KAILASA Library/மனதைத் திற/ஆகாமியSign in
மனதைத் திற

ஆகாமிய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

* நான் ஏன் பிறந்தேன்? ஆசைகளை அடைய.

* நான் ஏன் இரண்டுங்கெட்டானாய் வாழ்கிறேன்? சில நேரம் வாழ விரும்புகிறேன். சில நேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன்? இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.

* எது? ஆசைகள்.

* ஆசைகளா? ஆம்.

ஆசைகள் நிறைவேறும் போது வாழ்க்கையில் விருப்பம் கொள்வீர்கள்.

அவை நிறைவேறாத போது வெறுப்புக் கொள்வீர்கள்.

ஆசைகள் நிறைவேறும்போது வாழ்க்கையில் விருப்பம் கொள்வீர்கள். அவை நிறைவேறாதபோது வெறுப்புக் கொள்வீர்கள். வாழ்வின் மூச்சு ஆசைகள்.

* பல நேரம் ஆசைகள் நிறைவேறிய பின்கூட திருப்தி வருவதில்லை. மாறாக, ஆசைகளின் வீரியம்தான் அதிகமாகிறது. அதன் மீதான வெறிதான் கிளம்புகிறது. இது ஏன்? அப்படியென்றால்... அவை ஆகாமிய ஆசைகள்.

  • ஆகாமிய ஆசைகளென்றால்? இரண்டு பெரிய ஆசைகளுண்டு.
  1. ஆகாமிய ஆசைகள்.
  1. பிராரப்த ஆசைகள்.
  • பிராரப்த ஆசைகளென்றால்?

பிராரப்த ஆசைகள் என்றால், இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்து நீங்கள் எடுத்து வந்த ஆசைகள்.

ஆகாமிய ஆசைகள் என்றால், இப்பிறவிக்கான ஆசைகளை அனுபவிக்கும் போது, இந்தப் பிறவியில் புதிது புதிதாய் நமக்குள் நுழைந்து கொள்ளும் ஆசைகள்.

  • இரண்டில் எது நல்லது? எது கெட்டது?

பிராரப்த ஆசைகள் நல்லது. ஆகாமிய ஆசைகள் கெட்டது.

  • ஆகாமிய ஆசைகள் கெட்டவையா?

ஆகாமிய ஆசைகள் மனம் சம்பந்தப்பட்டவை. மனதில் சொருகப்பட்டவை. பிராரப்த ஆசைகள் உயிர் சம்பந்தப்பட்டவை. உயிரிலிருந்து வருபவை.

மனம்தான் மனிதனின் நோய்.

portrait

மனம்தான் மனிதனின் நோய்.

எனவேதான் ஆகாமிய ஆசைகள் திருப்தியைத் தருவதில்லை.

இப்படி எந்தெந்த ஆசைகள் உங்களுக்குள் வெறியைக் கிளப்புகின்றனவோ, அதிருப்தியை தருகின்றனவோ, அவை ஆகாமிய ஆசைகள். புது ஆசைகள், புதிர் ஆசைகள்.

✦ பிராரப்த ஆசைகளை மட்டும் நல்ல ஆசைகள் என்று சொல்வதேன்?

உடலெடுக்கும் முன்பு, உயிராய்த் திரிந்தபோது, உங்களோடு இருந்த ஆசைகளிலிருந்து வந்தவையே பிராரப்த ஆசைகள்.

அந்தப் பிராரப்த ஆசைகள் நிறைவேறினால், உயிர் குளிரும். மனதின் சூடு தணியும்.

பிராரப்த ஆசைகள் தீர்ந்து போனால், முழுச் சுதந்திரமடைந்து விடுவீர்கள்.

பிறவிக் கடலிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

✦ பிராரப்த ஆசைகளை அனுபவித்துத் தீர்ந்து விட் டால், முக்தியடைந்து விடுவேனா?

பிராரப்த ஆசைகளை அனுபவிக்கவே விடாத அளவுக்கு, ஆகாமிய ஆசைகள் மனதில் அதிகமாகி விடுகின்றன.

அவற்றின் கொட்டத்தை நீங்கள் அகற்றாத வரை, பிராரப்த ஆசைகளைத் தொடக்கூட முடியாது.

அஞ்சலி முத்திரையில் இருக்கும் துறவி

எந்தத் தனி மனிதரும் தனி அல்ல. இறைசக்தியின் அலைகளே.

  • ஆகாமிய ஆசைகளை அகற்றுவது எப்படி?

அந்த ஆசைகளை அகற்றும் முறைதான் ‘நித்ய தியானம்.’

அகற்றும் கருவி, ‘ஞான கருத்துகள்.’

  • மனிதப் பிறவி பற்றிய ஆழமான ரகசியம் ஒன்றைச் சொல்லுங்கள்...

உபநிடத ரகசியம் ஒன்று...

‘நீங்கள் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை’

  • அப்படியென்றால் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம்...

கடலில் எழும் அலைகள். அடுத்தடுத்து பல தனித்தனி அலைகள் எழுந்தாலும் எந்த அலையும் தனி அலை அல்ல. அதேபோல் எந்தத் தனி மனிதரும் தனி அல்ல. இறைசக்தியின் அலைகளே. அலை எழும்பும். பிறக்காது. பிறக்காது என்பதால் இறப்பும் இல்லை.

  • நரகம் பற்றிய ஒரு உண்மையைச் சொல்லுங்கள்? அது ஒரு பொய்.
  • உண்மையான நண்பன் யார்? உங்களின் உடல் .
  • குடும்பம்? பழுது பார்க்கப்பட வேண்டிய உணர்வு இயந்திரம்.
  • குடும்பம் இயந்திரமா? சில மனிதர்களை, சிலகாலம் ஒன்றாய், உணர்வுப்பூர்வமாய் அழைத்துச் செல்லும் இயந்திரம்தானே அது.
  • ஞானம்? குடும்பம், உடல் எனும் தடைகளைத் தாண்டி... நரகம், சொர்க்கம் எனும்

மாயைகளைத் தாண்டி... ஆசைகளை அனுபவித்து, பிறவிக்கடலைத் தாண்டி... அலைகளில்லா ஆனந்தக் கடலாவது ஞானம்.

meditating person icon

மரணம் என்ற முற்றுப்புள்ளி வைப்பதாகவே ஒவ்வொரு முறை இறக்கும் போதும் நம்புகிறீர்கள்.

ஆனால் அங்கே உங்களோடு வரும் ஆசைகள்...

"தோழா! கிளம்பு வேலை நிறைய இருக்கிறது," என்று உங்களை மீண்டும் அழைத்து வந்துவிடுகிறது.

மரணம் முற்றுப்புள்ளியல்ல, அதுவொரு தொடக்கப்புள்ளி.

"வா! அடுத்த வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது," என உங்களை இளைப்பாற விடாமலே இழுத்து வந்து விடுகிறது.

முற்றுப்புள்ளியைத் தொடக்கப் புள்ளியாக விடாமல் காப்பது, உங்களிடம்தான் உள்ளது.

இப்போதே உட்கார்ந்து, உங்களின் ஆகாமிய, பிராரப்த ஆசைகளைப் பட்டியலிடுங்கள்.

ஆகாமியத்தை அகற்றிடும் பணியை ஆரம்பியுங்கள்.

தியானம் தொடங்கிவிட்டது.