வாரணாசி...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனந்த

வாரணாசி... உலகிலேயே மிகத் தொன்மைவாய்ந்த ஒரு நகரம் மட்டுமல்ல, தொடர்ந்து மக்கள் வாழ்ந்துவரும் மிகப் பவித்ரமான நகரமும்கூட.
கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மையமான வாரணாசி நகரத்தின் புகழைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், ‘அது காலம் கடந்தது’ என்றுதான் சொல்ல வேண்டும்.
வடஇந்தியாவில், கங்கை நதிக்கரையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக உயிர்ப்போடு திகழும் வாரணாசியின் முதற்பெயர் - காசி. இதன் பொருள்: பிரபஞ்ச ஒளிப்பிழம்பின் செறிவு என்பதாகும்.
அதர்வண வேதம், வாரணாசியைப்பற்றி குறிப்பிடும்பொழுது... ‘அண்டவெளியை பிரகாசிக்க வைக்கும் மகிமையும், எல்லோருக்கும் ஞானத்தைத் தந்து, மோட்சத்திற்கு வழிகாட்டும் வல்லமையும் வாய்ந்தது’ என்று வர்ணித்துள்ளது.
காசி- மகாதேவன், ஈசனின் வீடு. நீர், ஆகாயம், ஒளி - இருட்டு, வெப்பம்-குளிர் தோன்றுவதற்கு முன்பாக, இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாக, இதே இடத்தில்தான், இந்த வாரணாசியில்தான்...அரூபமாக இருக்கும் பிரபஞ்ச சக்தி ஈசனாக அவதரித்தது. இங்கு...வாரணாசியில்தான், ஈசனின் ஜீவசக்தியில் இருந்து அன்னை பார்வதி உருவெடுத்தார். அன்னையின் தெய்வீக அன்பைக் கொண்டாடும் வகையில் காசியை ஆனந்தவனம் எனும் பெயரிட்டு - ஆனந்த நகரமாக உருவாக்கினார். இங்கிருந்து அண்ட சராசரங்களையும் படைத்தார்.
புராணங்கள் காசியை அவிமுக்த க்ஷேத்ரம் என்று கொண்டாடுகிறது. இந்நகரத்தை உருவாக்கும் பொழுது, ஈசன்... ‘என் திரிசூலத்தின் நுனியில் தாங்கி இந்நகரத்தை காப்பேன். உலகம் அழியும் ஊழிக்காலத்திலும் என் திரிசூலத்தினால் உயர்த்தி தூக்கிப்பிடித்து காப்பேன்’ என்று வரமளித்துள்ளார். காசியில்தான் முதன்முதலில் ஜோதிர் லிங்கம் உருவானது. (பிரபஞ்ச சக்தி, பூமியின் நன்மைக்காக, ஒளிப்பிழம்பாக இறங்கி வந்து, லிங்க வடிவம் கொள்வதையே ஜோதிர்லிங்கம் என்கிறோம். மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் உள்ளன.)

