். பலமுறை இதுபோன்று நிகழும்போது, நீங்கள் அவரிடம் ‘செத்தாலும் சாவேனே ஒழிய உன் உதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன் ’ என்று கூறி இருக்கிறீர்கள்.
அதனால் அவர் காத்திருக்கிறார். நடுநடுவே, ‘நான் உள்ளே

உள்ளே வரலாமா?' எனக்கேட்கிறார். விருப்பப்படிவத்தில் நீங்கள் கையெழுத்திடும்போது, நீங்கள் குருவின் அருள் உள்ளே வர அனுமதி கொடுக்கிறீர்கள்! முடிவாக, அருள் பிரவாகமாக உருவெடுத்து உள்ளே வர முடிந்ததால், நிலைமையை மாற்றி அமைத்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்து, எல்லா வழிகளையும் அவரால் திறந்து விட முடிகிறது.
விருப்பப்படிவத்தை நிரப்புங்கள். உங்கள் இன்னர்
அவேகனிங் சாத்தியமாவதற்கு நான் இணைந்து உதவிசெய்ய தயாராக இருக்கிறேன். இன்னர் அவேகனிங் எனக்கு அவசியம் என முடிவு செய்து விருப்பப்படிவத்தை நிரப்பினீர்களேயானால், நீங்கள் இன்னர் அவேகனிங் தியான முகாமில் கலந்துகொள்வதற்கு உதவும் ஒரு கூட்டு படைப்பாளராக இருப்பேன்.
ஆன்மீக மனமாற்றத்தை தள்ளிப்போடாதீர்கள். அந்த முடிவு இப்போதே எடுக்கப்பட வேண்டும்.

நீலகண்ட மகாதேவர் கோவில், ரிஷிகேஷ் நான் சிலநாட்களுக்கு முன் ஒரு பிரசித்திபெற்ற சிவன் கோயிலுக்கு சென்றிருந்தபோது பெற்ற எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். நீலகண்ட மகாதேவ் (இந்தியாவிலுள்ள ரிஷிகேஷ் பக்கத்தில் உள்ள)ஆலயத்திற்கு, எங்கு மகாதேவன் ஆலகால விஷத்தை உண்டு இந்த அண்டவெளியைக்காப்பாற்றினாரோ, அந்த ஆலயத்திற்குச் சென்றோம். ஈரேழு உலகத்தைக்காக்க அவர் ஆலகால விஷத்தை தானே உண்டார். அது மிகப்பெரிய கோயில் என்பதால் அந்த நகரம் அக்கோயிலைச்சுற்றி அமைந்துள்ளது.
கோயிலை பார்த்தபோது, ' இவ்வளவு பெரிய கோயிலின் விக்ரகம் ஏன் இவ்வளவு சிறியதாக இருக்கிறது? வேண்டுமென்றே இப்படி அமைத்திருக்கிறார்களா?' என நான் யோசிக்க ஆரம்பித்தேன். அந்நகரமே நீலகண்டம் என அழைக்கப்படுகிறது. ஈசனின் விக்ரகம் ஆறிலிருந்து ஒன்பதே அங்குல அளவுள்ளது. ஆனால் அந்த அமைப்பு தனித்துவத்தோடு இருந்தது. பக்தியை பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது! சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் ஐந்து லக்ஷம் பக்தர்கள் ஈசனை தரிசிக்க வருகிறார்கள்.
யோசித்துப்பார்த்து ஆச்சரியமடைந்தேன். மிகப்பெரிய கோயில்களில் எல்லாம் மிகச்சிறிய மூர்த்தியை வைப்பதன் மூலம் நம் முன்னோர்கள் என்ன தகவலைக் கூற நினைத்தார்கள்? என்ன தகவலைத்தர நினைத்தார்கள்?
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் கோயிலைச்சென்று அடையும் முன், உங்களுக்குள் பிரார்த்தனை உணர்வு உண்டாகும், உங்களில் பக்திப் பிரவாகமாகும், உங்களுக்குள் அன்பான உணர்ச்சி கள் தோன்றும் மற்றும் உங்களுக்குள் நிறைவுத்தன்மை உணர்வாக பெருகும். உங்களுக்குள் உருவாகும் உணர்விற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உங்களுக்குள் உயிர்ப்போடு உருவாகும் உணர்வே ‘மூர்த்தி’ (கடவுள் விக்ரகம்). இதைதான் நம்மிடம் நம் முன்னோர்கள் உணர்த்த விரும்புகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தெளிவுறுத்த விரும்புவது என்னவென்றால், ‘வெளியில் பெரிதாக எதையும் எதிர்பாராதீர்கள். வெளியில் இருப்பதை பார்க்கும்பொழுது நீங்கள் உங்களுக்குள் திரும்பி உள்ளுக்குள் இருக்கும் உணர்வை பாருங்கள் என்று ஞாபகப்படுத்துகிறார்கள்.’
மூர்த்தி மிகப்பெரியதாக இருந்தால், அந்த வெளித்தோற்றத்தை மட்டுமே கூர்ந்து கவனிப்பீர்கள். உங்கள் முழுக்கவனமும் அந்த மூர்த்தியின் மீதுதான் இருக்கும். விக்ரகம் மிகச்சிறியதாக, ஒரு வடிவுமில்லாமல் அதே சமயம் கணக்கிலடங்கா நகை, கண்களை ஈர்க்கும் துணிமணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்போது, இந்த வடிவமைப்பு மூலம் இதைத்தாண்டிய ஒன்றையே நம்மிடமிருந்து கேட்கிறார்கள் என்பது இயல்பாக புரியவரும்.
நீலகண்ட மகாதேவர் ஆலய மூலவர் விக்ரகத்தை முழுமையாக ஒரு கையால் மூடி விட முடியும். எங்கே இருக்கிறது விக்ரகம் என்று உங்களால் கண்டு பிடிக்க இயலாது. பின் அது என்ன? எதற்காக நாம் புராதன பெரிய கோயில்களுக்கு பயணம் செல்கிறோம்? புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அங்கே சென்றடையும்போது,
உங்கள் மனதிற்குள் உருவாகும் உணர்வே ‘விக்ரகம்’. அது தான் கடவுள்!
உலகம் முழுவதிலும் இருக்கும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்பதை முடிவாக அந்த நாளின் முடிவில் புரிந்துகொண்டேன். எல்லாமே விழிப்புணர்வின் உருவகங்கள். அந்த உணர்வே மனித உடலாகி, அதை பயன்படுத்திக்கொள்கிறது. நாம் ஆசைப்பட்டதை உருவாக்கும் திறன் நம் உணர்விற்கு உண்டு. நீங்கள் தற்பொழுது சோர்வாக உணர்ந்தாலோ, ஓய்வு பெற்றாலோ, வயதாகிவிட்டாலோ, இளமை மிகுந்தாலோ , வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க ஆயத்தமாய் இருந்தாலோ, நீங்கள்தான் அண்டவெளியில் இருக்கும் பிரம்மாண்டம் என்ற சக்தியின், அந்த உணர்வின் உருவம்.
தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள், நிகழ்வுகளைப்பற்றிய நினைவு மறந்து போவதானால் அந்த உண்மையை உங்களிடமிருந்து பிரித்தெடுத்துச் செல்ல முடியாது. நீங்கள் எல்லையற்ற பரம்பொருளுடன் இரண்டற கலந்ததை மறந்துபோனதால், ஓர்மை நிலை உங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது என அர்த்தமில்லை. நீங்கள் அதை மறந்ததால் அந்த மறதியிலேயே வாழவிடப்படுகிறீர்கள்நீங்கள் தான் அதை உருவாக்கியது.
எந்த ஜாதி, இனம், ஆண்/பெண் பாகுபாடு, மாநிலம், தேசம், பூர்வீகம் அல்லது கல்வியறிவு உள்ளவராக இருந்தாலும் உங்களின் உள் மனது உள்ளுணர்வுடன் அத்வைத நிலையில், நீங்கள் விரும்பியதை அடையும் வல்லமை பொருந்தியதாக உள்ளது. உங்கள் உள்வுணர்விற்கு நீங்கள் விரும்பியதை செய்து முடிக்கும் வலிமையும் அறியும் உள்ளது.
தைரியமாக இருங்கள், பலமடையுங்கள்! வலிமையான உணர்வை உங்களுக்குள் உருவாக்கிக்கொண்டே இருங்கள். உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் வலிமையான உணர்வுதான் உங்கள் பலம். உணர்வு தான் சொத்து. சரியான, வலிமை வாய்ந்த உணர்வை எந்த துறையில் நீங்கள் உருவாக்கினாலும் அந்த உணர்வுதான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான சொத்து என்பதை மறாவாதீர்கள்.
பரமஹம்ஸர் நீலகண்ட மகாதேவருக்கு ஆரத்தி காண்பித்தபோது எடுத்தது

