நீங்கள் வளர்ந்த குழந்தைகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"எப்படியோ! இனி என் பிரச்சினைக்கு முடிவு பிறந்தது," என்று குதூகலத்துடன் வீட்டின் கேட்டைத் திறந்து நுழைந்தார்.
கதவைத் திறக்கக்கூட இல்லை. "அடக் கடவுளே! இது என்ன சோதனை," என்று அழாத குறையாக வீட்டையே உற்றுப் பார்த்தார்.
"மியாவ்," என்று அந்த அழகான பூனை கவலையில்லாமல் குரல் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து விட்டது.
"மனைவியைத்தான் விட முடியாது. அவள் வளர்க்கும் பூனையையாவது விட்டு வரலாமென்றுதான் நான்கு தெரு தாண்டி விட்டு வந்தேன். பார்த்தால், நமக்கு முன்பே வீட்டில் வந்து நிற்கிறதே, என்ன செய்வது? என்ன ஆனாலும் எப்படியும் இதை விடக்கூடாது?" என்று முடிவெடுத்தார்.
அதிகாலையிலேயே எழுந்து பூனையுடன் கிளம்பினார். 20 கி. மீ தாண்டிச் சென்று பூனையை விட்டார். வழியில் டீ குடித்துவிட்டு வருவதற்குள், பூனை வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது.
மன அழுத்தத்தின் உச்சத்திற்குச் சென்ற அவர், இனி பூனையைத் தொலைத்தால், அதனால் திரும்பி வர முடியாத இடத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார்.
சட்டென்று மிகச் சரியான தீர்வு ஒன்று
சட்டென்று மிகச் சரியான
தீர்வு ஒன்று கிடைத்தது.
அடுத்தது ஒரு நொடிகூடத்
தாமதிக்காமல், அருகில்
இருக்கும் காட்டிற்கு உடனே
தம் காரில் பூனையுடன்
கிடைத்தது. அடுத்தது ஒரு நொடிகூடத் தாமதிக்காமல், அருகில் இருக்கும் காட்டிற்கு உடனே தம் காரில் பூனையுடன் சென்றார்.
வலது பக்கம், இடது பக்கம் எனத் தொடர்ந்து குறுக்கு நெடுக்குமாக பயணித்து நட்டநடுக்காட்டைச் சென்றடைந்தார். மெதுவாகக் காரை நிறுத்தி, “அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டார்.
“இனி எப்படி வீட்டிற்கு வருவாய் எனப் பார்க்கிறேன்,” என்று பூனையைப் பார்த்து ஓர் ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு, பூனையை நடுக்காட்டில் திறந்து விட்டார். விட்டதுதான் தாமதம், உடனே வேக வேகமாக வீட்டிற்குக் கிளம்பினார்.
அப்போதுதான் அவருக்குச் சட்டென்று ஒரு உண்மை புரிந்தது. உடனே வீட்டிற்கு போன் செய்து, “டார்லிங் நம்ம டாம் (பூனையின் பெயர்) வந்துவிட்டதா?” என்று கேட்டார். மனைவி, “ஏன்? இங்கு என் மடியில்தான் உட்கார்ந்திருக்கிறது. என்ன விஷயம்?” என்று கேட்டார்.
மறுமுனையில் அவர், தாம் பூனையிடம் தோற்றுவிட்டதை வெளிப்படுத்திக்கொள்ளாமல், “அதில்லை டார்லிங்... நான் நடுக்காட்டிற்குள் இருந்து பேசறேன். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியை மறந்து விட்டேன். கொஞ்சம் டாமிடம் கேட்டுச் சொல்லேன்,” என்று கெஞ்சினார்.
ஆழ்ந்து, இந்த உண்மையை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
மனிதர்கள் இயற்கையாகவே, தங்கள் சுபாவத்தினாலேயே ஆனந்தமயமானவர்கள். ஆனால் தங்களுக்குள் தாங்களே ஏற்படுத்திக்கொண்ட ‘அஞ்ஞூணுண்டிதிஞூணுண்ண்’ எனும் குணத்தால், தங்கள்,” பாவத்தை வெளிப்படுத்தாமல், அதை உணராமல் இருக்கிறார்கள். கடினமாகவும், சோர்வாகவும் காணப்படுகின்றார்கள்.
இயற்கையுடன் தங்களுக்கு இருந்த
தொடர்பு முறிந்துபோனது பற்றிக்கூடத்
தெரியாமல், அதைப்பற்றிய தெளிவில்லாமல்
இருக்கிறார்கள்.
நீங்கள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் நடப்பதே நடனமாக இருக்கும். நடக்கும் போதுதான் என்றில்லாமல் நின்று கொண்டிருக்கும்போதே ‘பொத் பொத்’ என்று
ஆழ்ந்து, இந்த உண்மையை
உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
மனிதர்கள் இயற்கையாகவே,
தங்கள் சுபாவத்தினாலேயே
ஆனந்தமயமானவர்கள்.
விழுவார்கள்.
தெரிந்து கொள்ளுங்கள், தன்னால் கீழே விழும் எந்தக் குழந்தைக்கும் அடிபடுவதில்லை. பாதிப்புகள் வருவதில்லை.
தான் கீழே விழுந்து விட்டோம், தரையில் உடம்பு மோதிவிட்டது. அதனால் வலி வரும். வலி வந்தால் அழ வேண்டும் என்ற கட்டுறு மனப்பாங்கினால் இணிண ஞீடிணூடிணிணடிணஞ் பாதிப்படையாதவர்கள் குழந்தைகள். அதனால்தான் அவர்கள் ‘பொத்’ என்று கீழே விழுந்தாலும் அடுத்த க்ஷணம் சிரித்துக் கொண்டே எழுந்து நடக்கிறார்கள்.
குழந்தைகளைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்த மனிதர் கீழே விழுந்தால் என்னாகிறது? அதுவும் நின்று கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், தங்களுடைய கனத்தையே தாங்கமுடியாமல் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகின்றது.
ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் இந்த உண்மையைப் புரிந்துகொள்வீர்கள்.
உருவத்தினாலோ அல்லது எடையினாலோ அல்லது வயதினாலோ இவ்வாறு பாதிப்புகள் வருவதில்லை. குழந்தைகளைவிட எடையில் மனிதர்கள் கனமானவர்கள். குழந்தை விழுந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ளும் இயற்கை, வளர்ந்த மனிதர்கள் விழுந்தால் ஏற்றுக் கொள்வதில்லையே, ஏன்?
காரணம், குழந்தைகளிடம் கட்டுறு மனப்பாங்கு இணிணஞீடிணூடிணிண டிணஞ் இல்லை. அதனால், இயற்கையைப் பாதிக்கும் சக்தி அவர்களிடமிருந்து வெளிப்படுவதில்லை. ஒரு மலர் போன்று கீழே விழுகிறார்கள். அவர்களின் உடலின் இயக்கம் இயற்கையுடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறது.
ஆனால், மனிதர்கள் விழும் போது கடுமையான கல் போன்று

மனிதர்கள் தங்களுக்குள் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட `அஞ்ஞூனுதுண்திதுனுநுண்ண்' எனும் குணத்தால், தங்கள் சுபாவத்தை வெளிப்படுத்தாமல், அதை உணராமல் இருக்கிறார்கள். கடினமாகவும், சோர்வாகவும் விழுகிறார்கள். கனமாகவும், ஸ்திரமான உருவமாகவும் இருப்பதனால் புவியீர்ப்பு (Gravity Force) சக்தியால் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறார்கள்.
இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சத்தியம் இது...
சுபாவத்தினாலேயே மனிதர்கள் கனமானவர்கள் அல்ல.
குழந்தைகள் கனமாக இருப்பதில்லையே.
குழந்தைகள் மனிதராக வளர வளரத்தான் தங்கள் சுபாவத்தை இழக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வரும் எண்ணங்களால், எண்ணங்களின் தொகுப்பால்தான் மனிதர்கள் கனமாக இருக்கிறார்கள்.
மிகவும் பிடித்தவருடன் இருக்கும் கணங்களில் பார்த்தீர்கள் என்றால் மனம் லேசாகிறது.
மனம் லேசாகும் போது நீங்கள் லேசாகிறீர்கள்.
உங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் எண்ணங்களின் பிடிப்பு உங்களை விட்டு விலகிவிடுகின்றது.
பிடித்தவருடன் இருக்கும்பொழுது, நீங்கள் அந்த இடத்தில், அந்த நேரத்தில் அப்பொழுது முழுமையாக இருக்கிறீர்கள். தியானம் உங்களுக்குள் நிகழ்கிறது. நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தியானம் செய்வதில்லை. தியானம் உங்களுக்குள் தன்னால் நிகழ்கிறது.
"இந்தத் தியானம் எனக்குச் சாத்தியமில்லை. புத்தன் காலத்தில், இயேசு காலத்தில் அந்தச் சூழ்நிலைக்கு வேண்டுமானால் ஆனந்தம் சாத்தியமாக இருக்கும். இப்போது இதற்கு சாத்தியமில்லை?" என்று சொல்கிறீர்களா...

சுபாவத்தினாலேயே மனிதர்கள்
கனமானவர்கள் அல்ல. மீண்டும் மீண்டும்
வரும் எண்ணங்களால், எண்ணங்களின்
தொகுப்பால்தான் அவர்கள் கனமாக
தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் இந்தத் தியானம் சாத்தியம். எந்நேரமும் புத்துணர்வுடன், ஆனந்தமாக, ஆரோக்கியமாக உங்களால் வாழ முடியும்.
எண்ணங்களால், பாதிக்கப்படாத வாழ்க்கை அனைவருக்கும் சாத்தியமே. “வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்வேன்," எனும் உத்வேகம் (Inspiration) மலர்ந்தால் போதும்.
"Spirit to live! Spirit to enjoy!'"
என்பதை உங்களின் உணர்வாக மாற்றுங்கள். அந்த உத்வேகம் (Inspiration) உங்களை இயற்கையுடன் ஒருங்கிணைக்கும்.
உத்வேகம் உங்களை உயர்த்தும், ஆனந்தம் உணர்வாக மாறும். என்றென்றும் நித்யானந்தமாகி விடுவீர்கள்.