KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/பால சன்யாச பரம்பரையும்Sign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

பால சன்யாச பரம்பரையும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பாரம்பரியமும்

பால சன்யாசி மற்றும் சாதுக்கள் கூட்டம்
சன்னியாசிகள் கூட்டம்

ஹரித்வாரில் பாலசன்யாச பாரம்பரியம்
உள்ளது. பாலக பருவத்தினருக்கு கிரம
பிராம்மச்சரியம் எனப்படும் பயிற்சி
கொடுப்படுவது போன்றதல்ல இது.
விரஜா ஹோமம் செய்து சன்யாசமே
கொடுக்கப்படுகிறது. ஹரித்வார் ஹிந்து
சமயத்தின் தலை நகரமாகும். சன்யாச
தீட்சை தரும் ஹிந்து நகரம் இது. எல்லா
அகாடாவிலும் பாலசன்யாசிகள் உள்ளனர்.
முக்கியமான பெரிய ஆசிரமங்களிலும்
பால சன்யாசிகள் உள்ளனர். ஆனால்
அவர்கள் கிரம பிரமச்சரியம், நைஷ்டிக
பிரமச்சரிய பயிற்சிக்கு பிறகு சன்யாசம்
தருவதில்லை; நேரடியாக சன்யாசமே
கொடுத்து விடுகிறார்கள்! நான் பால சன்யாசி
களின் மனநிலை பற்றி ஆய்வு நடத்தினேன்.
ஐந்து, ஆறு வயதில் சன்யாசம் மேற்கொண்ட
சில குழந்தைகளைப்பற்றி ஆய்வு
மேற்கொண்டு வருகிறேன். அவர்களுக்கு
தற்பொழுது டீனேஜ் என்று கருதப்படும்
வயதுதான் ஆகும். அவர்களில் எவரும்
தான் சன்யாசி ஆனதைப்பற்றிய வருத்தம்
ஏதும் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை.
அவர்கள் சந்தோஷமான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களின்
உள் மனதை ஆராய்ந்தபோது, அவர்கள்
அனைவருமே வெற்றிகரமான சன்யாசிகளாக
இருப்பதை உணர முடிந்தது. சிறு வயதிலேயே
சன்யாசம் மேற்கொள்ளும்போது, சன்யாச
உணர்வுநிலையில் வாழும்போது,
வெற்றிகரமான சந்நியாசி ஆகி விடுகிறார்கள்!

- பரமஹம்ஸ நித்யானந்தர்

கங்கை மற்றும் மலை காட்சி

ண்ண்

இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை, தொன்று தொட்டு ஓடிக்கொண்டும், மிகப்பழமையான பூகோள, சரித்திர மற்றும் சமய முக்கியத்துவத்தை தன்னகத்தே கொண்டும் இருக்கிறது. இந்த பிரதேசத்திலுள்ள மக்களுக்கு வெறும் நதியாக மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கை ஆதாரமாகவும் உள்ளது. கங்கையைச்சுற்றி வாழ்பவர்கள் அவளை கங்கா மையா (கங்கை அம்மா) என பாசத்துடன் அழைத்து, போற்றி, புகழ்ந்து வணங்கி வருகிறார்கள். உத்தராகண்ட்த்தில் கங்காதேவியை உபாசிக்க கோயில்கள் பலவுள்ளன. கங்கையின் புனிதத்தன்மையுள்ள நீரை (கங்கா ஜலம்) தொட்டவுடனே ஆன்மீகத்தேடல் உள்ளவர்கள் பூரணத்தவமடைந்து, தங்களது பாவங்களைக்கழுவி முழுமைத்தன்மையடைந்து விடுகிறார்கள்.

கங்கையின் அவதாரனம்: பூகோள ரீதியாகபார்த்தால், கங்கோத்ரி பனிமலையிலிருந்து கங்கை உருவாகிறது. கங்கோத்ரியில் கோமுகம் (பசுவின் முகம்) எனும் இடத்திலிருந்து கங்கை தன் ஓட்டத்தை துவங்குகிறாள். கங்கை பர்வத ராஜா-ஹிமவத்தின் மகள்.

ராஜா சாகராவின் மகன்கள் கபில மகரிஷியின் தவத்திற்கு இடையூறு விளைவித்ததால் அவர்கள் சாம்பலாகிப்போனார்கள். தன் மகன்களின் பாவத்தைபோக்க கங்கையின் நீரால் அவர்களது சாம்பலை கழுவ ராஜா சாகரா விரும்பினார். ராஜா சாகராவின் ஏழாவது வழித்தோன்றலான ராஜா பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டுவர தீவிரமாக தவம் செய்தான். அதன் பலனாக கங்கை அன்னை பூமிக்கு வர முடிவெடுத்தாள். ஆனால், துடிப்புமிக்க கங்கையின் வேகம் உலகத்தையே அழித்துவிடும் அபாயம் இருந்தது. எனவே, எல்லாம் வல்ல இறைவனான ஈசன் கீழே இறங்கி ஓடிய கங்கையை தன் ஜடாமூடியில் தாங்கிப்பிடித்தார். பூமி தாங்கும் ே வகத்தில் செல்லும் வகையில் மெதுவாக அமைதியான நதியாக ஆக்கினார்.