ஆழ்மனக் காயங்கள் குணப்படுத்தப்பட
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒரு முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த ஆய்வறிக்கையைப் படித்தேன். அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக இருந்தது.
அதாவது “50 சதவீதத்திற்கும் மேலான வாலிப பருவத்தினர், உணர்ச்சி கொந்தளிப்புக்கு (உட்ணிணடிணிணச்டு ச்ளீடீதண்ணூட்ஞூணை ணீணூணிஞூநேூட்) ஆளாகி இருக்கிறார்கள்,” என்பதே அது.
பேச்சின் உள்ளார்த்தங்களும், எரிச்சலான முகபாவங்களும் உங்கள் இரத்தத்தையே கொதிக்கச் செய்கிறது. நரம்பு மண்டலத்தை உலுக்கி, உடலை நடுங்கச் செய்கிறது.
நம் உறவுகள் தவறாய்ப் பேசிய ஒரு சொல்லுக்காக துடிதுடித்துப் போகும் மனிதர்கள், ஏனோ எப்போதும் யோசிப்பதே இல்லை..., “இப்படித்தானே நாம் விளையாட்டென்று பலசமயம் பேசியவை பலரைக் குத்தியிருக்கும் என்று.
நம்மைக் கொந்தளிக்க
செய்பவர்களுக்கு,
எப்படி
நாம் பாதிக்கப்படுகிறோம்
என்ற உண்மை
தெரிவதில்லையோ,
இப்படித்தானே
நம்மையும் அறியாமல்
துவைத்துப் போடப்படுகிறார்கள் மனிதர்கள்,
உறவுகளின் சொற்களில் இருக்கும் ஒவ்வொரு
அர்த்தத்தாலும்.
சொல்லின் அதிர்வுகள், மனம் வழியாய் உடலையே அதிரச் செய்யும் ஏவுகணைகள்!
நம்மைக் கொந்தளிக்க செய்பவர்களுக்கு, நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற உண்மை எப்படித் தெரிவதில்லையோ, இப்படித்தானே நம்மையும் அறியாமல் நாம் பலரை பாதித்திருக்கலாம்.
முகுந்தனின் மனைவி மரணப் படுக்கையில் இருந்தார்கள். 24 மணி நேரம் என்று மருத்துவர்கள் கெடு குறித்துவிட்டதால், நொந்து கொண்டிருந்த முகுந்தனுக்கு, அவரின் நண்பர் ஆறுதல் வார்த்தைகள் கூறினார்...
"முகுந்தா! கவலைப்படாதே, இது தாளமுடியாத கஷ்டம்தான், கொஞ்சம் மனத்தைத் திடப்படுத்திக் கொள். இதைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவத்தை இறைவன் உனக்குத் தருவான்,” என்றார்.
நண்பனின் ஆறுதலுக்கு, கொஞ்சமும் தாமதிக்காமல் பதிலளித்தார் முகுந்தன். “என்னப்பா! இதுக்குப்போய் இறைவனையெல்லாம் கூப்பிடாதே. 42 வருஷம் இவளைப் பொறுத்துக்கிட்டிருக்கேன். இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா?" என்றார்.
ஒருவேளை முகுந்தன் பேசியது, அவர் மனைவியின் காதில் விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும்?
ஒருவருக்கு விளையாட்டாக இருக்கும் ஒரு விஷயம், மற்றவருக்கு வினையாகிறது. இதயத்தைத் தைக்கிறது.
காரணம், பலதரப்பட்ட மனங்கள்.
யாரும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
அவை சொல்லப்பட்ட இடம்; சொல்லப்பட்ட விதம்; சொல்லப்பட்ட நேரம் என்று சாயம் பூசிய கலர் கண்ணாடிகளை போட்டு, வார்த்தைகளின் வீரியத்தை மனத்தில் மதிப்பிடுகிறார்கள்.

யாரும் வார்த்தைகளுக்கு அதிக
முக்கியத்துவம்
தருவதில்லை. அவை சொல்லப்பட்ட
இடம்;
சொல்லப்பட்ட விதம்; சொல்லப்பட்ட
நேரம் என்று, சாயம் பூசிய கலர்
அதன் விளைவே, வினையாய் முடியும் விளையாட்டுகளும், சண்டையில் முடியும் சாதாரணக் கிண்டல்களும்.
அந்த ஆய்வறிக்கை தெளிவாகச் சொல்கிறது...
"நம்முடைய சமுதாயத்தில், வளரும் சமுதாயம் (பாதிக்கும் மேற்பட்ட சமுதாயம்) ஆழ்மனதில் காயப்பட்டு ஊனமாகியிருக்கிறது."
பாதிக்கும் மேற்பட்டோருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது.
இந்தப் பிரச்சினை நம் குழந்தைக்கு இருக்காது எனப் போலியாக நம்புவதைவிட, அப்படியேதும் இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்து, அவர்களை இப்பொழுதே காப்பாற்றுங்கள்.
அதைவிட, "எனக்கே அது ஏன் இருக்கக் கூடாது?" என ஆராயுங்கள்.
இது கோரிக்கையோ, அறிவுரையோ அல்ல. காலத்தின் தேவை.
நீங்களும் காப்பாற்றப்பட்டாக வேண்டும். எதிர்காலச் சமுதாயமும் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மன அழுத்தத்திற்கு மூலகாரணமான மனக்காயங்கள் குணப்படுத்தப் பட வேண்டும்.
நம் மனக்காயங்களில் பெரும்பாலானவை மற்றவரின் விளையாட்டால் விளைந்ததே...
நீங்களும் யோசிக்கலாம்... விளையாட்டு எப்படி வினையாகும் என்று?
விளையாட்டைக்கூட விளையாட்டாய் பார்க்கத் தெரியாதது யார் தவறு? அது வினையாக ஏன் மாறுகிறது.
நீங்களும்
காப்பாற்றப்பட்டாக
வேண்டும். எதிர்கால
சமுதாயமும் காப்பாற்றப்பட
வேண்டும். அதற்கு மன
அழுத்தத்திற்கு
மூலகாரணமான
அடுத்து வரும் கருத்தை ஆழமாய்ப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
காரணம்...
விளையாட்டையே வினையாய்ப்
பார்த்துத் துடித்திடும் காரணியான காயம்,
ஏற்கனவே பலரின் மனதிலிருக்கிறது.
அந்தக் காயம்தான், விளையாட்டான வார்த்தைகளைக்கூட, அது சொல்லப்பட்ட விதம், காலம், இடம் ஆகியவற்றால் வெந்த புண்ணில் ஆட்டப்பட்ட மயிலிறகாய் மாற்றிவிடுகிறது.
தவறு புண்ணிலா?
மயிலிறகிலா?
எது எப்படியோ, சரி செய்யப்பட வேண்டியது புண்தானே தவிர, மயிலிறகல்ல.
புண் சரியானால், அதே மயிலிறகின் ஆட்டல், சுகமான வருடலாகும்.
அது நெருடலல்ல என்பது புரியும்.
இப்பொழுது சொல்லுங்கள்... சரி செய்யப்பட வேண்டியது ஏவுகணை போல் தோன்றும் உறவின் வார்த்தைகளா? அல்லது உங்களின் ஆழ்மனப் புண்ணா?
மனோதத்துவ மாத இதழில் வெளிவந்த இந்த ஆராய்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பு உருவாகக் காரணமான மன அழுத்தம் (ண்ணொஞுண்ண்) செய்யும் பாதிப்புகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
எலி ஒன்றுக்கு, தொடர்ந்து பல மன அழுத்தங்களை செயற்கையாக அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் உருவாக்கினார்கள். அதிக சக்தி உள்ள வெளிச்சம், இடத்தையே அதிரச் செய்யும் வலிமையான சப்தங்கள், தனிமைப்படுத்தல் என பல மன அழுத்தம் உருவாக்கும் காரணிகளை அந்த ஆராய்ச்சியில் எலியின் மேல் பிரயோகித்தார்கள்.
சில நாட்களின் முடிவில் இறந்துபோன எலியின் உடற்கூறில் நடந்திருந்த மாற்றங்கள், கற்பனைக்கு அப்பாற்பட்டது.
சில நாள் ஆராய்ச்சிக்கு முன் இளமையாக, ஆரோக்கியமாக இருந்த எலியின் உடற்கூறுகள், பிரேத பரிசோதனையில் அது ஆரோக்கியம் கெட்ட கிழ எலியின் உடற்கூறு அடையாளங்களைப் பெற்றிருந்தது.
எலியின் இரத்தக்குழாய், திசு, தசைநார்க்குள்ளேயே முதுமைக்கான மாற்றங்களைப் பெற்றுவிட்டது.
மன அழுத்தம், மூப்பை இவ்வளவு முந்தச் செய்யுமா என ஆராய்ச்சி செய்த மருத்துவர்களே வாயடைத்துப் போனார்கள்.
மன அழுத்தத்தால் வரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள்தான், நம் ஆரோக்கிய குறைபாடுகளுக்கும், சோர்வுகளுக்கும், முந்திக்கொள்ளும் மூப்புக்கும் காரணம்.
ஏகப்பட்ட காயங்கள் ஒவ்வொருவர் மனதிலும்.
யாருடைய பேச்சு... எங்கு குத்துகிறது?
ஏன் வலிக்கிறது? என ஆராயுங்கள்.
காயங்கள் புலப்படும்.
காயங்களுக்கு வெளியாளோ, மற்றவர் வார்த்தைகளோ காரணமல்ல என புரியும்.
இதுவே பாதி வேதனையைப் பறக்கச் செய்திடும்.
அதே ஆராய்ச்சியை ஆழப்படுத்திட, தவிடு பொடியாகிடும் மீதமுள்ள வேதனைகளெல்லாம். உணர்ச்சிகளும் பக்குவப்படும்.
மன அழுத்தமும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் ஒருவருக்குள் உருவாகக் காரணமான மனக்காயங்கள் குணமாக ஆரம்பிக்கும், அற்புதம் நிகழும். அற்புதம் நிகழ, தொடர்ந்து உணர்ச்சி பக்குவத் தியானம் செய்யுங்கள்.