I. ஆனந்த காற்று
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தென்றல் காற்று வீசினால்...
"ஆஹா! என்ன இதமாக இருக்கிறது. எனக்குச் சாப்பாடுகூட வேண்டாம். நான் இங்கேயே இருக்கிறேனே, ப்ளீஸ்," என்று வருடும் தென்றல் காற்றைவிட்டு எழுந்துவர மனமில்லாமல், வீட்டிற்குள்கூடச் செல்ல மாட்டோம். அதே இடத்தில் அமர்ந்திருப்போம்.
அதே காற்று, புயலாக வீசினால்...
"ஐய்யோ! என்ன பாதிப்பு வருமோ? எப்போ கரையைக் கடக்குமோ?" என்ற எண்ணம்தான் முதலில் வரும்.
காற்றை ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் காற்றின் குணாதிசயத்தை புரிந்து கொள்வீர்கள். சாதாரண காற்றுதான், ஆனால், அந்தக் காற்று வேகமாக வீசினால்,
நானும் அதே ஆனந்த
சக்திதான். நீங்களும்
அதே ஆனந்த சக்திதான்
அது புயல். அதே காற்று கொஞ்சம் சாதாரணமாக
வீசினால் அது ஆடிக் காற்று. அதே காற்று
இன்னும் கொஞ்சம் குறைவாக வீசினால் அது
தென்றல். ஆனால், மூன்றுமே காற்றுதான்.
அதனால்தான் ஞானிகள் "நீங்களும், நானும் ஒன்று," என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். "நானும் அதே ஆனந்த சக்திதான். நீங்களும் அதே ஆனந்த சக்திதான்," என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.
காலம் காலமாக, எல்லா ஞானிகளும், இந்த ஒரு உண்மையைத்தான் பல வழிகளில் உலகிற்கு வழங்கிவருகின்றார்கள். ஆனால், மனிதர்கள் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து துக்கமயமாக இருக்கிறார்கள்.
சுபாவத்தாலே, தாங்கள் துக்கமயமானவர்கள் என்று நம்புகிறார்கள். அது தான் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம் - அவர்களுக்குள்ளிருக்கும் புயல் காற்று.
அவர்களுக்குள்ளும், ஞானிக்குள் இருக்கும் அதே சக்திதான் இருக்கிறது. ஆனால், வேகமாகப் புயல் போல் வீசுகிறது.
கோபத்தோடும், வேதனையோடும், ஆக்ரோஷத்தோடும் இருக்கிறார்கள். அதே காற்று, இதமாக மிதமாக வீச ஆரம்பித்துவிட்டால், முரடனும் இனிமையான மனிதராக மாறிவிடுவார்.
இன்னும் கொஞ்சம் குறைந்து, இன்னும் கொஞ்சம் வருடி, இன்னும் கொஞ்சம் பதமாக, இன்னும் கொஞ்சம் அன்பாக வந்தால், "அடடா! காற்று நம் கூடவேதான் இருக்கிறதா?!" என்று சொல்லக்கூடிய தென்றல் காற்றான ஞானியாக மாறிவிடமுடியும்.
காற்றின் குணாதிசயத்தை மட்டும், ஒரு மனிதர் தியானம் செய்தால் போதும், ஞானி ஆகிவிடலாம்.
காற்று அதன் வேகத்தை அதிகரித்தால், புயல். அதே காற்று வேகத்தைக் குறைத்தால், தென்றல்.

இனிமையான உணர்வும், இனிமையான அதிர்வும், ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உடலையும், மனத்தையும், மற்ற அனைத்தையும், ஆரோக்கியமான நிலையில் இருக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
அதேபோன்றுதான், உங்களுக்கு உள்ளிருந்து பொங்கும் சக்தியும். உள்ளிருந்து வரக்கூடிய சக்தியை அநியாயத்திற்குக் கட்டுப்பாடில்லாமல் வெளியே வீசி எறிந்தால், எல்லா விதமான கெட்ட குணங்களும் வெளியே வரும்.
அதன் விளைவாக, மன ரீதியான, உடல் ரீதியான பிரச்சினைகளும் சேர்ந்து வெளியே வரும். அதே காற்று, அதே சக்தியை இதமாக இருக்கின்றபடி கட்டுப்பாட்டோடு பார்த்துக் கொள்வது சாத்தியமே.
பார்த்தீர்களென்றால், காற்றுக் கட்டுப்படுத்துகிறது என்றும் சொல்ல முடியாது. கட்டுப்படுத்தவில்லை என்றும் சொல்ல முடியாது. இருக்கின்ற இயல்புப்படி வர விட்டோமென்றால், அது உள்ளுக்குள் இனிமையான உணர்வுகளையும், இனிமையான அதிர்வுகளையும் உருவாக்கும்.
அந்த இனிமையான உணர்வும், இனிமையான அதிர்வும், ஆனந்த நிலையிலேயே உங்களை எப்போதும் இருக்க வைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், உடலையும், மனத்தையும், மற்ற அனைத்தையும், ஆரோக்கியமான நிலையில் இருக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
இரண்டு பேர் மோதிக்கொள்ளவேண்டும். ஓர் இடத்தில் விபத்து நடக்க வேண்டுமென்றால், அல்லது இரண்டு பொருள் மோதிக் கொள்ள வேண்டும். அதுபோன்றுதான் ஒரு சாதாரண மரமும், ஒரு சாதாரணக் கட்டிடமும் திடீரென்று வீசும் புயலுடன் மோதியதும் இடிந்து விழுகின்றது.
இரண்டு நபர்கள்கூட தேவையில்லை. ஒரே ஒரு காற்று, புயலாக ஊருக்குள் வேகமாக வீசினால் போதும், அந்த ஒரே ஒரு காற்று, ஊர் முழுக்க விபத்துகளை நிகழ்த்திவிடும்.
மொத்தமாக, அரைமணி நேரத்தில், அதிகபட்சமாக அந்த ஊரில் நான்கு விபத்துக்கள் நிகழ்ந்திருக்கலாம். அப்போதும் ஒரு விபத்து நிகழ்வதற்கு இரண்டு நபர்கள் தேவை. கார் விபத்து என்றால், ஒரு காருக்கு ஒரு நபராவது தேவை.
ஆனால், காற்று ஏற்கெனவே அங்கேயும்
இருக்கின்றது. கண்டிப்பாக இல்லாமலும்
இல்லை, மற்ற நேரங்களில் வீசாமலும் இல்லை.
ஆழ்ந்து பார்த்தீர்களென்றால் புரிந்து கொள்வீர்கள். காற்றும் இருக்கின்றது, கட்டிடமும் இருக்கின்றது. ஆனால் விபத்து நிகழ்வது இல்லை. எப்போது காற்று தன் வரம்பு மீறி, தன்மை மறந்து, கொடுமையாக வீசுகிறதோ அப்போது, ஊர் முழுக்க விபத்தை நிகழ்த்திவிடுகின்றது.
ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். நல்ல மனிதர்களைச் சுற்றி, தங்களுக்குள் இனிமையாக இருக்கும் மனிதர்களைச் சுற்றி இருப்பதற்கே, நமக்கு இனிமையாக, ஆனந்தமாக இருக்கும். அதனால்தான், ஞானிகளையும் நன்மை செய்யும் மனிதர்களையும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள். அந்த இனிமையான மனிதரைச் சுற்றி ஒன்றாகச் சேர்கிறார்கள்.
பொதுவாக, எந்த இடத்தில் தென்றல் காற்று வீசுகின்றதோ, அந்த இதமான தென்றலுக்காகவே அந்த இடத்தில் மக்கள் சேர்வார்கள்.
எந்த இடத்தில் புயல் காற்று வீசுகின்றதோ, அந்த இடத்தைவிட்டே மக்கள் ஓடி விடுவார்கள். ஆனால், பார்த்தீர்களென்றால், தென்றல் காற்றுக்கு இணையான காற்று, கடற்கரையில் வீசிக்கொண்டேயிருக்கும்.
கடற்கரையில் பார்த்தால், மக்கள் 'எறும்பு' போன்று சாரை சாரையாக போய்க் கொண்டிருப்பார்கள்.
அதே கடற்கரையில், ஒரு புயல் காற்று வீசப்போகிறது, கடல் நடுவிலே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது என்று சொன்னால் போதும், அருகில்கூடச் செல்ல மாட்டார்கள். அதேபோன்றுதான் நம்முடைய மனம், நம்முடைய உடல், நம்முடைய உயிர் எனும் மொத்த அமைப்பிற்குள் இருக்கிறோம்.

மனம் எனும் கடலுக்குள், உடல் எனும் கரைக்குள் இருக்கக்கூடிய சக்தி எனும் காற்று புயலாக மையங் கொள்ளத்தொடங்கினால், கடற்கரை அருகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
உடல் எனும் கரைக்குள் இருக்கக்கூடிய சக்தி எனும் காற்று, மனம் எனும் கடலுக்குள் புயலாக மையங் கொள்ளத்தொடங்கினால், கடற்கரை அருகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். இடத்தை விட்டே ஓடிப்போய் விடுவார்கள்.
ஏன், அருகாமையைக்கூட விரும்பமாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வேறு வழியேயில்லை, அவர்களோடு வியாபாரம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும் நான்கு ஐந்து பேர்மட்டுமே அவர்களோடு உறவு வைத்துக் கொள்வார்கள்.
அதற்குமேல், அவர்களால் இந்த உலகில் ஆனந்தமாக இருக்கவோ, எதையும் அனுபவிக்கவோ முடியாது.
கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது. புயல் மையம் கொண்டிருப்பதால், கடற்கரையில் தென்றல் இருக்காது. அதேபோன்றுதான் உள்ளுக்குள் இருக்கக்கூடிய சக்தியும்.
சக்தி தவறாக மையங்கொண்டிருந்தால், அந்த மனிதரைச் சுற்றி யாருமே இருக்க முடியாது.
அம்மனிதரைச் சுற்றி, ஆனந்தமும், நிதானமும், நிம்மதியும் இருக்காது. ஏனென்றால், இந்தத் தன்மையே தம்மை நோக்கிப் பிரச்சினைகளை இழுக்கும். விபத்துகளை ஈர்க்கும். எவ்வாறு ஒரு சுழல், தன் அருகில் வரும் படகை வேகத்து டன் இழுத்து விபத்தை உருவாக்குகின்றதோ, அதைப்போன்றுதான், அம்மனிதனின் மனதில் தவறாக மையம் கொண்டிருக்கும் சக்தியும்.
வெளியில் இருக்கும் சாதாரண நிகழ்வுகளைக்கூட, இயல்பாக நிகழக் கூடிய நிகழ்வுகளைக்கூட, அம்மனிதரை நோக்கி ஈர்த்து, விபத்துகளையும், சண்டைகளையும், நஷ்டங்களையும், துரோகங்களையும் உருவாக்கும்.
சக்தி தவறாக
மையங்கொண்டிருந்தால்,
அந்த மனிதரைச் சுற்றி
யாருமே இருக்க முடியாது.
"வாழ்க்கையில் சஞ்சலம், சபலம், தோல்வி, ஏமாற்றம் இதெல்லாம் யாருக்கு வரும் என்று பார்த்தீர்களென்றால், உள்ளுக்குள்ளிலிருக்கும் கடலில் சுழலை உருவாக்குபவர்களுக்குத்தான் வரும். புரிந்துகொள்ளுங்கள், சுழல் உருவாவதிலிருந்து நாம் விடுதலை பெற்றாலோ அல்லது அந்த இடத்தில் சக்தியைக் கட்டுப்பாடில்லாமல் பிரயோகப்படுத்துவதை நிறுத்தினாலும், கடல் அமைதியாகும். மனக்கடல் அமைதியானால் போதும். நீங்கள் ஒன்றும் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை. எப்போதும் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும். மக்கள் தேடி வந்து கொண்டேயிருப்பார்கள்.
மக்கள் வந்தாலும், வரா விட்டாலும், தென்றல் ஏற்கெனவே அங்கு இருக்கிறது. 24 மணிநேரமும், கடற்கரையில் தென்றல் வீசிக்கொண்டேயிருக்கிறது. அதுபோல, இருபத்துநான்கு மணிநேரமும், உங்கள் உடலும், மனமும் குதூகலமாக இருந்துகொண்டேயிருக்கும்.
ஒரு குப்பை இருக்கிறது. அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட் டால் நல்லது என்று நன்றாகத் தெரியும். தெரிந்தும் குப்பையை எடுத்துப் போட மாட்டேன். ஏன்? எது என்னைத் தடுக்கிறது?
- மாயா, சென்னை
மனதின் இயல்பே விரிந்து கொடுக்காத தன்மைதான். அதற்குப் பிடித்தவற்றை பிடித்துக் கொள்வதற்கு மட்டுமே தன் கையை விரிக்கும். மற்ற நேரங்களில் கையைக் கட்டி அமைதியாக இருக்கும். அதனால்தான் குப்பை எடுத்துப் போடுவது நல்லது என்று தெரிந்திருந்தும், உங்களால் அதைச் செய்ய முடியவில்லை.
ஒருவேளை, இந்த அசமந்த தன்மையை மீறி, உடலை அசைத்தீர்கள் என்றால், மனம் ஆடிப் போய்விடும். அது உருக்குலைய ஆரம்பித்து விடும்.
அசமந்தமா? ஆனந்தமா?
முடிவு செய்யுங்கள்.