KAILASA Library/மனதைத் திற/ஆசையை வைத்தே ஆசையைSign in
மனதைத் திற

ஆசையை வைத்தே ஆசையை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

◈ "கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?"

"என்னங்க இது!" கேள்வியே மடத்தனமாயிருக்கிறது. முட்டையிலிருந்து கோழி எப்படி வரமுடியும்?

முட்டையிலிருந்து குஞ்சுதான் வரமுடியும். கோழி எப்படி வரும்?

இதுபோன்ற கேள்விகளைக் கண்டுகொள்ளாதிருப்பது எல்லோர்க்கும் நல்லது.

◈ "இடதுகையில் பொருட்களை வாங்குவது தவறு என்கிறார்களே. இது பற்றிய உங்களின் கருத்து என்ன?"

"தவறு என்பதே தவறு!"

◈ "இடது கையில் வாங்குவது மரியாதைக் குறைவில்லையா?"

வலதுகையில் வாங்கும்போது மரியாதை
அதிகரிக்கிறதா என்ன!? இதெல்லாம்
மூடப்பழக்க வழக்கம்கூட அல்ல. மடப்பழக்க
வழக்கம்.

தவறு என்பதே தவறு! இடதுகையை வலதுகை அளவிற்கு இயக்காதிருப்பது மருத்துவ ரீதியாகவே தவறானது. காரணம், இடதுகை இயக்கம் குறையக் குறைய, வலதுமூளையின் இயக்கம் குறைகிறது.

◈ மாடு தரும் பால் சைவம் எனும்போது, கோழி தரும் முட்டை மட்டும் எப்படி அசைவமாகும்?

முட்டை மீது கோழியை சில நாட்கள் உட்கார வைத்தால், அது குஞ்சு பொறிக்கும்.

பால்மீது மாட்டை உட்கார வைத்தால், கன்னுக்குட்டி பிறக்குமா?

விதண்டாவாதமாகக் கேள்வி கேட்டதால்தான், இப்படிப் பதில் சொல்ல வேண்டிய அவசியமிருக்கிறது.

நிஜத்திலிருந்து சொன்னால், முட்டைக்குள் உயிர்த்தன்மை உண்டு. பாலுக்குள் அது இல்லை.

பாலைச் சாப்பிடுவதால், ஓர் உயிர்க்கொலை செய்யப்படுவதில்லை. ஆனால், முட்டையைச் சாப்பிடுவது அப்படியாகாது. எனவே, அது அசைவம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

◈ தெய்வ விக்கிரங்களுக்கு ஏகப்பட்ட நகைகளை அணிவிப்பது ஏன்? தெய்வமும் சாதாரண மனிதனைப்போல் ஆசைப்படுகிறாரா என்ன?

கடவுள் ஆசைப்படுவதால் அல்ல, மனிதர்கள் ஆசைப்படுவதால் நகைகளைத் தெய்வங்களுக்கு அணிவிக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள் ஞானிகள். நகைகள் மனிதரின் மனத்தை ஈர்க்கும்.

portrait

கடவுள் ஆசைப்படுவதால் அல்ல,
மனிதர்கள் ஆசைப்படுவதால் நகைகளைத்
தெய்வங்களுக்கு அணிவிக்கும் பழக்கத்தை
உருவாக்கினார்கள் ஞானிகள்.

அவை கடவுளின் மேல் இருந்தால், அவர் மனம் கடவுளை நோக்கி ஈர்க்கப்படும். மனிதர்களின் ஆசையைக் கொண்டே, அவரின் ஆசைகளைக் கடக்க வைக்கும் நுட்பம் அது. கடவுளிடம் மனத்தைக் கட்டிப்போடும் ஒரு நல்ல வழிமுறைதான் நகைகளும், அலங்காரமும்.

◈ வைரத்திற்கு மட்டும் அவ்வளவு பெரிய மதிப்பு வந்தது ஏன்?

சில முட்டாள்கள் அந்தக் கற்கள்மீது பற்றுகொண்டு, அதற்காகப் போட்டி போடுவதால், அதன் மதிப்பு உயர்ந்துவிட்டது. அவ்வளவுதான்.

◈ கணவர் இறந்த பிறகும், குங்குமமும், பூவும் வைத்துக் கொள்ளலாமா?

பூவும், பொட்டும் கணவரா கொடுத்தார்?! அவையெல்லாம் அம்மா கொடுத்தது.

அம்மா ஆசையாய் கொடுத்ததை எந்த ஒரு காரணத்திற்காகவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

◈ இந்தியக் கலாச்சாரம் பற்றி உங்களின் கருத்து என்ன?

கலாச்சாரங்களின் சாரம் இந்தியக் கலாச்சாரம்.

◈ மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், கிழக்கத்திய கலாச்சாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

கிழக்கில் வாழ்விற்காக கலாச்சாரம் உருவாக்கப்பட்டது.

மேற்கில் கலாச்சாரத்திற்காக வாழ்க்கை உருவாக்கப்பட்டது.

◈ இங்கு ஒரே குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் சண்டை கள் வருகின்றன. அப்படிப்பட்ட உறவுகள் இருந்துதான் என்ன பிரயோஜனம்?

இந்தக் கலாச்சாரத்தில்
சண்டையிடவாவது உறவினர்கள்
இருக்கிறார்கள்.

அங்கு அதுவும் இல்லாமல் சாகிறார்கள்.

◈ சிறு சண்டைகள் சகஜமானது என்கிறீர்களா?

பூவும், பொட்டும்
கணவரா கொடுத்தார்?!
அவையெல்லாம் அம்மா
கொடுத்தது.
அம்மா ஆசையாய்
கொடுத்ததை எந்த ஒரு
காரணத்திற்காகவும் எடுக்க

இல்லை, அவசியமானது.

◈ சண்டைகள் அவசியமானவையா?

எல்லோரும் பிறக்கும்போதே ஞானியாகப் பிறக்கிறார்களா என்ன... சாதாரண மனிதர்கள் அவ்வப்போது மனமுடைவதும், மனம் தளர்வதும் இயல்புதான்.

ஒருவர் மனம் தளரும்போது, இன்னொருவர் தாங்கிப் பிடிப்பதும், இன்னொருவர் மனமுடைந்து பொங்கும்போது, அந்தச் சிறுசிறு கோபங்கள், தடுமாற்றங்கள் வடியும் வடிகாலாக இவர் இருப்பதும், உளவியல் ரீதியாக மருத்துவ குணம் வாய்ந்தவை.

மனிதனின் வளர்ச்சியில் அவன் குணமுதிர்ச்சி பெறும்வரை குடும்பம், உறவுகள் என்ற உளவியல் அதிர்வு உள்வாங்கிகள் (குடணிஞிடு ச்ஞுண்ணிணூஞுஞுணூ) மிக மிக அவசியமானவை.

◈ இந்தியாவின் சிறப்பம்சம் என்ன?

தியானம்.

"எல்லோரையும் நேசியுங்கள் என்கிறீர்களே, எதிராளியை நேசிப்பது எப்படி?" சொல்லுங்கள்... -இந்திரன், சென்னை.

எதிராளியை நேசிக்கத்தான் அன்பு வேண்டும்.

நண்பனை நேசிக்க அன்பு தேவையில்லை.

தடவிக் கொடுத்தால் நாய்கூட அன்பாய் வாலாட்டும்.

ஏற்கெனவே, நம்மோடு சுமுகமாய் இருப்பவரை நேசிப்பது மட்டும் நேசமல்ல.

எதிராளியைக்கூட நேசிப்பதுதான் நேசம்.