KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலத்தைSign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

உங்கள் எண்ணங்களே உங்கள் எதிர்காலத்தை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் எதுவும், வாழ்க்கையில் உணரும் எதுவும் உங்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கும் எதுவும் ஒரு எண்ணத்திலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொன்றுமே உங்கள் எண்ணங்களில் இருந்துதான் துவங்குகிறது !

இன்று நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைத்தால் அல்லது நீங்கள் விரும்பியதற்கு முற்றிலும் மாறாகக் கிடைத்தால், இவை அனைத்திற்கும் உங்கள் எண்ணங்களே பொறுப்பு.

அதை இவ்விதமாகப் பாருங்கள், உங்கள் எண்ணங்களை விதையாகவும், உங்கள் எண்ணும் விதத்தை மரமாகவும், உங்களுக்குக் கிடைக்கும் நிஜத்தை (பலனை) பழமாகவும் எண்ணிப் பாருங்கள். உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணும் விதத்தை மாற்ற முடியும். பழத்தின் பண்புகளையும், நிஜத்தையும் மாற்ற முடியும். நரகத்தைப் போன்றதொரு நிஜத்தை நீங்கள் கொண்டிருப்பதாக நினைத்தால், அதுவும் நீங்கள் உருவாக்கியதுதான். இதற்கு மாறாக, நீங்கள் விரும்புகின்ற நிஜத்தை உருவாக்குங்கள். அதற்கான சக்தி உங்களிடமே இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையை சுற்றிலும் இருக்கும் குழப்பங்களுக்கு நீங்களே பொறுப்பு. ஆனால் அந்தக் குழப்பங்களையும் உருவாக்கியது நீங்கள்தான் என்பதால், நீங்கள் அதை எளிதில் மாற்றிவிட முடியும். நீங்கள் விரும்பியதை பெற்றிருந்தாலும், நீங்கள் விரும்பியது உங்களிடம் இல்லையென்றாலும் அனைத்துக்கும் உங்கள் எண்ணங்களே பொறுப்பு. உங்கள் எண்ணும் விதத்தை ஒருமுறை மாற்றினால், இயற்கையாகவே, நீங்கள் உருவாக்குகின்ற நிஜம் மாறும்.

மக்கள் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுடைய மனப்பாங்குகள் பயனளிக்கக் கூடியதாக இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் உருவாக்கிய அந்தப் பழைய மனப்பாங்குகளுடனே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தனியாக முயற்சி செய்து அந்த பழைய மனப்பாங்குகளை விட்டுவிடுவதற்கு நீண்ட காலமாகும். வாழும் குருவின் வழிநடத்துதல்படி நீங்களே உங்கள் எதிர்காலத்தை மாற்றியெழுதும் போதுதான், அந்தப் பழைய மனப்பாங்குகள், உங்கள் எதிர்காலத்தை விட்டு உடனடியாக அகலும்.

ஆழ்ந்து கேளுங்கள் ! உங்கள் எதிர்காலம் காலியாக இருக்க முடியாது. ஒன்று நீங்கள் உங்கள் எதிர்காலத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் அல்லது ஏற்கனவே எழுதிய எதிர்காலம் வந்து நிறைத்துவிடும். நீங்கள் விழித்துக்கொண்டு, புதிய எதிர்காலத்தை எழுதி, கட்டி முடித்து, அதை மேம்படுத்தி உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையென்றால், உங்கள் கடந்த காலம் தானாகவே அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு, நீங்கள் உருவாக்கிய அந்தக் குழப்பங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே போகும்.

இந்த உண்மைக்கு விழித்துக்கொண்டு, உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து வருவதைத்தான் அகவிழிப்பு என்று அழைக்கிறோம். உங்கள் எதிர்காலத்தை திருத்தி எழுதுவது உங்கள் கை களில்தான் இருக்கிறது. 21 நாட்களிலேயே அதை எப்படிச் செய்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். எதை எழுதுவது? எப்படி நிஜமாக்குவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். எல்லா குழப்பங்களையும் உங்களால் நிரந்தரமாக சுத்தம் செய்து விட முடியும் !

Nithyananda seated in front of a Dakshinamurti statue
Plants and greenery