II. ஆனந்த காற்று
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கடற்கரை எப்போதும் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். கடலில், அலைகள் ஒவ்வொன்றும், புதிய மண்ணை எடுத்து வருகிறது, பழைய மண்ணை எடுத்துச் செல்கிறது. மீண்டும் மண்ணை எடுத்துவரும், மீண்டும் எடுத்துச் செல்லும்.
இந்த உண்மையை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் எனும் கரையில், மனம் எனும் இடத்திலிருந்து எழும் இனிமையான எண்ணம் உள்ளே வரும், மீண்டும் வெளியில் செல்லும்.
மீண்டும் மீண்டும் வெளியில் செல்லும். மீண்டும் மீண்டும் உள்ளே வரும்.
தென்றல் காற்று வீசிக்கொண்டேயிருக்கும். ஆனந்தமயமாக இருந்து கொண்டேயிருக்கும். புயல் மையம் கொள்ளாமல் இருக்க, காற்றின் வேகத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டால் போதும். அதற்கான நுட்பம்தான் தியானம்.
உங்கள் உடல் எனும்
கரையில், மனம் எனும்
இடத்திலிருந்து எழும்
இனிமையான எண்ணம்
உள்ளே வரும், மீண்டும்
காற்றின் மற்றொரு குணாதிசயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நம் மூக்கில் மோதி, முகத்தை சுற்றிச்சுற்றி வரும் காற்றின் வெட்பம், சற்று அதிகமானாலும் தலைக்கு மேல் இருக்கும் கூரை நோக்கி செல்லத் தொடங்கிவிடும். அதே காற்றின் வெட்பம், சற்றுக் குறைந்தாலும், கீழ்நோக்கி, தரைநோக்கி வரத் தொடங்கிவிடும்.
வெப்பம் அதிகமானால், காற்று மேல்நோக்கிச் செல்லும். வெப்பம் குறைந்தால், கீழ்நோக்கி வரும். அதேபோன்று, காற்றுக்கு இணையாக, நம்முள் தொடர்ந்து பொங்கிக்கொண்டிருக்கும் சக்தியின் உஷ்ணம், அதிகமாக அதிகமாக, மேல் நோக்கி, கடவுள் நிலை நோக்கி, உயரத்தொடங்கும்.
சக்தியின் வெப்பம் குறையத் தொடங்கினால், கீழ்நோக்கி, உலகம் நோக்கி, வேதனை நோக்கி இறங்க ஆரம்பிக்கும். இவை இரண்டிலும் இல்லையென்றால், வெறுமனே, காற்று மூக்கின் வழியாக உள்வரும். மூக்கின் வழியாக வெளியே செல்லும். இதற்கு மட்டும்தான் அது உதவும். வேறு எதற்கும் உதவாது.
ஒவ்வொருவருக்குள்ளும் ஞானியுடைய சக்தியிருந்தாலும், அந்த சக்தியை, சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கும், இரண்டு மூன்று வேலைகளைச் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.
ஒரு வைரக் கத்தியை வைத்து, வைரத்தையும் வெட்டலாம். வெங்காயத்தையும் நறுக்கலாம்.
இவ்வளவு சக்தியை வைத்துக்கொண்டு, நாம் சாதாரண வெப்பத்தில், உஷ்ணத்தில் வைத்திருப்பது, வைரத்தை வைத்து வெங்காயத்தை வெட்டும் முயற்சிதான்.
செய்யவேண்டியது ஒன்றுமே இல்லை.
காற்றின் உஷ்ணத்தை அதிகப்படுத்துவதுதான். உள்ளுலக உஷ்ணத்தை அதிகப்படுத்தினால், சக்தி நேராக மேல்நோக்கிச் செல்லத் தொடங்கும்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஞானியுடைய
சக்தியிருந்தாலும், அந்த சக்தியை, சாதாரண
வாழ்க்கையை வாழ்வதற்கும், இரண்டு மூன்று
வேலைகளைச் செய்வதற்கு மட்டும்
பயன்படுத்துகிறீர்கள்.
மேல்நோக்கி, கடவுள்நிலை நோக்கி, சொர்க்கம் நோக்கி, சொர்க்கம் தாண்டிய வானம் நோக்கி, வானம் தாண்டிய பிரபஞ்சம் நோக்கி, பிரபஞ்சம் தாண்டிய மூலம் நோக்கிச் செல்லத் தொடங்கிவிடும். அது எல்லையற்ற முடிவில் சென்று கலக்கும் வரையிலும், அந்த ஆனந்த எல்லையைத் தொடரும் வரையிலும் பயணித்துச் செல்ல முடியும்.
சக்தியின் உஷ்ணத்தை உங்களுக்குள் உருவாக்குவதற்கான தொழில் நுட்பத்திற்கான பெயர்தான் ஞானம்.
ஞானம் உங்களுக்குள் நிகழ்வதற்கு, தொடர்ந்து வாழ்க்கையைப் பற்றியும், உங்களைப் பற்றியும், உலகைப் பற்றியும் எளிதாக உணர்ந்துகொள்ள, மீண்டும் மீண்டும் அதற்காக உருவாகும் அவதாரங்களும், ஞானிகளும் சொல்லும் ஞானக் கருத்துகளையும் உள்ளுக்குள் நுழைய அனுமதியுங்கள்.
அந்த ஞானக் கருத்துக்களும், அவதார சிந்தனைகளும், வாழ்வியல் சூத்திரங்களும், உங்கள் உள்ளுலக சக்தியின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். நீங்கள் மேல்நோக்கி எழுவீர்கள்.
ஆக, தொடர வேண்டியதைத் தொடர்வீர்கள். விடவேண்டியதை விடுவீர்கள். அடைய வேண்டியதை அடைவீர்கள். ஆனந்தம் நித்யானந்தமாக மாறும்.
நான் வேலைக்குச் செல்லும் பெண். நானும் என் தோழரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால், இப்போது என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய நட்பைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் நட்பை இழந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. நட்புக்காக திருமணம் செய்துகொள்ளலாமா? எனக்கு உதவுங்களேன்.
-கீர்த்தி, புதுவை
நட்புக்காக மட்டுமே திருமணம் செய்தால், நட்பை இழக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற முடிவுகள் சுதந்திரமாக வாழ விரும்புபவர், காட்டுக்குள் நுழைவதற்குச் சமம்.
காட்டின் எந்தத் திருப்பத்தில் வேண்டுமானாலும் புலி வரலாம், யானை வரலாம், சிங்கம் வரலாம். அதேபோல்தான், வாழ்க்கையும்.
உண்மையில் நட்பு என்பது காமம், காதல், பாசம் ஆகியவற்றைக் கடந்த நான்காவது நிலையில் இருக்கக் கூடியது.
ஏற்கெனவே, நான்காவது நிலையில் இருக்கும் நீங்கள், அதைவிட்டு, முதல் நிலைக்குச் செல்வதால் பயன் என்ன?
நட்பைத் தொடர, நட்புதான் அவசியம். திருமணம் செய்துகொள்வதற்காக நட்பு செய்யலாம். நட்பு வருவதற்காக திருமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. நட்பு, 'சுதந்திரம்' அளிக்க வேண்டும். கட்டிப்போடக்கூடாது.
அப்படிக் கட்டிப்போட முயற்சித்தால், அது நட்பில்லை... ஆராய்ந்து பாருங்கள்.