உங்கள் வாக்கினை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உடலில் இருக்கும் இதயம், நுரையீரல், கல்லீரல் என இன்னும் பல உறுப்புகளைப் போன்று ‘வாக்கு’ என்ற ஒன்று ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இது, தொண்டைக்கும் இதயத்திற்கும் இடையிலிருக்கும் பகுதியில், உங்கள் உடலும், மனமும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. இதன் துல்லியமான அமைப்பு ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். வாக்கின் மூலப்பொருள் உங்கள் மனதிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் அதன் இயக்கம் உடலின் களத்திலிருந்துதான் நிகழ்கிறது.
இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் சதை, தோல், தசை போன்ற ஸ்தூல பொருட்களாலேயே (Physical Matter) செய்யப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மேற்கு மருந்துகளினால் நோய்க்கான காரணத்தை சோதித்து இனம் கண்டறிய முடிகிறது. ஆனால் வாக்கு என்பது சூட்சும பொருளான மனதை மூலபொருளாக கொண்டது. வாக்கை போன்று பல வகையான உறுப்புகள் மனதை மூலபொருளாக கொண்டு இருக்கின்றன. அதனால்தான் மேற்கு மருந்துகளினால் மனதை மூலபொருளாக கொண்ட நோய்க்கான காரணத்தை கண்டறிய முடிவதில்லை.
ஆழ்ந்து கேளுங்கள், அதில் முக்கியமான ஒன்றுதான் ‘வாக்கு’. இது மனோதத்துவமோ கற்பனையோ அல்லது ஒரு மாயக்காட்சியோ அல்ல.
வாக்கு என்பதும் ஓர் முக்கியமான உறுப்பு. அதுவே நீங்கள் உதிர்க்கும் எல்லா வார்த்தைகளுக்கும் பொறுப்பாக இருக்கிறது. நீங்கள் உதிர்க்கின்ற ஒவ்வொரு சிரத்தையற்ற வார்த்தையும் உங்கள் வாக்கினை மாசுபடுத்திகிறது. நல்ல செய்தி என்னவென்றால், பொய்யால் வாக்கு உடனே மாசுபடுத்தப்பட்டாலும், பூரணத்துவம் செய்து அதை உடனே சுத்தமும் செய்துவிட முடியும்.
உங்கள் வாக்கு மாசுபட, ஒரே ஒரு பொய் போதும். ஆனாலும் அந்தப் பொய்யைப் பூரணத்துவம் செய்தால், வாக்கு உடனே குணமாகிடும். அது உடனே விடுதலை ஆகிவிடும் ! ஏனெனில், வார்த்தைகளே வாக்கு சக்தியை கொடுக்கின்றன, வார்த்தைகளே அந்த வாக்கிற்கு சக்தியை கொடுக்கின்றன.
உடலில் தவறான சுவாசிக்கும் முறைகளால் உருவான வியாதிகளை குணப்படுத்த சரியான சுவாசிப்பு முறையை பயன்படுத்தி சரிசெய்கிறோம். தவறான ஆஸனங்களால் உருவான உடல் வலிகளை, சரியான ஆஸனங்கள் செய்து சரிசெய்கிறோம். அதைபோலவே எதிர்மறையான கெடுதல் விளைவிக்கும் வார்த்தைகளால் உருவாகும் உடல் நோய்களை சரியான வார்த்தைகளை கொண்டு சரிசெய்துவிட முடியும்.
ஆனால், ஒருங்குவித்தல் என்னும் ஆன்மீக சத்தியத்தைப் புரிந்துகொண்டு பயின்று வந்தால், வாக்கு தூய்மைப்படுத்தப்படும். உங்களை நோக்கியும், மற்றவர்களை நோக்கியும் சரியான வார்த்தைகளையே பயன்படுத்துவதாலும், எதிர்மறையான வார்த்தைகளை உபயோகித்ததால் உருவான வியாதிகளை குணமாக்க முடியும். நன்கு புரிந்துகொள்ளுங்கள், உங்கள் வாக்கினை நீங்கள் எவ்வளவுதான் மாசு செய்திருந்தாலும், அவற்றை தூய்மை செய்துவிட முடியும். அவற்றை இப்போதே பூரணத்துவம் செய்துவிட முடியும் ! ஏனெனில், கங்கை நதியில் எவ்வளவுதான் நீங்கள் குப்பைகளை கொட்டினாலும், தொடர்ந்து கங்கை ஓடிகொண்டே இருப்பதால், அந்த நீரோட்டத்தின் போக்கிலேயே எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு தூய்மையாகிவிடும். கங்கை ஒரு செயலால் மட்டும் மாசுபடவில்லை. மேலும் மேலும் தொடர்ந்து மாசுபடுத்தவதால்தான் கங்கை மாசுபட்டதாவே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கங்கை ஓடிக்கொண்டே இருக்கிறது! கங்கையை தூய்மையாக்க நீங்கள் தொடர்ந்து மாசுபடுத்திக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். நாம் தொடர்ந்து மாசுபடுத்திக் கொண்டேயிருப்பதனால்தான் கங்கை மாசுப்பட்டிருக்கிறது.
அதுபோல, இதுவரை மாசுபடுத்தப்பட்ட வாக்கினை தூய்மை செய்யமுடியும். உங்களுக்கு நீங்களே தரும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும், மற்றவர்களுக்கு தரும் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வாழ்வதை ஒருங்குவித்தலில் வாழ்வது என்று சொல்வோம். தொடர்ந்து ஒருங்குவித்தலை கடைபிடித்தாலே போதும், வாக்கு சக்தி சித்திக்கும். இதிலிருந்துதான் ‘வாக்கு சித்தி’ என அழைக்கப்படும் விஞ்ஞானம் நிறுவப்பட்டுள்ளது. ‘சித்தி’ என்பது ஆன்மீகப் பயிற்சிகளால் அடையப்படும் ஒரு அசாதாரணமான சக்தி. உதாரணத்திற்கு, பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறையில் சுகாரத்திற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோம். ஒருநாளைக்கு இருவேளை வாய்த்துலக்குவது என்பது எப்படி ஒரு பழக்கமாக நாளடைவில் மாறியதோ அதேபோன்று சொல்லும் வார்த்தைகளிலும் சுத்தத்தை ஒரு பழக்கமாக எடுத்துவர நம்மால் இயலும். ஒருங்குவித்தலோடு நீங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்கின்ற வார்த்தைகளை நிறைவேற்றுங்கள். சொல்லும் எல்லா வார்த்தைகளையும் விழிப்போடு பாருங்கள். அதுதான் எதிர்மறை வார்த்தைகளை தூய்மைப்படுத்தும் நுட்பம்.
ஒருங்குவித்தலின் மூலமாக வார்த்தைகளின் சக்தி, வாக்கு சித்தி விழிப்பிக்கப்படுகிறது. தெய்வீக சத்தியத்தின் குரல்தான் வாக்குசித்தி. அது உங்கள் வார்த்தைகளை நிஜமாக்கும் திறனையும் உங்களுக்குக் கொடுத்து, மற்றவர்கள் பேசும் முன்னரே அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான திறனையும் கொடுத்துவிடும். உங்களின் வார்த்தைகளின் மீதும், மற்றவர்கள் உங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதின் மீதும் உங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கிடைக்கும். அதன்மூலம் உலகத்தின் மேல் ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான திறன் உங்களுக்குக் கிடைத்துவிடும். உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க முக்கியத்துவம் அளியுங்கள். அதைப்போலவே மற்றவர்களின் வார்த்தைகளுக்கும் மிக்க மதிப்பளியுங்கள் ! அகவிழிப்புணர்வு தியான முகாமில், பரமஹம்ஸரிடமிருந்து ‘வாக்குசித்தி தீக்ஷை’ பெற்றுக்கொள்ளுங்கள் !


ண்ண
கீச்ப் ஓடதடுச், கீழ்ண்டடிடுநுண்ட