மூன்றாம் கண்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- விழிப்புணர்வின்
மூன்றாவது கண் - உங்கள் உணர்வு இருக்கும் இடம்:
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல், சக்தி வீற்றிருக்கும் இடம் - மூன்றாவது கண்.
எல்லா ஆன்மீகப் பாரம்பரியங்களும் இந்த மூன்றாவது கண்ணை விழிப்பிப்பதற்காக தொடர்ந்து செயலாற்றி வருகின்றன. மூன்றாவது கண்-வேத பாரம்பரியத்திற்கே உரிய சிறப்பாகும். அதனால்தான் எல்லா இந்துக் கடவுள்களும் மூன்றாவது கண்களுடனே வர்ணிக்கப்படுவார்கள்.
அதற்கு அர்த்தம், உங்கள் மூன்றாம் கண் திறக்கப்பட்டால்தான் நீங்களும் கடவுளாக முடியும். வேறெதனாலும் அல்ல. அந்த மூன்றாம் கண்ணை இயங்க வைக்க, இந்துக்கள் எவ்வளவோ நுட்பங்களை வகுத்து தந்துள்ளார்கள். தொடர்ந்து குங்குமப்பொட்டு வைத்து வருவதுகூட மூன்றாம் கண்ணை விழிக்க வைப்பதற்கு உதவும் ஓர் நுட்பம் என்பதை கண்டறிந்துள்ளனர்.
மூன்றாம் கண்ணை விழிக்க வைப்பது மூளையின் சூட்சம சக்திகளையும் விழிக்க வைக்கும். அப்போது புலன்களின் தொடர்பின்றி தன் எண்ணங்களை செயல்படுத்துதல் ( டெலிபதி), திடப்பொருட்களை காட்சிப்படுத்துதல் (மெட்டீரியலைசேஷன்) எவ்வித உதவியுமின்றி பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல் (டெலிபோர்ட்டிங்) இன்னும் பல அதிக சக்திகளை உங்களுடைய அனுபவமாக்குகிறது. மூன்றாவது கண், பொருள் உலகத்திற்கும் ஆன்ம சக்திக்கும் பிரபஞ்ச வெளிக்கும் இடையில் ஒரு பாலமாக விளங்குகிறது. அது ஒரு 'இணையமையம்' போன்றது. பிரபஞ்சத்திற்கு வழிகாட்டும் ஒரு கதவாக இருக்கிறது. விழிப்படைந்த இந்த மூன்றாவது கண்ணின் வழியாக பிரபஞ்சத்தில் உங்களால் எதையும் பெறவும் முடியும், தரவும் முடியும். நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சக்திகள் விழிப்படையும்.
நீங்கள் இந்த உடலைவிட்டுச் செல்லும்போது, உங்கள் விழிப்புணர்வு இந்த மூன்றாம் கண்ணின் மீது இருந்தால், நீங்கள் ஞானம் அடைந்து விட முடியும் : அவ்வளவு சிறப்பு வாய்ந்தது மூன்றாம் கண்ணின் சக்தி. புனிதமான இந்த காசியில், அதன் கங்கை நதிக்கரையில், யார் உயிர் நீத்தாலும், அவர்கள் முக்தி பெறுவார்கள் என்பதும் உண்மையே. சம்ஸ்கிருதத்தில் வாரணாசி என்பதற்கு பொருள், வாரணம் - கண் புருவங்களுக்கு இடையில் , நாசி - மூக்கு சந்திக்கும் இடம் என்பதே ஆகும். நீங்கள் வாழும் ஓர் அவதாரத்தின் முன்னிலையில் இருக்கும்பொழுது, விழிப்பிக்கப்பட்ட ஒரு மூன்றாவது கண்ணின் எண்ணற்ற வெளிப்பாடுகளை காண்பீர்கள். உங்களுடைய மூன்றாவது கண் விழிப்படைவதற்கான நுட்பங்களும் இன்னர் அவேகனிங் தியான முகாமில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
