KAILASA Library/மனதைத் திற/உங்களைSign in
மனதைத் திற

உங்களை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • 'ராஜாக்களுக்கானது ஆன்மீகம்' என ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்களே...

அது விவாதத்திற்கு அப்பாற்பட்ட அறிவிப்பு. வரலாற்றுப் பூர்வமான உண்மையும் கூட!

  • ஏன் அப்படி?

ஆனந்தம் Ultimate luxury. அது சுகங்களுக்கெல்லாம் சுகம். அது சொர்க்கத்தைத் தாண்டிய நிலை. எனவே, தம் வாழ்வில் எல்லாச் சுகங்களையும் கடந்த மனிதரால்தான், ஆனந்தத்திற்கு அழைப்பு விட முடியும்.

  • சராசரி மனிதர்களுக்கானது அல்ல ஆன்மீகம் என்றால்... எதற்காக எல்லோருக்கும் தியானங்கள் சொல்லித் தருகிறீர்கள்?

நீங்களும் ராஜாக்களாக வேண்டும் என்பதற்காக!

  • அப்படியா!

ஐம்புலன்களுக்கு
அதிபதியான மறு
கணத்திலிருந்து...
யாராயிருந்தாலும் அவர்
ராஜாதி ராஜாவே!

ஆம் வெளியுலகில் தாண்டப்பட
வேண்டியவை தாண்டப்படாத வரை,
உள்ளுலகில் நுழையக்கூட முடியாது.

  • யார் ராஜா? யார் அடிமை?

ஐம்புலன்களுக்கு அடிமையாய் உள்ள
வரை... அவர் ராஜாவாக வெளியுலகில்
வாழ்ந்தாலும் நிஜத்தில் அடிமையே!

ஐம்புலன்களுக்கு அதிபதியான மறு கணத்திலிருந்து... யாராயிருந்தாலும் அவர் ராஜாதி ராஜாவே!

  • பெண்கள் பூஜைகள் செய்யலாமா?

ஆண் உடலில் வாழும் உயிருக்கு, பூஜைகள் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபட எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித உயிருக்கும் உண்டு! உடலால், உரிமையை தடுக்கக் கூடாது.

  • குழப்பம்?

'தெளிவடைய ஆரம்பித்திருக்கிறீர்கள்' என்பதன் அறிகுறி.

  • அப்படியா...?

மந்தமாயிருக்கும்போதும், மதியூகமாய் செயல்படும் போதும், குழப்பம் வராது.

மந்தத்திலிருந்து மதியூகம் நோக்கி உங்களின் குணம் நகர்கையில்... நீங்கள் சந்திப்பதுதான் 'குழப்பம்' என்னும் படிக்கட்டு!

  • குழப்பத்துக்குத் தீர்வு?

குழப்புவதைக் குழப்புங்கள்.

  • அப்படியென்றால்...

குழப்பம் உருவாகக் காரணமாக இருப்பதை, மனத்துக்குள் குறுக்கு விசாரணை செய்யுங்கள். குழப்புவது குழம்பிப்போகும்!

  • உறக்கம், மரணம் இரண்டிலும் ஒற்றுமைகள் பல உள்ளதே?

உறக்கம் குறுகிய மரணம்!

மரணம் நீண்ட உறக்கம்!

வித்தியாசம் காலத்திற்குட்பட்டது.

Sadhguru portrait

பெண்கள் பூஜைகள் செய்யலாமா?

ஆண் உடலில் வாழும் உயிருக்கு,
பூஜைகள் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபட
எவ்வளவு உரிமைகள் இருக்கிறதோ... அதே
உரிமைகள் பெண் உடலில் வாழும் மனித
உயிருக்கும் உண்டு!

  • அப்படியானால் உறக்கமும் மரணமும் ஒன்றா?

ஆம்! உறக்கம் ஒரு நாளுக்கும், இன்னொரு நாளுக்கும் இடைப்பட்ட மரணம்.

மரணம் ஒரு பிறவிக்கும், இன்னொரு பிறவிக்கும் இடைப்பட்ட உறக்கம்.

  • பாசம்?

ஒரு வித வடிவம்.

  • வெறுப்பு?

ஒரு வித மனப் பிடிப்பு.

  • அதெப்படி பிடிப்பாகும்...

இல்லாவிட்டால், இவர், “என் வெறுப்பிற்குரியவர்,” எனக் கதை சொல்லி, அவரை அடிக்கடி நினைத்துக் கொண்டேயிருப்பீர்களா... வெறுப்பு என்ற பெயரில்!

  • ஏன் அப்படிச் செய்கிறோம்?

நம் மனத்துக்கு பிடிக்காத ஒன்றை, அவர் செய்துவிட்டாலும், அவர் மீதான பாசம் இன்னும் வாழ்கிறது. அந்த மனப்பிடிப்புதான், வெறுப்பாக வெளிப்படுகிறது.

  • அப்படியென்றால், வெறுப்பும் பாசமும் ஒன்றா?

ஆம். இரண்டும் ‘ஏக்கம்’ எனும் ஒரு விதையில் இருந்து முளைத்த இரண்டு கிளைகள்.

  • வெறுப்பு, பாசம், அன்பு, இவற்றின் தொடர்பு என்ன?

அன்பு என்ற மலர் இதயத்தில் மலராதவரை, பாசமும், வெறுப்பும் சம அளவில் இருந்துகொண்டேயிருக்கும். அன்பு மலரட்டும்.

வெறுப்பு, பாசம், அன்பு, இவற்றின் தொடர்பு என்ன?

அன்பு என்ற மலர் இதயத்தில்
மலராதவரை, பாசமும்,
வெறுப்பும் சம அளவில்
இருந்துகொண்டேயிருக்கும்.

எனக்குத் தியானமார்க்கம் எந்த வகையில் உதவும்?

  • ஷேக் முகமது, நுங்கம்பாக்கம்

நீங்கள் யார்? ஏன் நாம் நினைத்தபடி வாழ்வும் உறவுகளும் அமையவில்லை? நினைப்பதை நிஜமாக்குவது எப்படி? உள்ளுக்குள்ளிருக்கும் அதிசயங்கள் எவ்வளவு?

ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் அடைவது எப்படி? எனும் வகைவகையான கேள்விகளுக்கு, பதிலும், வழியும், தீர்வும் ஒன்றாய்த் தந்திடும் ஒரே மார்க்கம் தியான மார்க்கம்.