உடலிலேயே தவழலாம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு மருத்துவக் கல்லூரியில் பயின்ற வடநாட்டு மாணவருக்குத் தமிழ் தெரியாது.
அடுத்த மாதம் இறுதித் தேர்வு.
ஒரு குறிப்பிட்ட பிரிவில் தங்கியிருக்கும் புறநோயாளிகளின் விவரங்களை ஒரு தனிக் குறிப்பேட்டில், நோயாளியிடமிருந்தே, அவரின் பெயர், ஊர், குடும்பம் பற்றி விசாரித்து எழுத வேண்டும்.
தமிழ் தெரியாததால், நோயாளிகளிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை மட்டும், அதற்கான சரியான கேள்வி வாக்கியத்தைக் கேட்டு மனப்பாடம் செய்து கொண்டார்.
நாம் நம்முடைய
தர்க்க ரீதியான
அனுமானங்களைப்
பொறுத்து தொடர்ந்து
முடிவுகளை
எடுக்கிறோம்.
குறிப்பேட்டில் எழுத வேண்டிய
பதிலுக்குத் தகுந்தவாறு கேள்விகளைக் கேட்க
ஆரம்பித்தார்... அன்று வந்திருந்த 18 வயது
திருமணமாகாத பெண்ணிடம்!
1. உங்கள் பெயர்? ராஜாத்தி.
2. உங்கள் ஊர்? திருவொற்றியூர். 3. திருமணமாகிவிட்டதா? இல்லை.
4. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
".................!?"
மாணவர் கேட்ட கேள்விகளுக்கு அதுவரை சிரித்து பதில் சொன்ன பெண், விருட்டென்று எழுந்து சென்றுவிட்டார்.
"ஏன், அந்தப் பெண் இப்படிக் கோபித்துக் கொள்கிறார்! நான் வரிசைப்படி சரியான உச்சரிப்பில்தானே கேள்விகள் கேட்டேன்!?" என சக மாணவரிடம் அப்பாவியாகக் கேட்டார் அவர்.
சக மாணவர், "உனக்குத் தமிழ் தெரியாததால், "திருமணமாகவில்லை," என அப்பெண் சொன்ன பின்னும்கூட, "குழந்தைகள் எத்தனை?" என்ற கேள்வியைக் கேட்டுவிட்டாய். அதுதான் குழப்பம்," என்றார்.
இந்தப் பிரச்சினைக்குத் தர்க்க ரீதியாகத் (டூணிஞ்டிஞிவ்டு) தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்தார்...
"ஆங்... சரியான ஐடியா, நாலாவது கேள்வியை மூன்றாவது கேள்வியாக மாற்றிவிட்டால், பிரச்சினையே வராது," என முடிவு செய்து, கேள்வியின் வரிசையை மாற்றிவிட்டார்.
அடுத்த நோயாளியிடம் வந்தார். இந்த நோயாளி ஒரு முப்பத்தைந்து வயதான திருமணமான பெண்மணி. 'யாராயிருந்தால் எனக்கென்ன, நான்தான் கேள்வியையே மாற்றிவிட்டேனே...' என்ற எண்ணச் செருக்கில் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

உங்கள் உலகம் மனத்திரையில் வரையப்படுகிறது.
1. உங்கள் பெயர்? மீனாட்சி சுகுமார்.
2. உங்கள் ஊர்? அச்சரப்பாக்கம்.
3. உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? நாலு பசங்க சார்!
4. திருமணமாகிவிட்டதா? "................!?"
அவ்வளவுதான்... அப்புறம் என்னென்ன நிகழ்ந்திருக்கும் என்பதுதான் உங்களுக்கே தெரியுமே.
கண்டபடி திட்டு வாங்கி, முகத்தைத் தொங்கப்போட்டிருந்த மாணவர், ‘நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு, இந்தம்மா இவ்வளவு சத்தம் போட்டுட்டு போறாங்க?’ என்றுதானே யோசித்திருப்பார்.
இதைப்போல நீங்கள் யோசித்த நிமிடங்களில் எல்லாம் இதைப் போன்ற தவற்றைத்தான் நிகழ விட்டிருப்பீர்கள். இவரைப் போன்றே, தர்க்க ரீதியாக... ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க மனிதர்கள் முயற்சி செய்யும் போதெல்லாம், இதேபோல்தான் முட்டிக்கொள்கிறார்கள்.
பெங்களூர் ஆஸ்ரமத்தில் சிவசூத்திர விளக்கவுரை பேசிக் கொண்டிருக்கையில்... ஆனந்தபுரிவாசி ஒருவர், “தர்க்க ரீதியான அணுகுமுறை ஆனந்தத்திற்கு எதிரானது என நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தர்க்கமில்லாமல் எப்படி யோசிக்க முடியும், முடிவெடுக்க முடியும்?” எனக் கேட்டார்.
அதற்கு பதிலளிக்கும் பொழுது
சொன்னோம், உங்களின் தர்க்கம் என்பதே
வெறும் அனுமானம்தான்.
“வீட்டின் முன் கதவு திறந்திருக்கிறது,”
என்ற செய்தியைக் கேட்டதுமே, வீட்டின்
பின் கதவு பூட்டித்தான் இருக்கும் என்ற
அனுமானத்திற்கு வருகிறோம்.
தர்க்க ரீதியான
அணுகுமுறை
ஆனந்தத்திற்கு
எதிரானது. இந்த அனுமானம்தான் தவறானது எனச் சொல்கிறேன். பின் கதவு திறந்து இருக்கவும் அதே அளவிற்கு வாய்ப்புள்ளது. அதை அனுமானிக்க முடியாது.
வீட்டின் கதவு பற்றி அனுமானிக்கும்போது பாதகம் எதுவும் நிகழ்வதில்லை.
இதே, எதிரே இருக்கும் இருவரில் ஒருவரைக் காட்டி, “இவர் நல்லவர்,'' எனச் சொன்னால், நம்மையும் அறியாமல், அந்த இன்னொருவர் கெட்டவர் என்ற முடிவுக்கு நம் மனம் வந்துவிடும்.
ஒருவேளை அவர் மிக நல்லவராகவோ, அல்லது மகானாகவோ இருக்கலாம்.
ஆனால், நாம் நம்முடைய தர்க்க ரீதியான அனுமானங்களைப் பொறுத்து தொடர்ந்து முடிவுகளை எடுக்கிறோம்.
இம்முடிவுகள்தான் 'இதுதான் உலகம்' என்ற வரையறையைத் தருகின்றன.
உங்கள் உலகம் மனத்திரையில் வரையப்படுகிறது.
தவறான அனுமானங்களையே அதிகமாகத் தூண்டும் மனம் இருக்கும்வரை, உலகம் அது உள்ளபடியே தெரியாது. அதுதான் தர்க்கம்.
அதைத்தான் தவறு எனச் சொன்னேன்.
நான்கு வார்த்தை நன்றாய்ப் பேசிவிட்டால் நல்லவர்.
நான்கு வேண்டாம், ஒரு வார்த்தை 'நறுக்கென்று!' பேசிவிட்டால் - கெட்டவர்.

நான்கு வார்த்தை நன்றாய்ப் பேசிவிட்டால்
நல்லவர். நான்கு வேண்டாம், ஒரு வார்த்தை
'நறுக்கென்று!' பேசிவிட்டால் - கெட்டவர்.
இரண்டு முடிவுமே பொய்.
இரண்டு முடிவுமே பொய்.
இரண்டுமே தர்க்க ரீதியானது. தவறானது.
அழகு முகத்தைப் பார்த்தால் - அவர் அருமையானவர்.
அழகற்ற முகத்தைப் பார்த்தால் - அவர் அருவருப்பானவர்.
இந்த அருமையும் அருவருப்பும்தான் அனுமானங்கள்.
இந்த அனுமானங்கள் ஆனந்தத்தின் அடைப்பான்கள்.
இவற்றையெல்லாம் விடுங்கள். உங்களைப்பற்றி நீங்கள் அறிந்ததாய் நினைப்பதெல்லாம் இந்த அனுமானங்களின் தொகுப்புதானே!
தர்க்கம் என்பது ஒரு மனத்தடை. அது இல்லாமல் செயல்பட ஆரம்பிக்கும்போதுதான், நிஜ உலகின் கதவுகள் திறந்து கொள்ள ஆரம்பிக்கிறது.
“தர்க்கமில்லாமல் செயல்படுவது எப்படி என்பதைச் சுருக்கமாய் விளக்குங்க,” என ஆனந்த வாழ்வு கல்வி பயிலும் மாணவர் கேட்டபோது,
‘இவர் இப்படிப்பட்டவர்
இது இப்படித்தான்’- என்ற
இந்த இரண்டு முடிவை மட்டும் எடுக்காதே.
உள்ளதை உள்ளபடியே அணுகுங்கள். அணுகியபின் நிஜ நிலவரம் பற்றித் தெரிந்துகொள்வீர்கள்,’’ எனச் சொன்னேன். இதைச் சிரத்தையோடு கடைபிடித்த மாணவர், தர்க்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டார்.
“தர்க்கத்தை தாண்டியதும், உடலில் தவழ்வதைப் போல் உணர்கிறேன்.
என்னவொரு சுதந்திரம் இது!
நன்றி! நன்றி!” எனப்பொங்கும் மகிழ்ச்சியோடு சொன்னார்.
மேலுள்ள தியானத்தை நீங்கள்கூட முயற்சிக்கலாமே, செய்து பாருங்கள்.