ஆசைகளை நிஜமாக்கும் தியான ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
90 % கனவுகள் நிஜமாவதில்லை. ஏனென்றால், அவை ‘கனவுகள். ’
தாவோ மாணவர் ஒருவர் தம் குருவிடம், "ஏன், கனவுகள் பல நிஜமாவதில்லை?" எனக் கேட்கிறார்.
அப்போது குரு சொன்னார், "ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு ஆசையைப் பூர்த்திச் செய்ய உருவெடுத்த மனமோகினிகள்."
மாணவர், "கனவுகள் மோகினிகளா...?"
குரு, "உங்களைப் பொறுத்தளவிற்கு ஆசைகாட்டி மோசம் செய்பவைதானே மோகினிகள்."
மாணவர், "ஆமாம், ஆமாம் குருவே. மோகினிகளிடமிருந்து தப்பிக்கவும் வேண்டும். அதே நேரத்தில் எங்களின் ஆசைகளையும் அனுபவிக்க வேண்டும். இதற்கு வழி சொல்லுங்கள்."
குரு, "நல்லது. உன் வேண்டுகோளை
நிறைவேற்ற சில வருடங்களாவது நீ என்னோடு
தங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் அவை
நிறைவேறும்," எனச் சொல்லி முடித்தார்.
ஆசைகள்
அனுபவிக்கப்பட,
ஆசைகள்
சக்தியூட்டப்பட
வேண்டும்.
தந்திர சாஸ்திரங்களில், "ஆசைகள் அனுபவிக்கப்பட, ஆசைகள் சக்தியூட்டப்பட வேண்டும்," எனக் குறிப்படப்பட்டிருக்கிறது. திரையரங்கில் மூன்று மணிநேரங்களுக்கு நம்மை ஆட்டிப் படைக்கும் திரைப்படமானது, திரையில் தெரிவதற்கு முன்பு, ஒரு பாம்பைப்போல் ஃபிலிம்ரோல் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தச் சின்னப் பெட்டிக்குள் இருக்கும்வரை, சும்மாயிருக்கும் ஃபிலிம்ரோல் பதிவுகள், ஒரு ப்ரொஜॅக்ட்டரின் முன்னால் ஓட விடப்பட்டதும், திரையில் படமாகத் தெரிகிறது.
அதில், மனிதர்கள் ஓடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், சண்டை, கூத்து, கும்மாளம், அழகு, ஆச்சரியம், பயம் என்ற எல்லாமே திரையில் நிஜமாகிறது.
படச்சுருளுக்கு ப்ரொஜॅக்ட்டரின் ஒளி கிடைக்காவிட்டால், திரையில் படமாகத் தெரியாது. ஃபிலிம்ரோலில் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், அதனால் எந்தப் பலனும் இல்லை.
அதேபோல்தான் நம்முடைய பல ஆசைகள், ஃபிலிம்ரோல்போல் நம் மனப்பெட்டிக்குள் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன. படப்பெட்டிக்குள் இருக்கும் படச்சுருளை நிஜமாக்கும் ப்ரொஜॅக்ட்டரின் ஒளிக்கு இணையானது நம் ஆன்ம ஒளி.
சும்மாயிருக்கும் படச்சுருளைப்போல, சும்மாயிருக்கும் நம் மனதின் ஆசைச்சுருள்களின் மேல் ஆன்ம ஒளிபட்டால் ஆசைகள் சக்தியூட்டப்படும். அவை உயிர் பெறும்.
எப்படிப் படச்சுருளின் ஒவ்வொரு படமும் திரையில் ஜனரஞ்சகமான

சும்மாயிருக்கும் படச்சுருளைப்
போல சும்மாயிருக்கும் நம் மனதின்
ஆசைச்சுருள்களின் மேல் ஆன்ம
ஒளிபட்டால் ஆசைகள் சக்தியூட்டப்படும்.
அவை உயிர் பெறும்.
படமாகிறதோ, அதேபோல் ஆசைச்சுருளின் ஒவ்வொரு ஆசையும் நம் வாழ்க்கைத் திரையில் ஜனரஞ்சகமான படமாக மாறிவிடும்.
கால்கள் சூம்பி போயிருந்த ஜெல்லி ஓவன்ஸ்-ஐ மிகப்பெரிய ஓட்டப்பந்தயக்காரராக்கியதும், 14 முறை விதவிதமான தோல்விகளைச் சந்தித்த ஆப்ரகாம் லிங்கனை அதிபராக்கியதும், இந்த ஆசைகளே.
"அப்படியென்றால்... மனிதர்களின் வாழ்வும் - சாவும், வெற்றியும்
- தோல்வியும், உயர்வும் - தாழ்வும், முழுக்க முழுக்க ஆசையால்தான் நிர்ணயமாகிறதா?" என ஆனந்த யோகம் வகுப்புப் பயிலும் மாணவர் கேட்டார்.
"இதிலென்ன சந்தேகம். ப்ரொஜக்டரின் முன்பு ஜோக் படச்சுருளை வை த்தால் ஜோக் படம்தான் நிஜமாகும்.
அதிரடிச் சண்டைப் படத்தை வைத்தால், படம் முழுவதும் அதிரடி சண்டைகளாகத்தான் இருக்கும்.
எந்த ஆசைகளை நீங்கள் ஆழமாய் நினைக்கிறீர்களோ,அது ஆன்ம ஒளியைச் சென்று தொடுகிறது.
ஆன்ம ஒளியால் சக்தியூட்டப்பட்ட ஆசைகள் ஒருவருக்குச் சாதனையையும், இன்னொருவருக்கு வேதனையையும் தருகின்றன," என்று பதிலளித்தோம்.
மாணவர், "இன்னும் கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்களேன்," எனக் கேட்டுக் கொண்டார்.
"இந்த உதாரணத்தை வைத்துக் கொள்ளப்பா. எளிதாய்ப் புரிந்துவிடும்.
ஆசைகள் தீப்பந்தத்திற்குச் சமம்.
ஆன்ம சக்தி உன் உயிரின் ஆழத்தில் ததும்பிக் கொண்டிருக்கும் நெய்க்குச் சமம்.
தீப்பந்தத்தை உள்ளிருக்கும் நெய்யில் முக்கி எடுத்துப்பற்ற வைத்தால், திகுதிகுவெனப்
> எந்த ஆசைகளை
> நீங்கள் ஆழமாய்
> நினைக்கிறீர்களோ
> அது ஆன்ம
> ஒளியைச் சென்று
பற்றிக் கொள்ளும்,” எனச் சொன்னதும் புரிந்துகொண்டார்.
ஆம், உங்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுமானால் அவை மேம்போக்கான ஆசைகளாய் இராமல், ஆழமான ஆசைகளாக இருந்தால் போதுமானது.
ஆழமான ஆசைகள் ஆன்ம ஒளியைத் தானாய் உறிஞ்சிக் கொண்டு தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் சக்தி பெற்றவை.
பெங்களூரு ஆஸ்ரமத்தின் நிர்வாக அதிகாரி (அஞீட்டிணடிண்ணூச்சண்டிதிநு ஙிஞூஞாடிஞிஞூணா) “ஆசைகளை ஆழப்படுத்துவதற்குக்கூட நம் சாஸ்திரங்களில் நுட்பங்கள் இருக்கிறதா?” என்று ஒருமுறை கேட்டார். அவரோடு பகிர்ந்துகொண்ட பதிலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
ஆம், இருக்கிறதே.
இந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள்.
100 ஆசைகளோடு, இது 101 ஆவது என ஆசைப்படாமல், முதலில் முக்கியமான ஆசையைத் தேர்வு செய்யுங்கள். அது சாதகத்தைத் தருவதா? பாதகத்தைத் தருவதா? எனக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
தேர்வு செய்த ஆசையை உணர்வுப்பூர்வமாக அணுகுங்கள்.
ஆசைகள் ஆழமாகும். அவை நிஜமாகவும் மாறும்.
காரணம், உங்களின் உணர்வுக்கு உங்களின் ஆசையை ஆன்ம சக்திக்குள் மூங்கி எழச் செய்யும் ஆற்றல் உண்டு. உணர்வுப்பூர்வமாகுங்கள்.