KAILASA Library/மனதைத் திற/மனிதன் நிறம் மாறSign in
மனதைத் திற

மனிதன் நிறம் மாற

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

“சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே!”

சிரிக்கும் ஆணை நம்பலாமா?

""புகையிலை விரிச்சா போச்சு பொம்பள சிரிச்சா போச்சு,"

ஆண்கள் சிரித்தால்!?

“எழுத்தாணியும், ஓலையும் கிடைத்தது என்பதற்காக, எதையாவது எழுதிவைத்தால், அதை நாம் பழமொழி என ஏற்றுப் போற்ற வேண்டுமா…?”

காரணமேயில்லாமல் பெண்களை வெறுக்கத் துடிப்பது, ஒரு வகையான மனப்புண். இப்படிப் பட்டவர்களைத்தான் இதுபோன்ற வரிகள் காந்தம்போல் ஈர்க்கும். மனப்புண்களினால்தான் வெறுப்பு திட உருவம் பெறும்.

“எழுத்தாணியும், ஓலையும்
கிடைத்தது என்பதற்காக,
எதையாவது
எழுதிவைத்தால், அதை
நாம் பழமொழி என ஏற்றுப்
போற்ற வேண்டுமா…?”

“புத்தகங்களால் களங்கப்படாத ஒரு
மனிதரைக் கொடுங்கள்; ஒரு நூறு புத்தர்களை
அவர் ஒருவர் மூலமாக உருவாக்கித்
தருகிறேன்,” என்ற வாசகத்தை அழகாய்
சொல்லும் சமீபகாலத்து சூஃபி ஞானியைச்
சந்தித்த நிருபர் கேட்டார்.

“உங்களின் குருகுல மாணவர்கள் மிக புத்திசாலித்தனத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பதைக் காண்கிறேன். இதன் இரகசியம் என்ன?

என்ன வகையான பாடத்திட்டத்தை இவர்களுக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா?’’

ஞானி -

“மாணவர்களுடைய புத்திசாலித்தனத்தின் முதல் இரகசியம் : அவர்கள் இங்கு மாணவர்களாக நடத்தப்படுவதில்லை. அவர்கள் இளவரசர்கள் போல் சு தந்திரமாக இருக்கிறார்கள்.

இரண்டாவது இரகசியம் : அவர்கள் படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு,’’ என்றார்.

உலக அறிவு என்ற பெயரில் மனித மூளைக்குள் கருத்துகள் திணிக்கப்படுவதைத்தான் ஐணநுரணினிணூட்ச்ணாடிணிண ஞுதுணீடேணிடிணscratchணிடிணிண என்றழைப்பார்கள். தவறான வார்த்தைகளும், வரிகளும் மனதின் கனத்தை அதிகமாக்குகின்றன.

“ஜாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை,’’ என்று சொல்லுவார்கள். “ஜாண் பிள்ளையானாலும் பெண் பிள்ளை,’’ எனச் சொல்லியிருந்தால், மறைமுகமாக ஆண்கள் தாழ்த்தப்பட்டிருப்பார்கள். காரணம், வார்த்தைகள் வலிமையானவை.

ஏதோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் மனம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறது என்றால், அந்த வார்த்தையால் மனம் சுகமாய் உணர்கிறது என்று அர்த்தம்!

portrait of a youth

ஏதோ ஒரு சில வார்த்தைகளை மட்டும்
மனம் விரும்பிப் பிடித்துக் கொள்கிறது
என்றால், அந்த வார்த்தையால் மனம் சு
கமாய் உணர்கிறது என்று அர்த்தம்!

தோலை வருடினாலும் சுகம். புண்ணை வருடினாலும் சுகம்.

ஆனால் இரண்டு சுகமும் நேர்மாறானவை. இரண்டாவது சுகம் வேதனையில் முடியக்கூடியது.

கெட்ட வார்த்தைகள், மற்றவரை மட்டம் தட்டும் வரிகள், மனிதர்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கும் செய்திகள் மற்றும் பேச்சுக்களில், சிலவற்றை மட்டும் ஒருவர் விரும்பி உபயோகிக்கும்போது, ஒருவகையான திருப்தி நிச்சயம் அவருக்குள் ஏற்படும்.

எச்சரிக்கை! நீங்கள் விரும்பிக்கொடுப்பது மனப்புண்ணை! இது ஆரோக்கியமற்றது. உங்களின் மனம் விரும்பிச் சேகரிக்கும் வார்த்தைகளைப் பற்றி மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

அந்த சூஃபி ஞானி சொன்னது போல், புத்தகங்களின் எண்ணிக்கைகள் குறையும்போது மனிதனின் புத்திசாலித்தனம் அதிகமாவது உண்மைதான்.

விரிவாகச் சொன்னால்...

தேவையற்ற புத்தகங்கள் தரும் தாறுமாறான கருத்துகள் மனதிற்குள் நுழைவது தடுக்கப்பட்டால், புத்திசாலித்தனம் குறைவதும், மங்குவதும் தடுக்கப்படும். புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும்.

எனக்குப் பிடித்த ஒரு தாவோ வாசகம் "நீ விரும்பிப் படிக்கும் புத்தகத்தைச் சொல். நீ யார் என்று நான் சொல்கிறேன்."

> ""எனக்குப் பிடித்த ஒரு
> தாவோ வாசகம்...
> நீ விரும்பிப் படிக்கும்
> புத்தகத்தைச் சொல். நீ யார்
> என்று நான் சொல்கி

கல்லூரி மாணவன் வேதம் படித்தால் அதிசயம். குடும்பஸ்தர், காமிக்ஸ் படித்தால் அதிசயம். குழந்தை அரசியல் புத்தகம் படித்தால் அதிசயம்.

உங்களின் மன அமைப்பை இதப்படுத்தும் புத்தகங்களைத்தான் நீங்கள் விரும்பிப் படிப்பீர்கள். அப்படிப்பட்டவார்த்தைகளைத்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவீர்கள்.

நீங்கள் விரும்பும் வார்த்தைகள்

ஆரோக்கியமான வார்த்தைகள்தானா? என்பதைக் கண்டுபிடிக்க, உங்களின் எண்ணம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் மீது விரிவான ஆய்வொன்று உங்களால் நிகழ்த்தப்பட வேண்டும்.

ஒரு பண்டிதரும், பாமரரும் ஜொராஸ்ட்ரிய குருவிடம் சீடர்களானார்கள். பாமரரிடம், "நீ இன்னும் களங்கப்படவில்லை. இங்குச் சொல்லித்தரப்படும் தியானங்களை முழுமையாய்ச் செய். இயல்பாய் இரு. சீக்கிரத்திலேயே ஞானமடைந்து விடுவாய்," எனச் சொல்லி ஆசீர்வதித்தார் குரு.

அடுத்து வந்த பண்டிதர், "நான் ஞானமடைய என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்டதற்கு, "குறைந்தது ஒரு ஜென்மம் முழுக்க தவம் செய்தால்... நீ ஞானமடைவதற்கு வாய்ப்புகள் அதிகம்," என்றார் குரு.

குருவின் பதிலால் உலுக்கப்பட்டவர், "சாஸ்திரம் படித்தவனுக்கு ஒரு ஜென்மம் முழுக்கத் தவம் செய்தாலும் ஞானம் கிடைப்பது சந்தேகம்... ஆனால், படிக்காதவனுக்கு உடனடி ஞானம் உறுதி என்றால் என்ன அர்த்தம்?" எனக் கேட்டார்.

குரு சொன்னார், "உன்னுள் நுழைந்துவிட்ட தவறான செய்திகளும், உன்னால் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட சரியான சத்தியங்களும், உன் மனதிலிருந்து தோண்டியெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு ஜென்மம் மிகக் குறைவு.

மனம் சுத்தமாகிவிட்டால்... அடுத்த நொடியிலேயே ஆனந்த விருக்ஷத்தை அங்கு நட்டு விடலாம். பாமரன் மனம் இன்னும் மாசுபடுத்தப்படாத புல்வெளி. அதிலிருக்கும் சில முட்களையும், சொற்களையும் அப்புறப்படுத்த அதிக நேரம் பிடிக்காது," என்றார்.

Illustration of a meditating or reflective figure

நிறையப் படிப்பது தவறல்ல.
ஆனால், தவறான வார்த்தைகளை
மனதில் பிடிப்பதுதான் பெரும் தவறு.
சுயபாதகம்.

நிறையப் படிப்பது தவறல்ல. ஆனால், தவறான வார்த்தைகளை மனதில் பிடிப்பதுதான் பெரும் தவறு. சுயபாதகம்.

காரணம், வார்த்தைகளின் தொகுப்புதான் மனம்.

துன்பம்தரும் வார்ததைகள் மனதில் அதிகமானால், நீங்கள் துன்பம் தரும் மனிதராக உருவெடுத்து விடுவீர்கள்.

நீங்களும் துன்பப்படுவீர்கள்.

வார்த்தைகள் வாழ்வின் வேர்!

வார்த்தைகள் சரிசெய்யப்பட்டால், நீங்கள் சரியானவராவீர்கள்.

சிறுவன் நிட்டியிடம் அவரது தந்தை கேட்டார், “டாம் உன்னை விட வயதில் சிறியவன். ஆனால், உன்னைவிட அதிக மதிப்பெண்களையே அவன் எப்போதும் பெறுகிறான். இது எப்படி? காரணம் என்ன?”

அதற்குக் கொஞ்சமும் தாமதிக்காமல் சிறுவன் நிட்டி சொன்னான், “காரணம் அவனுடைய தந்தை ஒரு புத்திசாலி!”

தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழி மனத்துக்கும், வார்த்தைகளுக்கும் மிகவும் பொருந்தும்.

நீங்கள் விரும்பிப் படிக்கும் வார்த்தைகளும், பேசும் வார்த்தைகளும் உங்கள் மனத்தைப் பொறுத்தது. மனத்தைப் பொறுத்தே வார்த்தைகள் வெளிவரும்.

உங்களின் உள்ளே நுழையும் வார்த்தைகளையும் மற்றும் உங்களிடமிருந்து வெளி வரும் வார்த்தைகளையும் எச்சரிக்கையோடு ஆய்வு செய்யுங்கள். வார்த்தைகளின் தரம் பாருங்கள். மனதின் நிறம் தெரியும்.

மனதின் நிறம் மாற, மனம் தூய்மையடைய உங்களோடு சம்பந்தப்படும் வார்த்தைகளைத் தூய்மைப்படுத்துங்கள். நீங்கள் தூய்மையானவராவீர்கள்.

தனக்கும், மற்றவர்களுக்கும் சந்தோஷம் அளிக்கும் வகையில் செயல்படுபவர்கள், பேசுபவர்கள் தூய்மையான மனிதர்கள்.