மகாவாக்கியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"குணம் மாற உலகமே மாறிப்போகும்,"
இதயத்திலிருந்து யோசி! இதயத்திலிருந்து சுவாசி! இதயத்திலிருந்து பேசு! இதயத்திலேயே வாழ்!
தனித்துவம் மலரும்.
சீக்கிரத்தில் படிக்க சுலபமான, ஆனால், செயல்படுத்த மிகக் கடினமான ஜென் கூற்று உணர்த்த விரும்புவது ஒரே ஒரு இரகசியத்தைத்தான்.
"எவ்வளவு உணர்வுப்பூர்வமாக வாழ முடியுமோ, அவ்வளவு உணர்வுப்பூர்வமாக வாழ, உண்மையாய் வாழ். நடிப்பைக் கலை. வேஷத்தைக் கிழி. குணம் மாறும், நீ மலர்வாய், மகிழ்வாய், வாழ்வாய், இதே உலகில்!"
நில்! கவனி! உணர்!
இதயக் கண் திறந்துகொள்ளும்,"
டென்ஷன் ஏன் வருகிறது?
-எஸ்தர், பெரம்பலூர்
தன் எடையைவிட, 50 மடங்கு அதிகமுள்ள உணவு துணுக்குகள் வரை, சர்வ சாதாரணமாகத் தூக்கிச்செல்லும் எறும்புகள், உற்சாகமாகவேயிருக்கின்றன. எப்போதும்!
தம் உடலை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதருக்குதான் டென்ஷன் வருகிறது.
உற்சாகம் குறையும் போதுதான், ஒரு மனிதருக்கு டென்ஷன் வருகிறது. உங்களுக்கு வந்த நிமிடங்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் உற்சாகமிழந்திருப்பீர்கள்.
உற்சாகமாக, சந்தோஷமாக இருக்கும்போது, முயற்சி செய்தால்கூட உங்களால் டென்ஷனாக முடியாது.
உற்சாகக் குறைவே வாழ்வின் சாதாரணச் சூழ்நிலைகளில்கூட ஒருவரை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது.
உற்சாகத்தை வாழ்வில் அதிகரியுங்கள், டென்ஷன் குறையும்.
உற்சாகம் அதிகரிக்க அல்லது உற்சாகம் குறையாமல் இருக்க சில டிப்ஸ்...
- தினம் ஒரு தியானம் செய்யுங்கள்.
- சந்தோஷம் தந்த சம்பவங்களைமட்டும் நினைவில் நிற்க அனுமதியுங்கள்.
- இதயப்பூர்வமாக வாழுங்கள்.
- சிரிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் முழுமையாகச் சிரியுங்கள்.
- டென்ஷன் வரும்போது, முழு விழிப்புணர்வோடு இருங்கள்.
நீங்கள் டென்ஷனாகுகிறீர்கள் என்பதைத் தெரிந்தே, டென்ஷனாகுங்கள். அப்போது உடலில், மனதில் நிகழும் மாற்றங்களை, முழுமையாக உணருங்கள். ஆசிரியரைப் பார்த்ததும் அடங்கும் வகுப்பறைச் சப்தம் போல, டென்ஷன் உங்களை விட்டு ஓடுவதைப் பார்ப்பீர்கள்.