KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/மனஊனத்தை நிறைவுசெய்யுங்கள்Sign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

மனஊனத்தை நிறைவுசெய்யுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சுவாமிஜி மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு உபதேசம் செய்தல்

நீங்கள் புரிந்து கொள்ள
வேண்டியதெல்லாம்
‘சாத்தியமில்லை’என்று நினைக்கும்
எல்லாவற்றுடனும் நிறைவு செய்து,
‘அனைத்தும் சாத்தியம்’ என்ற
உணர்வினை உங்களுக்குள் உருவாக்க
வேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு
உணர்வினை உருவாக்கும்போது
எழுகின்ற எல்லா இயலாமைகளையும்
சந்தேகங்களையும் மீண்டும் மீண்டும்
பூரணத்துவம் செய்யுங்கள். வாழ்வில்
எதையும் பெறுவீர்கள்.

ஒரு நதிக்கரையில் கூட்டமாக அமர்ந்திருக்கும் மக்கள் மற்றும் சந்நியாசி

நான் துபாயில் இருக்கிறேன். வாரணாசியில் 2014 வருடம் மே மாதம் நடைபெறும் அகவிழிப்புணர்வு தியான முகாமில் கலந்துகொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன். துபாயில் இருப்பதால், தியான முகாமில் கலந்துகொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்துகொண்டிருந்தே தன். தியான முகாமில் கலந்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக என் வேலையை இழந்தேன். அதை அதிர்ச்சியாக பார்க்காமல், தியான முகாமில் கலந்துகொள்வதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகவும், ஒரு அழைப்பாகவும் பார்த்தேன். அப்பாடா, விடுமுறை பிரச்சினை இல்லை என்று நிம்மதியானேன். என் பயணத்திற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டபடி செய்தேன். 21 நாட்கள் தியான முகாமை வெற்றிகரமாக முடித்துவிட்டு நான் துபாய்க்கு திரும்பினேன். அடுத்த வேலைக்காக பார்த்து கொண்டிருந்தேன். வேலை இல்லை எனும் பாரம் இல்லாமல் சுலபமாக அதை பார்த்து பக்குவமாக அணுகுவதற்கு அகவிழிப்பு முகாமிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களும், பெற்றுக் கொண்ட தீட்சைகளும் மிகவும் உதவின. துபாயிலிருக்கும் சங்கத்தில் இணைந்து சேவை செய்துவந்தேன். சங்கத்துடன் சேர்ந்து செய்த என்னுடைய வாராந்திர சத்சங்க நடவடிக்கைகளும், யோகப் பயிற்சி களும் என் ஆன்மீகப்பயண வெற்றிகளுக்கு மிகவும் உதவின. அந்த நேரத்தில், துபாய் சத்சங்க மையத்தில் ஒரு கல்பதரு வகுப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருமுனை காணொளி வழியாக ஸ்வாமிஜியை தரிசித்து, ‘எனக்கு ஒரு வேலை அமைய வேண்டும்’ என வரமளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்காக ஆசீர்வதித்து, ‘அடுத்த 31 நாட்களுக்குள்ளாகவே விரும்பியது அமையும்’ என்றார். 31 நாட்களில், முதல் 10 நாட்களுக்குள்ளாகவே ஒரு நல்ல வேலை கிடைத்தது.

நான் அந்த வேலையை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அது மிகுந்த பண்பாடற்ற தொழில் குழு எனத் தெரிந்தது. இந்த உண்மை தெரிந்ததும் அந்த வேலையை உடனே விட்டுவிட்டேன். வேறு ஒரு இடத்தில் மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைத்தது. இந்த புதிய வேலையில், அதிகப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் அவற்றை என் அக விழிப்பு முகாமுக்கு முன்பு நிகழ்ந்திருந்தால் என்னால் இத்தகைய கூடுதல் பொறுப்புகளை எடுத்து செய்ய முடிந்திருக்காது. அதிக சம்பளம், நல்ல வேலையும் சிறப்பாக அமைந்தது. இதற்கு, அகவிழிப்பு முகாம் எனக்குள் ஏற்படுத்திய உள்ளுணர்வு மாற்றமே காரணம். அதற்காக நான் சுவாமிஜிக்கும், அவருடைய சங்க அமைப்புக்கும் நன்றி கூறுகிறேன். இது எனக்கு நிகழ உதவிய ஸ்வாமிஜிக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். -சோனிராஜ், துபாய்.

நான் உண்மையிலேயே கடவுளின் சாந்நித்யத்தை உணர்ந்தேன். வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஓர் உணர்வு அது. பிரபஞ்சமே என்னை தழுவியதாக உணர்ந்தேன். சக்தி தரிசனத்திற்குப் பிறகு, என்னுடைய பல துக்கங்கள் என் உள்ளுணர்வு தளத்திலிருந்தே களையப்பட்டன. என்னுடைய குண்டலினி விழிப்படைந்ததை அறிந்து கொண்டேன். எப்படிப்பட்ட ஒரு வியப்பான வாய்ப்பு, எப்படிப்பட்ட ஒரு விடுதலையளிக்கும் உணர்வுருமாற்றம்!. முழு அனுபவமும் வியப்பூட்டுவதாக இருந்தது. வார்த்தைகளால் விளக்கமுடியவில்லை. -கும்கும் ஸ்ரீவாஸ்தவன்-கலிபோர்னியா, அமெரிக்கா

ஜூலை 2013-ல், என்னுடைய மகப்பேறு மருத்துவர் என் கருப்பையை முழுவதுமாக நீக்கிவிட அறிவுறுத்தினார். அந்தக் கருப்பைக்குள் 3 சென்டிமீட்டர் அளவுள்ள ஒரு பைஃப்ராய்டுகட்டி வளர்ந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்யாமல்விட்டால் சில மருத்துவ சம்பந்தமான பிரச்னைகளை எதிர்நோக்கும் சூழ்நிலை வரும் எனத் தெரிந்தும் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மிகவும் தயங்கினேன். கட்டிகளை கரைப்பதற்காக சில சீன மருந்துகளை எடுத்துக் கொண்டேன். மருந்து அவ்வளவுாக பலனளிக்கவில்லை. மே 2014ல் அகவிழிப்பு தியான முகாமில் கலந்துகொண்டேன். ஒருநாள் எனக்கு கட்டிருந்த இடத்தில் வலி இருந்து கொண்டிருந்தது. அதனால் அன்றைய சக்தி தரிசனத்தின்போது, டாக்டரின் அறிவுரைப்படி என் கருப்பை முழுவதையுமே நீக்கிவிட வேண்டுமா என்று ஸ்வாமிஜியைக் கேட்டேன். அவர் செய்துவிடுங்கள் என்று கூறினார். சுவாமிஜியிடம் ஆசிபெற்று வந்தமர்ந்தேன். வலி நீங்கியிருந்தது. அகவிழிப்பு தியான முகாமிலிருந்து வீடு திரும்பியவுடன், நான் அடுத்த வாரம் என்னுடைய மருத்துவரை அணுகி, எனக்கு அறுவை சிகிச்சைக்காக ஒரு தேதி குறித்து வரலாம் என்று சென்றேன். என்னை கவனிக்கும் மருத்துவ உதவியாளர் தன்னுடைய மகப்பேற்றுக்காக விடுப்பில்

A young man speaking at a microphone
Nithyananda interacting with a participant

சென்றிருக்கவே, அவருடைய உதவியாளர் 'அல்ட்ரா சவுண்டு' ஒளியலை சோதனை செய்தார். அப்போது கணிணித்திரையில் பார்த்தபொழுது, நாட்களிருவருமே ஆச்சரியமடைந்தோம், ஏனெனில் கருப்பையில் எவ்வித வளர்ச்சியையும் காண முடியவில்லை ! அதன் பின் 2 வாரம் கழித்து வாருங்கள், மீண்டும் ஒரு முழுமையான சோதனை செய்துபார்த்து உறுதி செய்யலாம் என்று கூறினார். பின்பு குறித்த தேதியில் சென்று அந்த முழுமையான சோதனை செய்துகொண் டன். அந்த பைஃப்ராய்டுகட்டி இறுகி விட்டதால், முன்பு கொடியத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்ட வளர்ச்சியின் அடையாளமே அங்கு காணப்படவில்லை என்று என் மருத்துவர் சொன்னார். என்னுடைய முதன்மை மருத்துவர் இறுதியில் எனக்கு இனி எந்த அறுவை சிகிச்சையும் தேவைப்படாது என்பதை உறுதிப்படுத்தினார். என்னை குணப்படுத்தியதற்கு மிகவும் நன்றி ஸ்வாமிஜி !'' -லீ கிம் ஹார்

அகவிழிப்பு தியான முகாமில் மிக முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொருவருடைய மூலமனப்பாங்குகளையும் வெளிப்படுத்தி, அவற்றைப் புரிந்துகொள்ள உதவுவது. என் வாழ்வில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏன் மீண்டும், மீண்டும் நடைபெறுகிறது என்பதை நான் அறிந்துகொள்ள அது மிகவும் உதவியது. என்னுடைய சந்தர்ப்பங்கள், சூழல் புதியதாக இருந்தாலும், என்னை நிகழ்காலத்தில் என்னை ஆனந்தமாகவே இருக்கவிடாமல் என்னுடைய கடந்தகாலக் குறையுணர்வுகள் தடுத்துவருகின்றன என்பதை புரிந்துகொண்டேன். இந்த குறைவுணர்வை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகைப் பற்றிய உணர்வுகளையும் உருவாக்கி வாழ்ந்திருக்கிறேன் என்பது புரிந்தது. மேலும் அகவிழிப்பு தியான முகாமின் சக்திவாய்ந்த சூழல், என்னுடைய ஆழமான வலிகளிலிருந்து விடுவித்து, என்னுள் தளர்வான உணர்வுகளையும் ஆனந்தத்தையும் பதியவைக்க உதவியது. -முக்தா ஷர்மா கோபம்) என்னால் விட்டுவிட முடிகிறது. என்னுடன் மற்றும் பூரணத்துவம் செய்வதற்கும், என்னுடைய உறவுகளைக் கையாள்வதற்கும் தேவையான திறமை வாய்க்கப் பெற்றிருக்கிறேன். என் சுய-சந்தேகத்திலிருந்து வெளிவந்து, மிக்க சக்தியுள்ளவளாக உணரத் துவங்கியிருக்கிறேன். பூரணத்துவத்தில் இருப்பது பொறுப்பெடுக்கும் திறனையும், மற்றவர்களுடைய நிஜத்தை உருவாக்க அவர்களுக்கு உதவும் திறனையும் எனக்குத் தந்தது. என்னுடைய கால்பிடிப்புகள், சளி தொந்தரவு, தலைவலிகள், மாதவிலக்கு வலிகள் ஆகியவை மறைந்து விட்டன. இனிமேலும் மன அழுத்தத்துடன் என்னை சேர்த்து நினைக்க முடியாது. அகவிழிப்பு தியான முகாம், என்னுடைய மனப்பாங்குகளையெல்லாம் நானே கண்டுபிடிப்பதையும், அவற்றை விட்டுவிடுவதையும் மிகச் சுலபமாக்கிவிட்டது.

-பெனாஸிர் பாத்திமா

என்னுடைய குணத்தைப் புரிந்து கொண்டு என்னுடைய எதிர்மறை உணர்ச்சிகளை (கவலை, அச்சம், மனக்குமுறல்கள், வகுப்புகள் நடக்கும்போது ஆழ்ந்த அமைதியை அனுபவித்தேன். என்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தையும் கண்டுபிடித்தேன். முன்பு எனக்கு பால் சார்ந்த பொருளால் ஒவ்வாமை இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் பால் குடித்த பின்பு எவ்வித ஒவ்வாமையும் இருப்பதில்லை. நான் எப்போதும் நிறைய கவலையும் பயமும் கொண்டிருப்பேன். ஆனால் என்னுடைய மூலமனப்பாங்குகளையெல்லாம் பூரணத்துவம் செய்துவிட்ட பிறகு, மிகுந்த நிம்மதியை உணர்கிறேன்''.

-தியாகோ லஸ்வோ ரோசா

என்னுடைய மூலமனப்பாங்குகளை எவ்வாறு இனம் கண்டுபிடிப்பதென்பதையும், அவற்றை எவ்வாறு பூரணத்துவம் செய்வது என்பதையும் கற்றுக் கொண்டேன். கற்றுக்கொண்டதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்கிறேன். வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு மனத்தளவில் தயாராயுள்ளேன். இந்த அகவிழிப்புக்கு முன்பு மிகவும் சக்தியற்றவளாக உணர்ந்திருந்தேன். இப்போது நான் கவலையை எதிர்க்கவும் கூடாது,

A group of people sitting by a riverbank with mountains and a suspension bridge in the background

ஏற்கவும் கூடாது என்னும் கருத்தை புரிந்து கொண்டேன். நான் ‘என்னுடைய’ நிஜத்தை ‘உண்மையாகவே உள்ள’ நிஜத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதற்கு இப்போது கற்றுக் கொண்டுவிட்டேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று கேட்பதை விட, என்னால் என்ன செய்யக்கூடும் என்றுதான் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சன்யாசிகள் பங்கேற்பாளர்கள் மீது மிகுந்த அன்பு காட்டினார்கள்.

-ஜெஸிண்டா கிளார்க்

இந்த முகாமுக்குப் பிறகு நான் அனுபவித்த மிகப்பெரிய மாற்றம் - எல்லா விஷயங்களையும் சரியான விதத்தில் பார்க்கத் துவங்கியதே. கடந்த காலத்தில் என்னால் செய்ய முடியாத சில விஷயங்கள், தியான முகாமிற்கு பிறகு பார்க்கும்போது அவை அப்படி ஒன்றும் கடினமானவையாகத் தெரியவில்லை. என்னிடமிருந்த நிறைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் நான் எவ்வித முயற்சியும் செய்யாமலேயே என்னிடமிருந்து கரைந்து மறைந்து போயின. என்னைச் சுற்றியிருக்கும் சூழலும் மனிதர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள் ; ஆனால், நான் மாறியிருப்பதால் நான் அவர்களோடு பழகுவது மாறியிருக்கிறது.

-விக்கி

ஓய்வும், போதிய தூக்கமில்லாமையினாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தேன். என் சிகிச்சையாளர்கள் என்னிடம் தோல்வியைதான் கண்டார்கள். ஏனெனில் என் மனதைப் பாதுகாப்பதற்காக நானே மூடியிருந்த கதவை உடைக்க அவர்களால் முடியவில்லை. தூக்கத்திற்கு மாத்திரைகளையே நம்பியிருந்தேன்.

பிரச்னைக்கு நிரந்தர தீர்வு மாத்திரைகள் அல்ல என்பதால், அவற்றை நிறுத்திவிட முடிவு செய்தேன். என்னுடைய மனைவி என் நிலைமையைக் கண்டு கவலைப்பட்டாள். அவள் எனக்காக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க ஆர்வமாக இருந்தாள். அவள் தன்னுடைய சகோதரியிடமிருந்து இந்த அகவிழிப்பு முகாமைப் பற்றிக் கேள்விப்பட்டாள். அவள், ஆகஸ்டு 8ம் தேதியில் நடக்கவிருந்த அகவிழிப்பு முகாமைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பில் கலந்துகொள்ள என்னை சம்மதிக்க வைப்பதில் (அது அவளுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை) வெற்றியடைந்தாள். அதை

ஆரிஸ், தியோஜா என்னும் இருவர் நடத்தினர். அந்த வகுப்பின்போது, உண்மையிலேயே ஒரு நம்பிக்கையை உணர்ந்தேன். அதனால், வேறெந்த யோசனையுமின்றி, உடனே அகவிழிப்பு முகாமுக்காக என் பெயரை பதிவு செய்துவிட்டேன். இருவழி காணொளி தொலைக்காட்சி மூலமாக முதல்நிலையில் கலந்துகொண்டேன். இதன் மூலம், இந்தியா செல்லாமலேயே, இந்த முகாமில் பயிற்சியாளர்கள் கலந்துகொள்ள முடிந்தது. இந்த நான்கு நாட் களில், (முழுமையான முகாம் - 21 நாட்கள்) பயிற்சியாளர்களெல்லோரும் ஒரு மிக உயர்ந்த நிலைப்புரிதலைப் பெற்றார்கள். மூன்றாவது நாளே என்னுடைய வாழ்க்கையில் நான் சேர்த்து வைத்திருந்த நிறைய எதிர்மறை உணர்ச்சி களையெல்லாம் களைந்து, சுத்தம் செய்ய முடிந்தது. நான் அமைதியையும் தளர்வையும் நிம்மதியையும் உணரத்துவங்கினேன். அதன் பயனாக, முழு முகாமையும் முடித்து, முழுப்பயனையும் அடைவதற்கு முடிவு செய்தேன். என்னுடைய இந்த முடிவுக்கு, என் குடும்பத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார்கள்.

-ஃபெலிக்ஸ் சௌ, ஹாங்காங்.

தியான முகாமில் கலந்துகொண்டு டொரண்டோவுக்குத் திரும்பிச் செல்ல பெங்களூர் விமான நிலையம் சென்றேன். பயணத்தின்போது நம்முடன் 44 கிலோ பயணப் பொருட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்குக் கேட்டுப் பார்த்ததில் 30 கிலோ அளவுக்கே அனுமதி உண்டு என்று அறிந்தேன். அதனால் நான் ஒன்றும் தளர்ந்து விடவில்லை. என்னுடைய சாமான்கள் அதிகமாயிருந்தால் அதற்கான கட்டணம் செலுத்திவிட்டுப் போகலாம் என்று நினைத்துக் கொண்டேன். சாமான்களை எடை போட்டபோது, அது 40 கிலோவாக இருந்தது. அதற்கான சீட்டை எழுதி முடித்துவிட்டு, நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதை அலுவலர் கவனித்தார். அதில் ‘நித்யானந்த தியானபீடம்’ என்றிருந்ததைக் கண்டார். உடனே அவர் முகம் பிரகாசமடைந்தது. ‘ஓ, நித்யானந்த ஆஸ்ரமம்’ என்று சிறிது ச த்தமாகச் சொன்னார் ! அதன்பின், அவர் அதிக சுமைக்காக என்னை பணம் செலுத்தக் கேட்கவும் இல்லை. என்னிடம் அதிக சுமை இருந்ததைக் குறிப்பிடவுமில்லை ! நான் திகைத்து நின்றுவிட்டேன். அவர் என்னுடைய மற்ற பயண விவரங்களை முடித்த பிறகு, அவர் ‘நித்யானந்தாவுக்கு ஜே’ என்று சிறிது சத்தமாகவே சொன்னார். என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. என் பயணம் முழுவதும் எனக்குள், 'நித்யானந்தாவுக்கு ஜே' என்று பாடிக்கொண்டு வந்தேன். டொரண்டோவிற்கு திரும்பி வந்தபின்பு, பெரிய தடைகல் என்று நினைத்திருந்த விஷயங்களெல்லாம், இப்போது மாறாக நல்லவிதமாக நடந்தேறுவதைக் காண்கிறேன். ஸ்வாமிஜி சொன்ன சத்தியங்களை நினைவுகூர்ந்து, அவற்றை விழிப்புணர்வோடு உணர்ந்து வாழவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் பூரணத்துவத்தில் முழுமையாக இருக்கிறேன். வாவ்! நான் எதற்காக வந்தேனோ, அதைப் பெற்றுவிட்டேன். -மா நித்ய ஹேமானந்தா, டொரண்டோ

இந்த 2014 ஜனவரியில், ஹரித்வாரில் அகவிழிப்பு தியான முகாமில் பங்கேற்றேன். அது என்னுடைய கடந்த காலத்தோல்விகளினால் ஏற்பட்ட காயங்களிலிருந்து என்னுடைய முழு இருப்புணர்வையும் குணமாக்கியது. என்னை மன அழுத்தத்தில் விழ வைத்ததாக நான் நினைத்துக் கொண்டிருந்த பல நல்ல, கெட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் கடந்துவர முடிந்தது. இது அக விழிப்பு முகாமினால் நடக்கும் ஒரு அதிசயமே தவிர வேறென்ன ! என்னுள் நிகழ்ந்த பூரணத்துவம்தான் அந்த குணமளிப்பே தவிர வேறென்னவாக இருக்க முடியும் ! இது அக விழிப்பு தியான முகாமினாலே நிகழ்ந்திருக்கிறது.

ஸ்வாமிஜி, நீங்கள் இந்த வடிவத்திலுள்ள கடவுள்தானே தவிர வேறு யாருமில்லை. தாங்கள் எல்லா ஆன்மாக்களையும் குணமளிப்பதற்காக வந்திருக்கும் அவதாரம். தாங்கள் தெய்வீகக் குணமளிப்பவர். நீங்கள் எனக்கு தெய்வீகத்தை அள்ளி வழங்கும் தாய், குரு. தாங்கள்தான் எல்லாமே! -நந்தினி சண்முகசாமி

சுவாமிஜியின் கருணை மிகுந்த ஒளிவீசும் கண்களைப் பார்த்தபோது, எல்லையற்ற பரம்பொருளை, அதன் மௌனத்தை அனுபவித்தேன். காலம் நின்றுவிட்டது. எல்லா நினைவுகளும் என்னை விட்டு அகன்றன. ஒலி ஓய்ந்து நின்று விட்டது. அவர் சக்தி தரிசனத்தின் போது, என் தலைமீது கையை வைத்தபொழுது, ஞானசக்தியால் என் உள்ளுணர்வு முழுவதையும் நிறைத்தது. அகவிழிப்பு முகாமில் ஸ்வாமிஜி தரும் சக்தி தரிசனத்தில் கிடைக்கும் சக்தியை இந்த உலகத்தில் வேறெந்த சக்தியுடனும் ஒப்பிட முடியாது!

  • மா ஓவியானந்தா
Carved stone pillars of an ancient temple hall