மகாவாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மனம் இறைவனளித்த ஆச்சரியம்
நவீன பொருத்தம்...
தலை - கம்ப்யூட்டர்
மூளை - ஹார்டுவேர்
மனம் - சாஃப்ட்வேர்
அகங்காரம் - வைரஸ்
இரண்டுமே மனிதரால்
இயக்கப்படுபவை.
மனிதன் நினைத்தால்
மாற்றப்படக் கூடியவை.
கம்ப்யூட்டரைக் காக்க...
வைரஸை அழிக்கும்
வைரஸ் ஸ்கேனர்!
உங்களைக் காக்க...
அகங்காரத்தை அழிக்கும்
தியான முறைகள்!
கம்ப்யூட்டரை
சூப்பர் கம்ப்யூட்டராக்க
பலவகை சாஃப்ட்வேர்கள்.
உங்களை
உற்சாக மனிதராக்க
இறைவனளித்த சாஃப்ட்வேர்
எனும் மனம்
மீண்டும் ஒருமுறை
வடிவமைக்கப்பட்டால் போதும்.
வடிவமைக்க உதவும் ஈடிதிடிணநு ண்ணிதூணதீச்ணூநு ஞணஞ்டிணநுஞணூதான் ஞானகுரு, ஞானக் கருத்துகள்.
நான் ஏன் ஆண்களைக் கண்டாலே வெறுக்கிறேன்?
-ஜெஸிந்தா, உதகமண்டலம்
ஜெஸிந்தா, ஒரு தியானப் பயிற்சியாளரிடம் வாழ்வியல் ஆலோசனை பெறுவது உங்களுக்கு மிகுந்த பயனளிக்கும்.
கவலைப்படாதீர்கள். உங்களுடைய பிரச்சினை பலருக்கும் இருக்கக் கூடியப் பிரச் னைதான். “நான் இதை விரும்புகிறேன்,” எனச் சொல்லும் ஒரு மனிதரைத் தேடிக்கண்டு பிடிப்பது அரிதாகிவிட்டது.
“நான் ஏன் அதை வெறுக்கிறேன் என்றால்...,” என நொண்டிச்சாக்குச் சொல்லி, நியாயம்போல் சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் காரணங்களைச் சொல்லும் மனிதர்கள், உங்களைப் போல வருத்தப்படுவதில்லை. அவர்களின் செயல் முழுக்க முழுக்க நியாயமானதாகவே அவர்களுக்குத் தெரிகிறது.
உங்களுடைய பிரச்சினையில், உங்கள் வெறுப்பிற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வெறுப்பு, காரணமில்லாமல் வருகிறது என்ற உண்மையை உணர்ந்திருப்பதே வளர்ச்சிதான்.
இன்னும் ஓர் உண்மை. “எல்லா வெறுப்புகளுக்கும் காரணம் என்ன?”
அவற்றுக்குக் காரணியான ஒரு தாறுமாறான எண்ணம் எல்லோரின் ஆழ்மனதில் புதைந்திருப்பதுதான். எப்படி இந்தத் தவறான எண்ணங்கள் நுழைந்தது? என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். அதனால்தான் வெறுப்புகளைக் “காரணமேயில்லாத வெறுப்புகள்,” என்று சொல்கிறோம்.
வெறுப்புக்கு இதுதான் காரணம் என மனிதன் சுட்டிக்காட்டுவது எல்லாமே, மனம் செய்யும் திடீர் ஜோடனைகள் மட்டுமே!
ஏதோ ஒரு காலத்தில், மனத்தைத் துளைத்து மனப்புண்ணை உண்டாக்கிய அந்தத் தவறான வார்த்தை அல்லது எண்ணம் அல்லது சம்பவம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
அது களையெடுக்கப்பட வேண்டும். உங்களின் ஆழ்மனதிலிருக்கும் ஆண்கள் சம்பந்தப்பட்ட அந்தத் தாறுமாறான எண்ணப்பதிவு அழிக்கப்பட்டால், வெறுப்பு மறையும்... நீங்கள் இயல்பானவராக மாறுவீர்கள்!