மனிதன் மலர
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நுனி நாக்கில் ஆங்கிலம்... கநकச்சிதமான உடைகள்... கையில் நிறையப் பணம்... நவநாகரிகக் கலாச்சாரம் சௌகரியமான வாழ்க்கை.
இவற்றைக் கொண்டு மனிதன் முன்னேறிவிட்டான் என்று சொல்லலாமா? எதிர்பார்த்ததை மனிதன் அடைந்துவிட்டான் என அறிவிக்கலாமா?
கேள்விக்குப் பதிலாய் ஒரு கதை - விலங்குகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு ஆராய்ச்சியாளர் ஆப்பிரிக்கக் காட்டில் நரமாமிசம் உண்ணும் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை விருந்து படைக்க, காட்டுக்குள் கூச்சலோடு, அந்தக் கும்பல் தலைவனிடம் இழுத்து சென்றது.
தலைவருக்கு அருகிலேயே, தலைமுடி சரியாக வெட்டி, நாகரிக மனிதர் போன்று உடையணிந்த ஆப்பிரிக்கர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். ஆராய்ச்சியாளருக்கு நெஞ்சோரத்தில் நம்பிக்கை பிறந்தது.
வெளிவேஷம் மாறுவது
சாதாரண மன மாற்றத்தை
த்தான் ஏற்படுத்தும்.
குணமாற்றத்தை
'இவருக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால், கெஞ்சிக் கூத்தாடித் தப்பித்து விடலாமே...' என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ஆக்ஸ்போர்டு பல்கலextendedகத்தில் படித்தவர் போல ஆங்கிலத்தில் அந்த ஆப்பிரிக்கர் கேட்டார். "உன் கடைசி ஆசை என்ன? சொல். முடிந்தால் நிறைவேற்றி வைக்கிறேன். இங்கு இருக்கிறவர்களுக்கு பார்மாலிட்டீஸ் எல்லாம் தெரியாது."
ஆராய்ச்சியாளருக்கு பயத்தை மீறிக்கோபம் வந்தது. "பேசுவதிலிருந்து நீ பல்கலைக்கழக படிப்பு முடித்தவன் என்று தெரிகிறது. நாகரிக வாசலில் வாழ்ந்திருந்தும், அந்த வாழ்க்கை உன்னிடம் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவே இல்லையா?" என வெகுண்டு கேட்டார்.
ஆப்பிரிக்கர், "என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்? நான் எவ்வளவு மாறிவிட்டேன் தெரியுமா,? இவர்களைப் போன்று நான் அநாகரிகமாக நடந்துகொள்வதில்லை. இப்பக்கூட, உன்னை வறுத்த பின்பு, நான் உன்னைத் தட்டிலிட்டு கத்தி, போர்க், ஸ்பூன் பயன்படுத்தித்தான் சாப்பிடுவேன்! விரல்களைப் பயன்படுத்தவே மாட்டேன். நான் நிறைய மாறிவிட்டேன்," என்றாராம்.
நாகரிகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதர்கள் மாறுவதற்கும், நாகரிக பூச்சுக்கும் சம்பந்தமேயில்லை. மனிதர்கள் மாறவேண்டும் என்பதைவிட, மனிதர்கள் மலர வேண்டும் என்பதுதான் சாலச்சிறந்தது.
ஜருதிஸ்ட்ராவிடம் ஆசீர்வாதம் பெற, மிகத் தாழ்மையோடு, தாழ்ந்த குரலில், பவ்யமாக அவர்காலில், விழுந்து நமஸ்கரம் செய்தார் பக்தர் ஒருவர்.
"எளிமையாய் இருக்குமளவுக்குத் தகுதி பெற்றவனல்ல நீ. நடிக்காதே. கடைசியில் ஏமாந்து போவது நீயாகத்தானிருக்கும். வெளிவேஷம், உள் உலக விஷம்," என்றார் ஜருதிஸ்ட்ரர்.
உடைநடை பாவனையில் சிறு மாற்றம் செய்வது எளிது. இதனால், அதிகபட்சம் வெளிவேஷம் மாறலாம்.
வெளிவேஷம் மாறுவது சாதாரண மன மாற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.
குணமாற்றத்தை ஏற்படுத்தாது.

""மனம் மாற மனிதர் மாறுவார்!
குணம் மாற மனிதரே மலர்வார்,"
என்ற ஜப்பானிய பொன்மொழி,
ஒரு ஞான வெளிப்பாடு.
மனமாற்றத்தின் பலன் வரையறைக்குட்பட்டது.
ஒருவர், தம் வாழ்நாளில் சந்தித்துத் தடுமாறிய சூழ்நிலைகளை, மீண்டும் சந்தித்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்ற பக்குவத்தை மட்டுமே மனமாற்றத்தால் தரமுடியும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், வாழ்க்கை எப்போதுமே புதுப்புதுச் சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும்.
அதனால்தான், பலர், நாகரிகம், சௌகரியம், சொத்து, இவற்றின் உச்சிக்குப் போனபின்பு கூட, நிம்மதியின் வாசல் கதவைக்கூடத் திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
வெறும் மன மாற்றம் வேலைக்காகாது!
"மனம் மாற மனிதர் மாறுவார்! குணம் மாற மனிதரே மலர்வார்," என்ற ஜப்பானிய பொன்மொழி, ஒரு ஞான வெளிப்பாடு.
குணமாற்றம் பெற்றவருக்குள், வாழ்வின் எந்தவொரு சூழ்நிலையையும் எளிதாய் அணுகும் பக்குவம் பிறக்கும்.
மேலை நாட்டுச் சிந்தனையாளர்கள், எப்போதுமே, மனம், எண்ணம் போன்ற மூளை ரீதியான அணுகுமுறைகளைத்தான் வலியுறுத்துகிறார்கள். இதன் பாதிப்புதான் இன்று உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது.
இன்றைய மனிதருக்கு, குணமாற்றம், விழிப்புணர்வு, ஆனந்தம் போன்ற இதய ரீதியான அணுகுமுறைகள்தான் அவசியம் தேவை.
மூளை ரீதியான அணுகுமுறையால் பர்சனாலிட்டியில் (Persnolity) வேண்டுமானால் சில மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.
குணமாற்றம் பெற்றவருக்குள்,
வாழ்வின் எந்தவொரு
சூழ்நிலையையும் எளிதாய்
அணுகும் பக்குவம் பிறக்கும்.
வியாபாரம் நன்றாகச் செய்வது எப்படி? மேடைப்பேச்சால் மனிதர்களைக் கவர்வது எப்படி? புதிய மனிதர்களைக் கவர்வது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடலாம்.
ஆனால், இவற்றால் மனிதரின் நியாயமான தாகங்கள் தீர்க்கப்படுமா? என்றால், "இல்லை," என்றே குணநல ஆராய்ச்சியாளர்கள் (ஞ௹டிணஞீ ஆணீஞீதூ ட்ஞுளீடிஞிடிணது ண்ஞிடிதுணணாடிண்ண) சொல்கிறார்கள்.
தாகங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் பர்ஸ்னாலிட்டியைத் (கஞுணூண்ணிணச்ச்டீணூதூ) தாண்டிய ஒவ்வொரு மனிதரின் தனித்துவம் (ஜண ளீடிதிடிளீதீச்டீடீணூதூ) மலரவேண்டும்.
"இவ்வளவு ருசித்துச் சாப்பிடுகிறீர்களே, அப்படி என்ன சாப்பிடுகிறீர்கள்," என ஜென்ஞானி ஒருவரிடம் கேட்கப்பட்டது.
அவர், "அமிர்தம்," என்றார்.
ஆச்சரியப்பட்டவர் அமிர்தத்தை காணும் ஆவலில், அமிர்தக் கோப்பையைப் பிடுங்கிப் பார்த்தார். பாதிக் கோப்பையளவுக்கு நீர் இருந்தது!
ஒரு ரோஜா மலரை... இளம் மாலைத் தென்றலை... பௌர்ணமி முழுநிலவை...
சாதாரண மனிதர் இரசிப்பதற்கும், ஒரு கவிஞர் இரசிப்பதற்குமே நிறைய வித்தியாசம் உண்டு. ஞானியின் உணர்வனுபவம் நமது கற்பனைத் திறனின் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது.
உங்களின் உணர்வு ரீதியான அணுகுமுறை அதிகமாக... அதிகமாக, உங்களைச் சுற்றி மகிழ்ச்சி தானாய் அதிகரிப்பதை உணர்வீர்கள்.
மனமாற்றம் போதாது. தனித்துவம் மலர வேண்டும். உணர்வு ரீதியாக வாழ்வை அணுக ஆரம்பியுங்கள். மலர்வீர்கள்.
உணர்வு ரீதியான அணுகுமுறை, நீரைக்கூட அமிர்தமாக்கும். நீங்கள் மலர, உங்களின் குணம் மாற, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ஆழமாக, உணர்வுப்பூர்வமாக அனுபவியுங்கள்.
தியான முதிர்ச்சியின் முக்கியமான வெளிப்பாடு, உணர்வு ரீதியாக, உணர்வுப் பூர்வமாக வாழ்தல். உணர்வுப்பூர்வமாக வாழ ஆரம்பியுங்கள். தியானம் நிகழும்.