குருக்ஷேத்திரத்தில் வெற்றிப்பெற...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
குருவோடு க்ஷேத்திரம்

கங்கை நதி, ரிஷிகேஷ்
வாரணாசி போன்ற சக்தி மையத்திலிருந்து நீங்கள் உங்கள் உணர்வை மேம்படுத்தும்பொழுது, மிகச்சிறந்த, நிலையான உணர்வுருமாற்றமும் சி த்திக்கும். உண்மையில், நீங்களே முயற்சித்து உங்கள் வாழ்க்கையை மாற்றும் அனுபவங்களைப் உணர்வது என்பது ஒரு பாகம்தான்.
அகவிழிப்பு தியான முகாமின் நிகழ்ச்சி நிரல்... வாழும் குருவால் வடிவமைக்கப்பட்டது. குரு - வாழும் உள்ளுலக விஞ்ஞானி.
அவர் மனித குலத்தை விழிப்பு hisபுறச் செய்ய வந்தவர். இப்பூமியின் விழிப்புணர்வு நிலையை உயர்த்துவதற்காக வாழ்பவர். குரு, தம்முடைய ஞான அனுபவங்களை, மற்றவர்களுக்கு தருவதற்காக புதிதுபுதிதாக சூத்திரங்களை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.
ஆனால், அவதார புருஷர்களுக்கு உங்கள் விழிப்புணர்வை உயர்த்துவதற்கு எந்தவிதமான நுட்பங்களும் தேவையில்லை. ஆம்! உங்களை அரிய அனுபவத்திற்குள் எளிதாக மூழ்க செய்வதற்கு எந்தவிதமான சூத்திரங்களும் அவர்களுக்கு தேவையில்லை ! தங்களுக்குள் நிலைபெற்ற ஞான அனுபவத்தை தம் சாந்நியத்தினாலே உங்களுக்குள் நிகழச் செய்வதற்கு உறுதி செய்வார். அதற்கு நீங்கள் தயாராக இருந்து, ‘ஆம்’ என்று சொல்லி அவருடைய க்ஷேத்திரத்தில் காலடி எடுத்து வைத்தாலே போதும், அதற்கான செயல்முறை தொடங்கிவிடும். நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வதும், அதை உள்வாங்குவதற்கான மனநிலையிலும் இருந்தால் போதும்.
நன்கு புரிந்து கொள்ளுங்கள், ‘ஆம்’ என்று தியான முகாமில் நீங்கள் கலந்துகொள்ளும் தருணத்திலிருந்து - தெரிந்தோ, தெரியாமலோ உங்களுக்குள்ளே உணர்வுருமாற்றம் துவங்கி வைக்கப்பட்டுவிடும். நீங்கள் உணர்வுரு மாற்றம் அடைவீர்கள் ! நீங்கள் ஒரு விழிப்படைந்த ஆன்மாவாக மலர்வீர்கள் !
